பயசம் முதல் - பயோதிகம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பயசம் நீர் ; பால் .
பயசு நீர் ; பால் ; திருநாமப்பாலைப்பூண்டு .
பயசுகம் பூனை .
பயணங்கட்டுதல் பயணத்துக்கு ஆயத்தம் பண்ணுதல் .
பயணப்படுதல் பயணத்துக்கு ஆயத்தம் பண்ணுதல் .
பயணம் யாத்திரை ; இறப்பு .
பயத்தல் விளைதல் ; உண்டாதல் ; பலித்தல் ; கிடைத்தல் ; படைத்தல் ; பெறுதல் ; கொடுத்தல் ; பூத்தல் ; இயற்றுதல் ; நிறம்வேறுபடுதல் ; அச்சமுறுதல் .
பயதம் காண்க : பமரம் .
பயந்தாள் தாய் .
பயந்தோர் பெற்றோர் .
பயந்தோர்ப்பழிச்சல் தலைவியின் பெற்றோரைத் தலைவன் வாழ்த்திப் புகழும் துறை .
பயந்தோன் தந்தை .
பயப்படுத்துதல் அச்சுறுத்துதல் .
பயப்படுதல் அஞ்சுதல் .
பயப்பய மெல்ல மெல்ல .
பயப்பாடு பயன்படுகை ; அச்சம் .
பயப்பு பயன் ; அருள் ; நிறம் வேறுபடுகை ; பொன்னிறம் .
பயபக்தி ஒடுக்கவணக்கம் .
பயம் அச்சம் ; அச்சச்சுவை ; வாவி ; அமுதம் ; பால் ; நீர் ; பலன் ; வினைப்பயன் ; பழம் ; இன்பம் ; அரசிறை ; தன்மை .
பயம்பகர்தல் பயன்படுதல் .
பயம்பு பள்ளம் ; குழி ; யானையை அகப்படுத்தும் குழி ; நீர்நிலை ; காண்க : வசம்பு .
பயமுறுத்துதல் அச்சமுண்டாக்குதல் ; கண்டித்தல் .
பயரை ஒரு மரவகை .
பயல் சிறுபிள்ளை ; இழிஞன் ; பாதி ; பங்கு ; பள்ளம் ; குறிப்புச்சொல் .
பயலாள் வாலிபப் பருவத்தவர் .
பயற்றங்காய் பயறு உள்ளடங்கிய காய் ; பயறு வகை ; பூணூலின் நீளத்தைக் குறைக்க இடும் முடிச்சுவகை .
பயற்றம்மை காண்க : சிச்சிலுப்பை ; சின்னம்மை நோய் .
பயறு பாசிப்பயறு ; தானியவகை ; சித்திரை நாள் .
பயன் பலன் ; வினைப்பயன் ; சொற்பொருள் ; செல்வம் ; பழம் ; அகலம் ; சாறு ; பால் ; வாவி ; அமுதம் ; நீர் .
பயன்சொல்லுதல் பலன் இன்னதென்று சொல்லுதல் ; பொருளுரைத்தல் .
பயன்படுதல் உதவியாயிருத்தல் .
பயன்மரம் பயன்படுபொருள் தரும் மரம் .
பயனில்சொல் இழிசொல் நான்கனுள் ஒன்றாகிய வீண்சொல் .
பயனிலாள் விலைமகள் .
பயனிலி ஒன்றுக்கும் உதவாதவன்(ள்) .
பயனிலை சொற்றொடரில் எழுவாய் கொண்டு முடியும் சொல் .
பயனுவமம் பயனைப்பற்றி வரும் உவமை .
பயனுவமை பயனைப்பற்றி வரும் உவமை .
பயானகம் வினைப்பயன் ; அச்சம் ; நரகவகை .
பயிக்கம் பிச்சை .
பயிட்டம் முத்துவகை .
பயித்தியக்காரன் பித்துப்பிடித்தவன் ; மூடன் .
பயித்தியம் காண்க : பைத்தியக்காரன் ; பித்து ; மதிகேடு ; தீராமோகம் .
பயிர் விலங்கொலி ; ஒலிக்குறிப்பு ; அழைப்பு ; பறவைக்குரல் ; ஒலி ; வாச்சியம் ; சைகை ; விதந்து கட்டிய வழக்கு ; அருவருப்பு ; பயன்படுத்தத்தகும் செடிகள் ; பைங்கூழ் ; குருத்து ; காண்க : இடலை .
பயிர்க்குடி பயிரிடுங் குடி .
பயிர்த்தல் அருவருத்தல் ; மனங்கொள்ளாதிருத்தல் .
பயிர்த்தொழில் உழுதொழில் .
பயிர்தல் விலங்கு முதலியன ஒன்று ஒன்றனைக் குறியிட்டு அழைத்தல் ; அழைத்தல் ; இசைத்தல் .
பயிர்ப்பு அருவருப்பு ; பெண்டிர் குணம் நான்கனுள் ஒன்று , பயிலாத பொருளில் வரும் அருவருப்பு ; மனங்கொள்ளாமை ; தூய்மையின்மை ; பிசின் .
பயிர்பிடித்தல் பயிரில் தானியமணி பற்றுதல் .
பயிர்வைத்தல் பயன்தரும் மரஞ்செடிகள் நடுதல் ; நிலச் சாகுபடி செய்தல் .
பயிரங்கம் காண்க : பகிரங்கம் .
பயிரவி காண்க : முடக்கொற்றான் ; பைரவி .
பயிரழிவு விலங்கு , வெள்ளம் முதலியவற்றால் உண்டாகும் பயிர்க்கேடு .
பயிராதல் பயிர் உண்டாதல் ; சினையாதல் .
பயிரிடுதல் நிலத்தில் பயிர்களை உண்டாக்குதல் ; விலங்குகளை அவ்வவற்றின் ஒலிக்குறிகாட்டி அழைத்தல் .
பயிரிலி தரிசுநிலம் .
பயிருகம் பழம்பாசி .
பயிரேறுதல் பயிர்செழித்தல் .
பயில் பழக்கம் ; சொல் ; சைகை ; குழூஉக்குறி .
பயில்வான் மற்போர்புரிவோன் .
பயில்வு பயிற்சி ; செய்கை ; இருப்பு .
பயிலல் எடுத்தலோசை ; கற்றல் .
பயிலியம் குப்பைமேனிப்பூண்டு .
பயிலுதல் தேர்ச்சியடைதல் ; சொல்லுதல் ; பழகுதல் ; சேவித்தல் ; நடமாடுதல் ; தங்குதல் ; கற்றல் ; நிகழ்தல் ; நெருங்குதல் ; பொருந்துதல் ; ஒழுகுதல் ; ஒலித்தல் ; அழைத்தல் .
பயிற்சி பழக்கம் ; செய்துபழகுதல் .
பயிற்றி பழக்கம் .
பயிற்றுதல் பழக்குதல் ; கற்பித்தல் ; சொல்லுதல் ; பலகாற் கூறுதல் ; செய்தல் ; கொளுவுதல் .
பயின் பிசின் ; பாலேடு ; கப்பலின் சுக்கான் .
பயினன் ஆதிசேடன் .
பயினி குறிஞ்சிநிலத்து மரவகை ; கூடுகை .
பயோததி கடல் ; பாற்கடல் .
பயோதம் மேகம் .
பயோதரம் மேகம் ; கடல் ; பாலைக்கொண்ட முலை ; பால் ; கரும்பு .
பயோதிகம் கடல்நுரை .