பதாகன் முதல் - பதுமம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பதாகன் அரசன் ; கொடியுடையோன் .
பதாகினி படை .
பதாகை விருதுக்கொடி ; பெருங்கொடி ; இணையாவினைக்கைவகை ; அபிநயக்கைவகை .
பதாதி காலாட்படை ; ஒரு யானை , ஒருதேர் , ஒரு குதிரை , ஐந்து காலாள்கள்கொண்ட படைத் தொகுதி ; அமைதியின்மை .
பதாயுதம் காண்க : காலாயுதம் .
பதார்த்தம் சொற்பொருள் ; பொருள் ; சோறு ஒழிந்த கறி முதலிய உணவுப்பொருள் ; சொத்து ; திரவியம் முதலிய எழுவகைப் பொருள்கள் ; சைவசமய முப்பொருள் ; சமணசமய இருவகை மூலப்பொருள்கள் .
பதி நகரம் ; பதிகை ; நாற்று ; உறைவிடம் ; வீடு ; கோயில் ; குறிசொல்லும் இடம் ; ஊர் ; பூமி ; குதிரை ; தலைவன் ; கணவன் ; அரசன் ; மூத்தோன் ; குரு ; கடவுள் .
பதிக்கினி கணவனைக் கொன்றவள் .
பதிகம் பத்துச் செய்யுளால் முடியும் நூல் ; பாயிரம் ; நாற்று .
பதிகன் வழிப்போக்கன் ; காலாள் .
பதிசித்திரம் கோபுரப்பதுமை .
பதிசேவை கணவனுக்குச் செய்யும் தொண்டு .
பதிஞானம் கடவுளைப்பற்றிய அறிவு , இறையறிவு .
பதிஞானவாழ்வு பரம்பொருளோடு இரண்டறக் கலத்தலாகிய அனுபவம் .
பதிட்டித்தல் தொடங்குதல் .
பதிட்டை நிறுவுதல் , பிரதிட்டை ; தொடக்கம் .
பதித்தல் அழுத்துதல் ; மணி முதலியன இழைத்தல் ; பதியவைத்தல் ; குழியாக்குதல் ; தாழ்த்தல் ; எழுதல் ; அதிகாரம் கொடுத்தல் .
பதித்திரி உலைத்துருத்தி .
பதித்தெழுதுதல் அழுந்த எழுதுதல் ; மேலே இடம்விட்டுக் கீழே எழுதுதல் .
பதிதபாவனன் ஒழுக்கம் தவறியவரைத் தூயராக்கும் கடவுள் .
பதிதல் முத்திரை முதலியன அழுந்துதல் ; தாழந்திருத்தல் ; ஆழ்தல் ; ஊன்றுதல் ; நிலையாதல் ; தங்குதல் ; கோள் முதலியன இறங்குதல் ; விலை தணிதல் ; அதிகாரம் பெறுதல் ; பின்னிடுதல் .
பதிதன் சமய ஒழுக்கந் தவறினவன் .
பதிநிச்சயம் கடவுளின் இருப்பு அறிதல் .
பதிப்பு பதித்தல் ; நூல் அச்சிடுகை ; அச்சிடப்பட்ட நூல் .
பதிபக்தி கணவனிடம் கொண்டுள்ள அன்பு .
பதிபடை மறைந்துநிற்கும் சேனை .
பதிபோடுதல் பதுங்குதல் ; நாற்றுநடுதல் ; பதியம்போடுதல் .
பதிமினுக்கு இடத்தைத் துலக்குவதாகிய துடைப்பம் .
பதிமை பிரதிமை .
பதியம் நாற்று ; ஊன்றிநடுஞ் செடிகொடிகிளை முதலியன ; காண்க : இலைப்பாசி ; பதிகம் ; பாடல் ; பதிப்பது ; தெய்வத்தைப்பற்றிப் பெரும்பாலும் பத்துச் செய்யுளால் பாடப்படும் நூல்வகை .
பதியரி நாற்று .
பதியிலார் கணிகையர் .
பதியெழுதல் வலசைபோதல் ; பயத்தால் ஊரைவிட்டு ஓடிப்போதல் .
பதிரன் செவிடன் .
பதில் மாற்றம் ; விடை ; பதிலாக .
பதிலாள் பிரதியாக அமர்த்தும் ஆள் .
பதிலிப்பத்திரம் அதிகாரப்பத்திரம் .
பதிவிரதம் காண்க : பதிவிரதாதர்(ரு)மம் .
பதிவிரதமுல்லை கற்புக்கு அறிகுறியாக அணியும் முல்லை .
பதிவிரதாதர்மம் கற்புநெறி .
பதிவிரதாதருமம் கற்புநெறி .
பதிவிரதி கற்புடைய மனைவி .
பதிவிரதை கற்புடைய மனைவி .
பதிவிருத்தல் ஒளித்திருத்தல் .
பதிவு அழுந்துகை ; பள்ளம் ; விண்மீன்களின் சாய்வு ; பதுக்கம் ; தீர்மானிக்கப்பட்ட செலவு ; வழக்கம் ; கணக்குப் பதிகை ; மனம் ஊன்றுகை ; அமைதி ; விலைத்தணிவு ; பதியம் .
பதிவுவைத்தல் கணக்கிற் பதிதல் ; வாடிக்கை வைத்தல் .
பதிவைத்தல் நாற்றுப் பதித்தல் ; பதியம் போடுதல் .
பதிற்சீட்டு பதிலியாக வாங்கும் ஆவணத்தின் படி .
பதினாயிரம் பத்தாயிரம் .
பதினாலுலகம் மேலேழுலகமான பூலோகம் , புவலோகம் , சுவர்க்கலோகம் , சனலோகம் , தபோலோகம் , சத்தியலோகம் , மகாலோகம் , கீழேழுலகமான அதலம் ; விதலம் ; சுதலம் , தராதலம் , இரசாதலம் , மகாதலம் , பாதலம் .
பதினாறுபேறு புகழ் , கல்வி , வலிமை , வெற்றி , நன்மக்கள் , பொன் , நெல் , நல்லூழ் , நுகர்ச்சி , அறிவு , அழகு , பெருமை , இளமை , துணிவு , நோயின்மை , வாழ்நாள் என்பன .
பதினெட்டாம்பெருக்கு ஆடிமாதம் பதினெட்டாம் நாள் காவிரிப்பெருக்கு ; ஆடிப் பதினெட்டில் கொண்டாடும் விழா .
பதினென்கண்ணன் பதினெட்டுக் கண்களையுடைய முருகன் .
பதினெண்கணம் அமரர் , சித்தர் , அசுரர் , தைத்தியர் , கருடர் , கின்னரர் , நிருதர் , கிம்புருடர் , இயக்கர் , பூதர் , விஞ்சையர் , கந்தருவர் , அந்தரர் , பசாசர் , முனிவர் , உரகர்(நாகர்) , விண்ணோர் , மண்ணோர் ஆகியோர் .
பதினெண்கீழ்க்கணக்கு நாலடியார் , நான்மணிக்கடிகை , இன்னா நாற்பது , இனியவை நாற்பது , கார் நாற்பது , களவழி நாற்பது , ஐந்திணை ஐம்பது , ஐந்திணை எழுபது , திணைமொழி ஐம்பது , திணைமாலை நூற்றைம்பது , திருக்குறள் , திரிகடுகம் , ஆசாரக்கோவை , பழமொழி , சிறுபஞ்சமூலம் , முதுமொழிக்காஞ்சி , ஏலாதி , கைந்நிலை என்னும் பதினெட்டு நூல்கள் .
பதினென்குடிமக்கள் ஓடாவி(ஓடஞ்செய்பவர்) ,கன்னார் , குயவர் , கொல்லர் , கோவியர்(இடையர்) , ஓச்சர் , தச்சர் , தட்டார் , நாவிதர் ; பள்ளர் ; பாணர் ; பூமாலைக்காரர் ; எண்ணெய் வாணியர் , உப்புவாணியர் , இலைவாணியர் , வண்ணார் , வலையர் , வெட்டியான் ஆகிய குடிமக்கள் .
பதினெண்புராணம் மச்சம் , கூர்மம் , வராகம் , வாமனம் , பதுமம் , வைணவம் , பாகவதம் , பிரமம் , சைவம் , இலிங்கம் , பௌடிகம் , நாரதீயம் , காருடம் , பிரமகைவர்த்தம் , காந்தம் , மார்க்கண்டேயம் , ஆக்கினேயம் , பிரமாண்டம் என்பன .
பதினெண்மொழி பதினெண் நாட்டார்க்குரிய மொழியான அங்கம் , அருணம் , கலிங்கம் , காம்போசம் ; கொங்கணம் , கோசலம் , கௌசிகம் , சாவகம் , சிங்களம் , சிந்து , சீனம் , சோனகம் , திரவிடம் , துளுவம் , பப்பரம் , மகதம் , மராடம் , வங்கம் என்பன .
பதினோராடல் அல்லியம் , கொட்டி , குடை , குடம் , பாண்டரங்கம் , மல் , துடி , கடையம் , பேடு , மரக்கால் , பாவை என்னும் பதினொரு வகையான கூத்துகள் .
பதுக்கம் ஒளிப்பு ; கபடம் ; பதுங்குந்தன்மை ; மன்னிக்கை ; கண்ணி .
பதுக்காய் உள்ளான்குருவி ; பருத்துக் குள்ளமாய் உள்ளவன் .
பதுக்குதல் ஒளித்துவைத்தல் .
பதுக்கை கற்குவியல் ; இலைக்குவியல் ; மணற்குன்று ; சிறுதூறு ; பாறை .
பதுக்கைக்கடவுள் மணற்குன்றின் மேலுள்ள நடுகல் தெய்வம் .
பதுங்கலன் பின்னிற்பவன் ; கூச்சமுள்ளவன் .
பதுங்குதல் ஒளித்தல் ; பதிவிருத்தல் ; மறைதல் ; பின்னிற்றல் ; காண்க : பதுங்குபிடித்தல் .
பதுங்குபிடித்தல் மேல்தளத்துக்குச் சிறுகல் பாவுதல் .
பதுமகேசரம் புன்னைமரம் .
பதுமகோசிகம் தாமரைக்காய் உருவமாகக் கைகுவித்து ஐந்து விரலையும் அகல விரித்துக் காட்டும் இணையாவினைக்கைவகை .
பதுமநாபன் உந்தித் தாமரையோனாகிய திருமால் .
பதுமநிதி குபேரனது ஒன்பான் நிதியுள் ஒன்று .
பதுமபந்து சூரியன் ; தேனீ .
பதுமபீடத்தன் பிரமன் .
பதுமபீடம் தாமரை வடிவாகச் செய்யப்பட்ட இடம் .
பதுமம் தாமரை ; காண்க : பதுமரேகை ; பதினெண் புராணத்துள் ஒன்று ; காண்க : பதுமபீடம் ; பதுமநிதி ; ஆசனவகை ; முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று ; அபிநயத்துக்குரிய ஆண் கைகளுள் ஒன்று ; சோதிநாள் ; மாணிக்கவகை .