சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பதக்கிரமம் | நடன நடைமுறை . |
| பதக்கு | இரண்டு மரக்கால் கொண்டது , இரண்டு குறுணி . |
| பதக்குப்பதக்கெனல் | அச்சக்குறிப்பு . |
| பதகம் | பறவை ; பாதகம் ; ஊர்த்தொகுதி . |
| பதகளித்தல் | பதறுதல் . |
| பதகன் | கொடும்பாவி ; கீழ்மகன் . |
| பதகி | கொடும்பாவி ; கீழ்மகள் . |
| பதங்கம் | பறவை ; விட்டில்பூச்சி ; பாதரசம் ; மருந்துச் சரக்குவகை ; சப்பங்கிமரம் . |
| பதங்கமம் | பறவை ; விட்டிற்பூச்சி . |
| பதங்கன் | சூரியன் . |
| பதங்கு | குழி ; ஓட்டுவரிசை ; பிளந்த பனையின் பாதி . |
| பதச்சாயை | மக்களின் நிழல் . |
| பதச்சேதம் | சீர் ; சொற்றொடரைத் தனித்தனி சொல்லாகப் பிரித்தல் . |
| பதசம் | பறவை ; சந்திரன் . |
| பதசாரம் | சொல்லின் பொருள்நயம் . |
| பதசாரி | நாட்டியத்திற் காலடியிடும் வகை . |
| பதசாலம் | மகளிர் அணியும் காலணிவகை . |
| பதஞ்செய்தல் | பதப்படுத்துதல் ; மென்மையாக்குதல் . |
| பதட்டம் | காண்க : பதற்றம் . |
| பதடி | பதர் ; உமி ; பயனின்மை ; வில் . |
| பதணம் | மதிலுள்மேடை ; மதில் . |
| பதத்திரம் | சிறகு . |
| பதத்திரி | பறவை . |
| பதநியாசம் | நடனத்தில் ஒழுங்குபெற அடிவைக்கும் முறை ; ஒரு பூண்டுவகை . |
| பதநீர் | புளிப்பு ஏறாதபடி சுண்ணாம்பு இடப்பட்ட கலயத்துள் இறக்கிய இனிப்புக் கள் ; பனஞ்சாறு . |
| பதநெகிழ்த்தல் | சொற்பிரித்தல் . |
| பதப்படுத்துதல் | பயன்படும்படி செய்தல் ; இணக்குதல் ; பக்குவப்படுத்துதல் . |
| பதப்படுதல் | பக்குவமாதல் ; பழுத்தல் . |
| பதப்பர் | வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்கோட்டை . |
| பதப்பாடு | பக்குவமாகை ; பழுக்கை ; மதிலுறுப்பு . |
| பதப்பிரயோசனம் | சொல்லின் பொருள்நயம் . |
| பதப்புணர்ச்சி | நிலைமொழியும் வருமொழியும் ஒன்றுபடுகை . |
| பதப்பேறு | காண்க : பதமுத்தி . |
| பதப்பொருள் | காண்க : பதவுரை . |
| பதபதெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; நெஞ்சு அடித்தற்குறிப்பு . |
| பதபாடம் | வேதவாக்கியங்களைப் பதம்பதமாக எடுத்தோதும் முறை . |
| பதபாதம் | காலடி . |
| பதபூர்த்தி | சாரியை . |
| பதம் | பக்குவம் ; உணவு , சோறு ; அவிழ் ; தண்ணீர் ; ஈரம் ; கள் ; அறுகம்புல் ; இளம்புல் ; இனிமை ; இன்பம் ; அழகு ; ஏற்ற சமயம் ; தகுதி ; பொழுது ; நாழிகை ; கூர்மை ; அடையாளம் ; அளவை ; பொருள் ; காவல் ; கொக்கு ; முயற்சி ; மாற்றுரு ; செய்யுளடி நாலிலொன்று ; பூரட்டாதிநாள் ; மொழி ; காண்க : பதபாடம் ; இடம் ; பதவி ; தெய்வபதவி ; வழி ; தரம் ; கால் ; வரிசை ; ஒளி ; இசைப்பாட்டுவகை . |
| பதம்பார்த்தல் | ஆய்வுசெய்தல் ; சுவையறிதல் ; செயலைத் தொடங்கமுன் ஆராய்ந்து பார்த்தல் ; விதையிட நிலஞ் சோதித்தல் . |
| பதமம் | சந்திரன் ; பறவை ; விட்டிற்பூச்சி . |
| பதமுடித்தல் | பகுபத உறுப்புக் கூறுதல் . |
| பதமுத்தி | பரமுத்திக்கும் கீழ்ப்பட்ட இந்திரன் முதலிய இறையவர் பதங்கள் . |
| பதமை | மென்மை ; மந்தகுணம் ; அமைதி ; மெல்லோசை ; இணக்கம் ; தாழ்மை . |
| பதயுகம் | இணையடிகள் . |
| பதர் | உள்ளீடு இல்லாத நெல் ; பயனின்மை ; பயனற்றவர் ; குற்றம் . |
| பதர்ச்சொல் | பொருளில்லாத சொல் . |
| பதர்த்தல் | பதராய்ப் போதல் . |
| பதரி | இலந்தைமரம ; காண்க : பதரிகாசிரமம் . |
| பதரிகாசிரமம் | இமயச்சாரலில் உள்ளதும் நாராயணர் தவம் புரிந்ததும் திருமாலுக்குச் சிறந்ததுமான தலம் . |
| பதலம் | பத்திரம் ; பாதுகாப்பு . |
| பதலை | சிறுமலை ; மலை ; மத்தளம் ; ஒருகட்பகுவாய்ப் பறை ; தாழி ; அலங்காரக் குடம் . |
| பதலைவங்கு | மலைக்குகை . |
| பதவம் | அறுகம்புல் . |
| பதவல் | குப்பை . |
| பதவாயுதம் | காண்க : காலாயுதம் . |
| பதவி | நிலை ; வழி ; புண்ணியவுலகம் ; நால்வகை வீட்டுநிலை ; நீர்மையுள்ளவன் . |
| பதவிசு | அமைதி . |
| பதவியடைதல் | கதியடைதல் ; உயர்நிலை அடைதல் . |
| பதவியது | சாந்தமானது ; மெல்லியது . |
| பதவு | காண்க : பதவல் ; புல் ; புற்கட்டு ; புன்மை ; அமைதி . |
| பதவுரை | செய்யுளில் சொல்லைப் பிரித்துப் பொருளுரைத்தல் . |
| பதவை | வழி ; குப்பை . |
| பதற்றம் | முன்பின் ஆராயாமல் விரைவுபடுதல் . |
| பதறுதல் | காண்க : பதற்றம் . |
| பதன் | பக்குவம் . |
| பதன்படுதல் | பக்குவமாதல் . |
| பதன்பதனெனல் | மனம் பரித்தவித்தற்குறிப்பு . |
| பதனம் | பத்திரம் ; பாதுகாப்பு ; மதிலுள் மேடை ; மதில் ; இறக்கம் ; தாழ்மை ; அமைதி ; கோள்களின் அட்சாம்சம் . |
| பதனழிதல் | பக்குவநிலை தவறுதல் . |
| பதனழிவு | பக்குவம் கெடுகை . |
| பதனி | காண்க : பதநீர் . |
| பதனிட்டதோல் | செப்பனிடப்பட்ட தோல் . |
| பதனிடுதல் | தோல் முதலியவற்றை மெதுவாக்குதல் . |
| பதாகம் | விருதுக்கொடி ; அபிநயத்துக்குரிய ஆண் கைகளுள் ஒன்று . |
|
|
|