சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| படுகாடுகிடத்தல் | செயலற்றுக்கிடத்தல் . |
| படுகாடுநிற்றல் | செயலற்றுக்கிடத்தல் . |
| படுகாயம் | உயிராபத்தான காயம் . |
| படுகாரம் | வெண்காரம் . |
| படுகால் | ஏணி ; படி ; மேகலை . |
| படுகிடங்கு | பெருங்குழி . |
| படுகிடை | தன் எண்ணம் நிறைவேறப் பிடிவாதமாகப் படுத்திருக்கை ; நோய் மிகுதியால் எழுந்திருக்கமுடியாத நிலை . |
| படுகிழவன் | மிக முதிர்ந்தவன் . |
| படுகுலைப்படுதல் | நெஞ்சில் அடியுண்டு விழுதல் . |
| படுகுலையடித்தல் | செயலறப்பண்ணுதல் . |
| படுகுழி | பெரும்குழி . |
| படுகை | ஆற்றோர நிலம் ; நீர்நிலை . |
| படுகொலை | கொடுங்கொலை . |
| படுசுட்டி | மிகுந்த புத்திக் கூர்மையுள்ளவர் ; மிகுந்த குறும்புத்தனமுள்ளவர் . |
| படுசூரணம் | மருந்துத்தூள் ; பேரழிவு . |
| படுசூல் | முதிர்ந்த கருப்பம் . |
| படுசூளை | வட்டமாய் அமைக்கப்படும் காளவாய் . |
| படுஞாயிறு | மறையும் சூரியன் ; மாலையில் உண்டாகி நடுநிசியில் நீங்கும் தலைநோய் . |
| படுத்தடி | முருட்டுத்தன்மை . |
| படுத்தநிலம் | தளப்படுத்திய பூமி . |
| படுத்தல் | செய்தல் ; நிலைபெறச்செய்தல் ; சேர்ப்பித்தல் ; வளர்த்தல் ; உடம்பிற் பூசுதல் ; அழித்தல் ; பரப்புதல் ; தளவரிசையிடுதல் ; ஒழித்தல் ; வீழச்செய்தல் ; எழுத்துகளின் ஒலியைத் தாழ்த்திக் கூறுதல் ; கிடத்தல் ; பறையறைதல் . |
| படுத்தலோசை | தாழ உச்சரிக்கப்படும் ஒலி . |
| படுத்துதல் | துன்பஞ்செய்தல் ; அடையச் செய்தல் ; உண்டாக்குதல் . |
| படுத்துவம் | வலிமை ; திறமை . |
| படுதம் | கூத்துவகை . |
| படுதல் | உண்டாதல் ; தோன்றுதல் ; உதித்தல் ; நிகழ்தல் ; மனத்தில் தோற்றுதல் ; பூத்தல் ; ஒன்றன்மீது ஒன்று உறுதல் ; மொய்த்தல் ; அகப்படுதல் ; புகுதல் ; பெய்தல் ; பெரிதாதல் ; மேன்மையடைதல் ; அழிதல் ; சாதல் ; மறைதல் ; புண்காய்தல் ; சாய்தல் ; வாடுதல் ; துன்பமடைதல் ; தொங்குதல் ; ஒலித்தல் ; பாய்தல் ; புதைக்கப்படுதல் ; உடன்படுதல் ; ஒத்தல் ; பொறுத்தல் ; முட்டுதல் . |
| படுதா | திரைச்சீலை ; மூடுசீலை ; ஒதுக்கிடம் . |
| படுநிலம் | நீரில்லா நிலம் ; விளையா நிலம் ; சுடுகாடு ; போர்க்களம் . |
| படுநீலி | பெருஞ்சாதனைக்காரி . |
| படுநுகம் | அரசபாரம் . |
| படுபழம் | முதிர்ந்த பழம் ; வஞ்சகன் . |
| படுபழி | கொடிய தீச்செயல் . |
| படுபனை | காய்க்கும் பனை . |
| படுபாடர் | விடாப்பிடியுடையவர் . |
| படுபாதகன் | மிகக்கொடியவன் . |
| படுபாவி | மிகக்கொடியவன் . |
| படுபுரளி | பெரும்பொய் . |
| படுபொய் | பெரும்பொய் . |
| படுபொருள் | புதையல் ; மிகுதியாய்த் தேடிய பொருள் ; நிகழ்வது . |
| படுமரம் | பட்டமரம் . |
| படுமலை | பாலை யாழ்த்திறவகை ; குறிஞ்சியாழ்த்திறவகை . |
| படுமலைப்பாலை | பாலை யாழ்த்திறவகை ; குறிஞ்சியாழ்த்திறவகை . |
| படுமுதலாக | தன்னடைவே . |
| படுமுறை | அபராதம் , ஒறுப்புப் பணம் . |
| படுமோசம் | முழுமோசம் ; பெருங்கேடு ; பெருந்தவறு . |
| படுவசை | பெருநிந்தனை . |
| படுவஞ்சனை | பெருமோசம் ; முழுதும் அழிகை . |
| படுவம் | சேற்றுநிலம் . |
| படுவன் | கள் விற்போன் ; ஒரு புண்கட்டிவகை ; கீரைவகை . |
| படுவான் | மேற்றிசை ; அழிவான் . |
| படுவி | கள் விற்பவள் ; கற்பில்லாதவள் ; குட்டையானவள் . |
| படுவை | தெப்பம் . |
| படை | சேனை ; அறுவகைப் படைகள் ; திரள் ; சுற்றம் ; ஆயுதம் ; கருவி ; சாதனம் ; காண்க : இரத்தினத்திரயம் ; முசுண்டி ; கலப்பை ; குதிரைக்கலணை ; யானைச்சூல் ; போர் ; கல் முதலியவற்றின் அடுக்கு ; செதிள் ; சமமாய்ப் பரப்புகை ; படுக்கை ; உறக்கம் ; மேகப்படை . |
| படை | (வி) உண்டாக்கு ; படைஎன் ஏவல் . |
| படைஊற்றம் | படைத்தேர்ச்சி . |
| படைக்கப்பல் | போர்க்கப்பல் . |
| படைக்கர்த்தா | படைத்தலைவர் . |
| படைக்கலக்கொட்டில் | போர்க்கருவிக்கூடம் . |
| படைக்கலத்தொழில் | ஆயுதங்களைக்கொண்டு போரிடுந் தொழில் . |
| படைக்கலம் | ஆயுதம் ; எறிபடை ; எஃகு . |
| படைக்கிழவன்சிறுக்கன் | காண்க : படையுள்படுவோன் . |
| படைக்குழப்பம் | படைவீரரின் குழப்பம் ; போர் வீரர் தலைவர்க்கடங்காது புரியும் கலகம் . |
| படைக்கோலம் | போர்க்கோலம் . |
| படைகூட்டுதல் | படைக்கு ஆள் திரட்டுதுல் . |
| படைச்சனம் | போர்வீரர் . |
| படைச்சாத்து | சேனைக்கூட்டம் . |
| படைச்சால் | உழவுசால் . |
| படைச்சிறுக்கன் | காண்க : படையுள்படுவோன் . |
| படைச்சிறுப்பிள்ளை | காண்க : படையுள்படுவோன் . |
| படைச்செருக்கு | படைவீரம் . |
| படைசாற்றுதல் | போருக்கழைத்தல் . |
| படைசெய்தல் | போர்புரிதல் . |
| படைஞர் | படைவீரர் . |
| படைத்தல் | உண்டாக்கல் ; பரிமாறுதல் ; நிவேதித்தல் ; சம்பாதித்தல் ; பெற்றிருத்தல் ; கலத்தல் ; அடித்தல் . |
| படைத்தலைவன் | சேனாபதி . |
|
|
|