பணிவிடைக்காரன் முதல் - பதக்கம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பணிவிடைக்காரன் வேலையாள் ; தொழிலாளி ; கோயிற்பிள்ளை .
பணிவிளக்கு கோயில்விளக்குவகை .
பணிவு கீழ்ப்படிகை ; வணக்கம் ; குறை ; தாழ்விடம் .
பணினம் காண்க : பணாதரம் .
பணீசன் காண்க : பணியிறை .
பணை பருமை ; பெருமை ; மரக்கொம்பு ; மூங்கில் ; அரசமரம் ; மருதநிலம் ; வயல் ; நீர்நிலை ; குதிரை யானைகள் தங்குமிடம் ; விலங்கின் படுக்கை ; முரசு ; வாத்தியம் ; மருதநிலப்பறை ; உயரம் ; பரண் ; தவறுகை ; ஐந்து ஆண்டுகொண்ட காலவளவு ; சாணைக்கல் ; உலைக்களத்துப் பட்டடை ; யானைத்தந்தம் .
பணைத்தல் பருத்தல் ; செழித்தல் ; பிழைத்தல் .
பணையம் பந்தயப்பொருள் ; ஈடு ; காலணிவகை .
பணையவன் முரசறைவோன் .
பணையான் சாணைக்கல் செய்வோன் .
பத்தகேசரி கருப்பூரம் .
பத்தங்கெட்டவன் ஒழுக்கங்கெட்டவன் .
பத்தசாரம் காடி .
பத்ததி ஒழுங்கு ; ஆகமக் கிரியைக்கு வழி காட்டும் நூல் ; சொற்பொருள் ; வழி .
பத்தம் கட்டு ; உண்மை ; உணவு ; செய்நன்றியறிகை ; குவியல் ; உண்கலம் .
பத்தர் கடவுளன்புடையவர் , அடியார் ; அன்புடையார் ; வீரசைவரில் புலால் உண்ணாத வகுப்பினர் ; இருவினைப் பிணைப்புள்ள ஆன்மாக்கள் ; வணிகர்கள் ; தட்டார் பட்டப்பெயர்களுள் ஒன்று ; குடுக்கை ; தொட்டி ; மரத்தாலான நீர் இறைக்கும் கருவி ; குழி ; நார் உரித்தற்கு ஏற்ற பனைமட்டையின் ஓர் உறுப்பு .
பத்தராய்ப்பணிவார் தொகையடியாருள் சிவபிரானுக்கும் சிவனடியாருக்கும் தொண்டு புரியும் ஒரு சாரார் .
பத்தராவி பத்தர்களுக்கு உயிர்போன்ற திருமால் .
பத்தல் நீரிறைக்குங் கருவி ; தொட்டி ; குடுக்கை ; குழி ; நார் உரித்தற்கு ஏற்ற பனைமட்டையின் ஓர் உறுப்பு .
பக்தவற்சலன் அடியார்களிடம் பேரன்புள்ள கடவுள் .
பத்தனம் பட்டணம் .
பத்தா கணவன் ; துப்பு ; படிப்பணம் .
பத்தாசு படகு .
பத்தாசை நன்றியும் அன்பும் .
பத்தாம்பசலி காலத்திற்குப் பொருந்தாத பழங்கருத்து .
பத்தாயம் தானியம் முதலியன இட்டுவைக்கும் களஞ்சியம் ; பெரும்பெட்டகம் ; விலங்கு முதலியன அடைக்குங் கூண்டு ; எலி முதலியன பிடிக்கும் பொறி .
பத்தி வழிபாடு ; ஒழுக்கம் ; முறைமை ; வரிசை ; வகுப்பு ; பத்திரிகை முதலியவற்றின் நீளவாட்டுப் பகுதி ; அலங்கார வேலைப்பாடு ; யானையின் நடைவகை ; வீட்டிறப்பு ; தூணின் இடைவெளி ; பாத்தி ; நம்பிக்கை ; பக்தி ; படைத்தொகுதி .
பத்திக்கீற்று காண்க : தொய்யில் .
பத்திக்குறடு கோயிலுள் எழுப்பப்பட்டிருக்கும் திண்ணை .
பத்திசாரன் திருமழிசையாழ்வார் .
பத்திடை ஆயிரம் பலங்கொண்ட நிறுத்தலளவை .
பத்திநெறி பத்தியால் நற்கதியடையும் முறை .
பத்திபாய்தல் ஒளிவீசுதல் ; எதிரொளித்தல் .
பத்திமார்க்கம் காண்க : பத்திநெறி .
பத்திமாலை இடுப்புவரை தொங்குவதும் மணமக்கள் அணிவதுமான மாலை ; தாழ்வடம் .
பத்திமான் பத்திமிக்கோன் .
பத்திமுகம் பந்தல் அல்லது சுவரின் முன்பக்க நெற்றி .
பத்திமை தெய்வபத்தியுடைமை ; காதல் .
பத்தியம் மருந்துக்குத் தக்கவாறு உண்ணப்படும் உணவு ; இதம் ; கவனம் ; படிப்பணம் ; இலஞ்சம் ; காண்க : கடுக்காய் ; அவுரி ; பூவாது காய்க்கும் மரம் ; செய்யுள் .
பத்தியமுறித்தல் மருந்துப் பத்தியத்தைக் கெடுத்தல் ; குறித்த காலத்திற்கப்பால் பத்தியவுணவை நீக்குதல் .
பத்தியிறக்குதல் தாழ்வாரம் இறக்குதல் .
பத்தியுலாவுதல் கடவுள் ஊர்தியில் எழுந்தருளி உலாவருதல் ; வரிசையாயுலாவுதல் .
பத்திரகம் இலை ; இறகு ; சந்தனம் .
பத்திரகாளி கொற்றவை .
பத்திரப்படுத்துதல் காத்தல் ; காவலில் வைத்துப் பாதுகாத்தல் .
பத்திரப்பதிவு ஆவணத்தை அரசாங்கப் பதிவு செய்கை .
பத்திரம் இலை ; புத்தகத்தின் ஏடு ; இலை போன்ற தகடு ; ஓர் அணிகலன் ; சாசனம் ; திருமுகம் ; பூவிதழ் ; இறகு ; அம்பு ; சிறுவாள் ; அழகு ; அழகிய உருவம் ; கவனம் ; நன்மை ; பாதுகாப்பு ; நலம் ; யானைவகை ; மலை ; பீடத்திலுள்ள எழுதகவகை ; காண்க : பத்திரலிங்கம் ; குதிரைப்பந்தி ; நவ வருடத்துளொன்று ; காண்க : பத்திராச(த)னம் .
பத்திரலிங்கம் சைவாலயத்துப் பலிபீடம் .
பத்திரன் சிவன் ; வீரபத்திரன் ; காண்க : பாணபத்திரன் .
பத்திராகாரன் அழகிய வடிவினன் .
பத்திராங்கம் செஞ்சந்தனம் ; ஊமத்தை .
பத்திராசனம் அரியணை ; அவைத்தலைமை ; ஆசனவகை .
பத்திராதனம் அரியணை ; அவைத்தலைமை ; ஆசனவகை .
பத்திராதியர் இதழ்நடத்துந் தலைவர் .
பத்திராலாபனம் நலங்கூறுகை .
பத்திரி அம்பு ; பறவை ; சாதிபத்திரி ; இலை ; காளி ; கொத்தளம் ; காட்டுச்சாதி .
பத்திரிகை செய்தித்தாள் ; கடிதம் ; அச்சடித்ததாள் ; சாதனம் ; விளம்பரத்துண்டு ; இலை .
பத்திரை இரண்டு , ஏழு , பன்னிரண்டாந்திதிகள் ; காலவகை ; நற்பசு ; காளி ; கண்ணன் தேவியருள் ஒருத்தி .
பத்திரைகேள்வன் வீரபத்திரன் .
பத்திவிசுவாசம் திடமான நம்பிக்கை .
பத்திவைராக்கியம் தெய்வபத்தியில் திடமாயிருத்தல் .
பத்தினி கற்புடையாள் ; மனைவி .
பத்தினிக்கடவுள் கடவுளாகக் கருதப்பட்ட கண்ணகி .
பத்தினிக்கல் இறந்த கற்புடையாட்டியின் பொருட்டு நாட்டப்படுங் கல் .
பத்தினிப்பிள்ளை உரிமைப்பிள்ளை .
பத்து ஓர் எண் ; தசமிதிதி ; காண்க : பற்று ; வயல் ; கடவுள் , பெரியோர் முதலியோரிடத்து உள்ள பத்தி ; நாலாயிரப் பிரபந்தத்தில் பத்துப் பதிகம் கூடிய பகுதி ; சீட்டுக்கட்டில் பத்துக் குறியுள்ள சீட்டினம் .
பத்துக்காடு வயல்நிலம் ; திட்டமான புன்செய்த் தீர்வை .
பத்துக்காலோன் பத்துக்கால்களுடைய நண்டு .
பத்தும்பத்தாத முழுமையாக .
பத்துமாற்றுத்தங்கம் பத்தரைமாற்றுத்தங்கம் , உயர்ந்த தங்கம் .
பத்தூரம் பொன்னாங்காணிப்பூடு .
பத்தை சிறு துண்டு ; மண்ணோடுகூடிய பசும்புல் துண்டு ; குயவன் அறுக்குங் கருவி .
பத்தைகட்டுதல் ஒடிந்த எலும்பு கூடுவதற்கு மட்டை வைத்துக் கட்டுதல் ; பொய் மொழிகளால் பாசாங்கு செய்து குற்றத்தை மறைக்க முயலுதல் .
பதக்கணம் வலம்வருகை .
பதக்கம் சரடு முதலியவற்றில் கோக்கப்பட்டுத் தொங்கும் கழுத்தணிவகை .