சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பணக்காரன் | செல்வன் . |
| பணக்காரி | செல்வமிக்கவள் . |
| பணக்கொழுப்பு | செல்வச்செருக்கு . |
| பணச்சலுகை | செல்வச்செருக்கு . |
| பணத்தட்டு | பணமுடை . |
| பணதரம் | படத்தையுடைய பாம்பு . |
| பணதி | வேலைப்பாடு ; செயல் ; படைப்பு ; அணிகலன் ; கற்பனை . |
| பணப்பித்து | பணவாசை . |
| பணப்பேய் | பொருளாசை மிகுந்தவன் . |
| பணம் | பருமை ; ஒரு நாணயம் ; பொற்காசு ; வாணிகச் சரக்கு ; பொருள் ; விலை ; யானை நடத்தும் ஆயுதம் ; பந்தயம் ; பாம்பின் படம் ; பாம்பு ; இடங்கை வலங்கைப் பிரிவினர் ; வேலை ; வீடு ; பணையப்பொருள் . |
| பணமணி | நாகரத்தினம் . |
| பணமிடுக்கு | செல்வத்தாலான வலிமை . |
| பணமிதப்பு | செல்வமிகுதி . |
| பணமுடக்கம் | பணமில்லாக் குறைவு ; பணம் வட்டியின்றி வீணாகத் தங்குகை . |
| பணமுடிச்சு | பணக்கிழி . |
| பணமுடை | பணத்தட்டு . |
| பணயம் | ஈடாக வைத்த பொருள் ; விலை மகளுக்குக் கொடுக்குங்கூலி ; பந்தயப் பொருள் . |
| பணர் | மரக்கிளை ; அடர்ந்த கொம்பு . |
| பணவம் | தம்பட்டம் . |
| பணவன் | வேலைக்காரன் . |
| பணவிடை | அஞ்சல்வழி விடுக்கும் பணம் . |
| பணவெடை | நான்கு குன்றிமணி அல்லது அரைக்கால் வராகன் எடையுள்ள பொன்னிறை . |
| பணவை | பரண் ; கழுகு ; பேய் ; அளவு . |
| பணாங்கனை | விலைமகள் . |
| பணாடவி | பாம்புப் படத்தின் கூட்டம் . |
| பணாதரம் | காண்க : பணதரம் . |
| பணாமகுடம் | பாம்பின் படமுடி . |
| பணாமணி | நாகரத்தினம் ; மாணிக்கவகை . |
| பணி | செயல் ; தொழில் ; தொண்டு ; பணிகை ; பரக்கை ; பயன்தரும் வேலை ; நுகர்பொருள் ; அணிகலன் ; மலர்களால் அலங்கரிக்கை ; பட்டாடை ; தோற்கருவி ; வேலைப்பாடு ; வகுப்பு ; சொல் ; கட்டளை ; விதி ; வில்வித்தை முதலியவற்றைக் கற்பிக்குந் தொழில் ; ஈகை ; நாகம் ; தாழ்ச்சி . |
| பணி | (வி) தொழு , பணி , பணிஎன் ஏவல் . |
| பணிக்கம் | திருத்தம் ; தொழிலில் நேர்மை ; எச்சில் உமிழும் கலம் . |
| பணிக்களரி | தொழில் செய்யும் இடம் ; தொழிற்சாலை . |
| பணிக்கன் | ஆசாரியன் ; படைக்கலம் , கூத்து முதலியன பயிற்றுவோன் ; தலைமைக் கொற்றன் ; தச்சன் ; யானைப்பாகன் ; நாவிதர் தலைவன் ; நச்சுத்தீர்க்கும் மருத்துவன் ; பள்ளர்சாதி வகையான் ; சாராயங் காய்ச்சுகிறவன் . |
| பணிக்காயன் | ஊழியன் . |
| பணிக்காரன் | வேலையாள் . |
| பணிக்கு | தொழிலில் நேர்மை ; நல்ல உடற்கூறு ; விவரமான குறிப்பு ; சூழ்வினை . |
| பணிக்குதல் | பணித்தல் . |
| பணிக்கை | நேர்த்தியாய் முகமயிர் வெட்டுகை . |
| பணிக்கொட்டில் | தொழிற்சாலை . |
| பணிகாரம் | தின்பண்டவகை . |
| பணிகொள்ளுதல் | தொண்டனாக ஏற்றுக் கொள்ளுதல் . |
| பணிகோள் | வணக்கம் . |
| பணிசாரகன் | காண்க : பணிக்காரன் . |
| பணிசெய்வோன் | வேலை செய்பவன் ; திருமணம் , சாவு முதலிய காலங்களில் சங்கு அல்லது தாரை ஊதும் சாதியான் . |
| பணித்தட்டார் | பொற்கொல்லர் . |
| பணித்தல் | தாழ்த்துதல் ; குறைத்தல் ; மிதித்தல் ; அருளிச் செய்தல் ; ஆணையிடுதல் ; ஏவுதல் ; கொடுத்தல் . |
| பணித்தலைவன் | பாம்பரசனாகிய ஆதிசேடன் . |
| பணிதம் | பந்தயப் பொருள் . |
| பணிதல் | தாழ்தல் ; பெருமிதமின்றி அடங்குதல் ; இறங்குதல் ; பரத்தல் ; தாழ்ச்சியாதல் ; வணங்குதல் ; குறைதல் ; எளிமையாதல் ; உண்ணுதல் . |
| பணிதி | வேலை ; அணிகலன் ; அலங்கரிப்பு ; துதிக்கத்தக்கது ; செல்வச்செருக்கு ; சொல் . |
| பணிநர் | ஏவல் செய்வோர் . |
| பணிப்பகை | பாம்பின் பகையான கருடன் . |
| பணிப்படுத்துதல் | ஒப்பனைசெய்தல் ; செப்பனிடுதல் ; உண்டாக்குதல் ; வேலைசெய்தல் . |
| பணிப்பு | தணிவு ; ஏவல் . |
| பணிப்பெண் | குற்றேவல்மகள் . |
| பணிப்பொத்தி | துகில்வகை . |
| பணிப்பொன் | அணிகல வடிவான பொன் . |
| பணிபதம் | தாழ்ந்த சொல் . |
| பணிபோதல் | ஒரே செயலாயிருத்தல் ; தொழில் புரிதல் . |
| பணிமக்கள் | தொண்டுபுரிவோர் . |
| பணிமடங்குதல் | வேலைமுடிகை . |
| பணிமாறுதல் | இரட்டல் ; ஊதுதல் ; தொண்டு செய்தல் ; தொழில்மாறுதல் . |
| பணிமுடக்கம் | வேலைநிறுத்தம் . |
| பணிமூட்டு | தளவாடம் . |
| பணிமூப்பிமார் | தேவரடியார் . |
| பணிமொழி | தாழ்ந்த சொல் ; மென்மொழி ; பெண் ; கட்டளை . |
| பணியல் | வழிபாடு . |
| பணியார் | பகைவர் . |
| பணியாரம் | காண்க : பணிகாரம் . |
| பணியாளர் | வேலைக்காரர் . |
| பணியிறை | ஆதிசேடன் . |
| பணியினாக்கு | தண்ணீர்விட்டான்செடி . |
| பணியோள் | பணிப்பெண் . |
| பணிலம் | சங்கு ; வலம்புரிச்சங்கு ; சங்கினால் இயன்ற கைவளைவகை . |
| பணிவிடை | குற்றேவல் ; திருப்பணி ; வேலை ; கட்டளை . |
|
|
|