பர்க்கம் முதல் - பரதேசம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பர்க்கம் ஒளி ; வீரியம் .
பர்க்கன் சிவன் ; சூரியன் ; திருமால் ; பிரமன் .
பர்ணசாலை இலைவேய்ந்த குடில் .
பர்ணம் இலை .
பர்த்தா கணவன் .
பர்வதம் மலை .
பர்வதராசகுமாரி பார்வதி .
பர்வதராசன் மலைகளுக்கு அரசனான இமயமலை .
பரக்க விரிவாய் ; மிக .
பரக்கழி பெரும்பழி ; சீர்கெட்டவர் .
பரக்கழித்தல் பெரும்பழி விளைத்தல் .
பரக்கழிதல் பெரும்பழியுறுதல் .
பரக்கழிவு பெரும்பழி ; சீர்கெட்டவர் .
பரக்குதல் அலைந்துதிரிதல் .
பரகதி வீடுபேறு .
பரகாயப்பிரவேசம் கூடுவிட்டுக் கூடுபாய்தல் .
பரகாரியம் பிறர்காரியம் .
பரகாலன் பகைவர்க்கு யமன்போன்றவன் ; திருமங்கையாழ்வார் .
பரகிதம் பிறர்க்கு நன்மையானது ; ஒருவகைச் சோதிடநூல் .
பரகீயம் பிறன்மனை விரும்புவதாகிய தீய ஒழுக்கம் ; பிறர்க்கு உரியது .
பரகீயை பிறனுக்கு உரியவள் .
பரகுடிலம் பிரணவம் .
பரகுபரகெனல் தடுமாறுதற்குறிப்பு ; ஒலிக்குறிப்பு .
பரங்கருணை தெய்வ அருள் .
பரசமயம் புறமதம் .
பரசியம் எல்லாரும் அறிந்தது .
பரசிவம் துரிய சிவன் .
பரசிவன் துரிய சிவன் .
பரசு மழுவாயுதம் ; கோடரி ; மூங்கில் ; ஒரு பண்வகை .
பரசுகம் வீடுபேற்றின்பம் .
பரசுதல் துதித்தல் ; மெல்லென ஒதுக்கி எடுத்தல் ; மெல்லெனத் தேய்தல் .
பரசுபாணி மழுவைக் கையிலுடைய சிவபிரான் ; பரசுராமன் ; விநாயகன் .
பரசுவம் பிறர்பொருள் .
பரசை சிறிய ஓடம் .
பரஞ்சாட்டுதல் பொறுப்புக் காட்டுதல் .
பரஞ்சுடர் மேலான ஒளியுருவக் கடவுள் .
பரஞ்சோதி மேலான ஒளியுருவக் கடவுள் .
பரஞானதீபவிளக்கம் திருவருள் .
பரஞானம் கடவுளைப்பற்றிய அறிவு ; இறைவனை உணரும் பத்திநிலைவகை ; இறையறிவு .
பரட்டை செடிமுதலியன தலை பரந்துநிற்கை ; காண்க : பறட்டை .
பரட்டையம் ஒட்டுச் சல்லடம் .
பரடு கால்கரண்டை .
பரண் காவல்மேடை ; பொருள்களை வைக்கும் மேல்தட்டு ; மச்சு .
பரண்டை கணைக்கால் ; பறவைவகை .
பரணம் தாங்குகை ; உடுத்துகை ; கவசம் ; சம்பளம் ; பட்டுச்சீலை ; பரணிநாள் .
பரணி பரணிநாள் ; அரசனுடைய போர் வெற்றியைச் சிறப்பித்துப் பாடும் சிற்றிலக்கியவகை ; இராக்கதம் ; அடுப்பு ; செப்பு ; சிலந்திக்கூடு ; மதகு ; கூத்து ; காவல்மேடை ; மேல்தட்டு .
பரணிகுடிசை ஓலையால் வேய்ந்த குடில் .
பரத்தல் பரவுதல் ; தட்டையாதல் ; அலமருதல் .
பரத்தன் பரத்தையரிடம் கூடி ஒழுகுபவன் .
பரத்தி நெய்தல்நிலப் பெண் .
பரத்திரயம் காண்க : இரத்தினத்திரயம் .
பரத்திரவியம் பிறர்பொருள் .
பரத்திரி மனைவியல்லாதவள் .
பரத்துதல் விரித்தல் .
பரத்துவம் கடவுள்தன்மை ; திருமால் நிலை ஐந்தனுள் ஒன்று .
பரத்தை பொதுமகள் ; தீயநடத்தை ; ஒரு செடிவகை ; அயன்மை .
பரத்தைமை விலைமகளுடன் கூடும் வழக்கம் ; அயன்மை ; தீயநடத்தை .
பரதகண்டம் இந்திய நாடு .
பரதத்துவம் பரம்பொருள் .
பரதந்திரம் பிறரைச் சார்ந்திருப்பது .
பரதந்திரியம் பிறரைச் சார்ந்திருப்பது .
பரதம் கூத்து ; ஒரு கண்டம் ; ஒரு நாடகத் தமிழ் நூல் ; ஒரு பேரெண் .
பரதமோகினி நாட்டியத்தால் பிறரை மயக்குபவள் .
பரதர் குருகுலத்தரசர் ; கூத்தர் ; நெய்தல்நிலமக்கள் ; வணிகர் ; காமுகர் .
பரதவசந்தன் வசந்தன் ஆட்டத்தில் ஒருவகை .
பரதவர் நெய்தல்நில மக்கள் ; தமிழ்நாட்டுக் குறுநில மன்னருள் ஒருசாரார் ; வணிகர் .
பரதவருடம் காண்க : பரதகண்டம் .
பரதவித்தல் வருந்துதல் ; இரங்குதல் .
பரதன் இராமன் தம்பி ; பரதநூல் செய்தோன் ; ஓரரசன் .
பரதாரம் பிறன்மனைவி .
பரதாரி பிறன்மனை விழைவோன் .
பரதி நாடகி , கூத்தாடுபவள் .
பரதெய்வம் முழுமுதற் கடவுள் .
பரதேகம் நுண்ணுடம்பு .
பரதேசம் அயல்நாடு ; காண்க : பரதேசயாத்திரை .