பதுமமணி முதல் - பயங்காளி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பதுமமணி தாமரைக்கொட்டை .
பதுமயோனி தாமரையில் பிறந்த பிரமன் .
பதுமராகம் மாணிக்கவகை .
பதுமரேகை ஒருவனது நற்பேற்றைக் குறிப்பதாகக் கருதுப்படும் தாமரை வடிவான கைக்கோடு .
பதுமவியூகம் தாமரை வடிவமாக வகுக்கப்பட்ட படையணி .
பதுமவீசம் தாமரைமணி .
பதுமன் பிரமன் ; எண்வகை நாகத்துள் ஒன்று .
பதுமாக்கன் தாமரை போன்ற கண்களையுடைய திருமால் .
பதுமாசனம் இரு கால்களையும் மடக்கி அமரும் தாமரை மலர்போன்ற இருக்கைநிலை .
பதுமாசனன் தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் .
பதுமாசனி தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் .
பதுமாசனை தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் .
பதுமாஞ்சலி இரு கையையும் தாமரைக்காய் உருவமாகக் கூட்டும் இணைக்கைவகை .
பதுமாவதி காண்க : பதுமாசனி(ளை) .
பதுமினி நால்வகைப் பெண்டிருள் உயர் இலக்கணம் உடையவள் .
பதுமுகம் காண்க : பதுமாசனம் ; நறும்பண்டவகை .
பதுமை திருமகள் ; காளி ; கற்பிற் சிறந்த சூரபன்மன் மனைவி ; திருமகள் தோன்றிய பொய்கை ; ஓரிதழ்த்தாமரை ; பாவை ; சிலை ; பதுமநிதி .
பதைத்தல் துடித்தல் ; வருந்துதல் ; நடுங்குதல் ; ஆத்திரமடைதல் ; செருக்கடைதல் .
பதைபதைத்தல் மிகத் துடித்தல் .
பந்தகம் கட்டு ; முடிச்சு ; பற்று ; அடைமானம் ; சார்ந்திருத்தல் .
பந்தடித்தல் பந்து விளையாடுதல் .
பந்தணம் பற்று .
பந்தம் உறவு ; கட்டு ; தொடர்பு ; முடிச்சு ; பற்று ; செய்யுளின் தளை ; முறைமை ; கட்டுப்பாடு ; மயிர்முடி ; சொத்தைப் பிறர்வயப்படுத்துகை ; மதில் ; கைவிளக்கு ; தீவட்டி ; அழகு ; தீத்திரள் ; உருண்டை ; பொன் ; நூலிழை ; பெருந்துருத்தி .
பந்தம்பிடித்தல் தீவட்டி தாங்குதல் ; இறந்தவர் உடலத்தைச் சுடுகாட்டுக்குக் கொண்டுபோகும் போது அவர் பேரக்குழந்தைகள் நெய்யில் நனைத்த பந்தத்தைப் பிடித்தல் .
பந்தயக்குதிரை போட்டியோட்டத்தில் விடப்படுங் குதிரை .
பந்தயம் போட்டி ; போட்டியில் வைக்கும் பொருள் ; பந்தகம் .
பந்தர் பந்தல் ; நிழல் ; பண்டசாலை ; ஓலக்கமண்டபம் ; படர்கொடி விதானம் ; ஒரு கடற்கரைப் பட்டினம் .
பந்தல் கால் நட்டுக் கீற்றுகள் பரப்பிய இடம் ; நிழல் ; பண்டசாலை ; ஓலக்கமண்டபம் ; படர்கொடிவிதானம் ; நீர் விழுதற்குக் குழாய் வடிவாகச் செய்யப்பட்டட கருவி .
பந்தற்கால் திருமணத்தை முன்னிட்டு நல்லவேளையில் பந்தல் போடுவதற்காக நடப்படும் கால் .
பந்தனம் கட்டுகை ; கட்டு ; கயிறு ; சிறைப்படுத்துகை .
பந்தனாலயம் சிறைச்சாலை .
பந்தனை கட்டுகை ; கட்டு ; பற்று ; ஆணவம் முதலிய குற்றங்கள் ; மகள் ; குழந்தைநோய் .
பந்தானம் உறவினர் கூட்டம் .
பந்தி உண்டற்கு அமர்ந்தவர் வரிசை ; குதிரைச் சாலை ; ஒழுங்கு ; கட்டு .
பந்தித்தல் கட்டுதல் ; கூடுதல் ; ஆன்மாவைப் பாசத்துக்குள்ளாக்குதல் .
பந்திப்பாய் விருந்தினர் உணவருந்த உட்காரப் போடும் நீண்டபாய் .
பந்திபோசனம் பலரும் சேர்ந்து உண்ணுதல் .
பந்திவஞ்சனை பந்தி பரிமாறுதலில் ஓரவஞ்சனை காட்டுதல் .
பந்திவிசாரணை உணவளிக்கும்போது பந்தியில் உள்ளோரைப் போற்றுகை .
பந்து சுற்றம் ; உருண்டை வடிவான விளையாட்டுக்கருவி ; சுருள் ; நீர்வீசுங் கருவி ; மட்டத்துருத்தி ; திரிகை ; கட்டு ; சூழ்ச்சி ; பொருளின்றி வழங்கும் ஒருசொல் விழுக்காடு ; ஆட்டச் சீட்டு ; அடிக்கும் சவுக்கு .
பந்துக்கட்டு சம்பந்தக்கட்டு , சுற்றமிகுதி ; சூழ்ச்சி ; கூட்டச்சேர்க்கை ; இல்லாததைக் கூட்டிச் சொல்லுகை .
பந்துசனம் சுற்றத்தார் .
பந்துத்துவம் உறவு .
பந்துமாலை பூப்பந்து .
பந்துரம் அழகு .
பந்துவராளி ஒரு பண்வகை .
பந்தெறிகளம் பந்து விளையாடும் இடம் .
பப்ப இகழ்ச்சிக் குறிப்பு .
பப்படம் அப்பளம் .
பப்பத்து பத்துக்கொண்ட கூறுகள் .
பப்பளி பப்பாளிமரம் ; கிச்சிலிவகை .
பப்பளிச்சேலை ஒரு நிறமுடைய சேலைவகை .
பப்பாதி இரண்டு சமபாகம் .
பப்பாளி ஒரு சிறுமரவகை .
பப்பு பரப்பு ; ஒப்பு ; துவரம்பருப்பு .
பப்புவர் அரசனது கீர்த்தியைப் புகழ்வோர் .
பம் விண்மீன் .
பம்பரத்தி அடக்கமற்றவள் .
பம்பரம் வேகமாகச் சுழற்றி விளையாடும் கருவி , மந்தரமலை ; அடக்கமற்றவள் .
பம்பரமாட்டுதல் பம்பரஞ் சுழற்றுதல் ; அலைக்கழித்தல் .
பம்பரைக்காரியம் முறைபிறழ்ந்த செய்கை .
பம்பல் பரந்த வடிவு ; ஒலி ; களிப்பு ; பொலிவு ; அறுவடை ; துளி .
பம்பு வேடிக்கை ; கல் ; மூங்கில்மரம் .
பம்புதல் செறிதல் ; நிறைதல் ; பரவுதல் ; எழுதல் ; ஒலித்தல் .
பம்பை ஒரு வாத்தியவகை ; முல்லை நெய்தல் நிலங்கட்குரிய பறை ; பறட்டைமயிர் ; ஒரு பொய்கை ; பாம்பன் வாய்க்கால் .
பம்பைக்காரன் பம்பையடிக்கும் தொழிலுடையோன் .
பம்மல் மூட்டம் ; தையல் நூலோட்டம் .
பம்மாத்து வெளிவேடம் .
பம்முதல் மேகம் மூட்டம்போடுதல் ; செறிதல் ; மறைதல் ; மூடுதல் ; ஒலித்தல் ; நூலோட்டுதல் ; பதுங்குதல் .
பம்மை திருமகள் ; ஆரியாங்கனையருள் ஒருத்தி ; பதுமை .
பமரம் வண்டு .
பயகம்பனம் அச்சத்தால் நடுங்குகை .
பயங்கரம் அச்சம் ; மிகு அச்சம் உண்டாக்குதல் .
பயங்காட்டுதல் அச்சமடையத்தக்க தோற்றங்காட்டுதல் ; அச்சமுறச் செய்தல் .
பயங்காளி அச்சமுள்ளோன் .