பரதேசயாத்திரை முதல் - பரமீசன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பரதேசயாத்திரை திருமணச்சடங்கில் காசியாத்திரை போதல் .
பரதேசி கதியற்றவன் ; அயல்நாட்டான் ; இரவலன் ; தேசயாத்திரை செய்வோன் .
பரதேவதை காண்க : பரதெய்வம் .
பரந்தவட்டம் கைம்மணி .
பரந்தவர் இரந்து திரிவோர் .
பரந்தாமம் வைகுண்டம் .
பரந்தாமன் திருமால் .
பரநாரிசகோதரன் பிறர்பெண்டிரை உடன்பிறந்தாளாகக் கருதுபவன் .
பரநியாசம் தெய்வத்தினிடம் அல்லது குருவிடம் ஆன்மபாரத்தை வைத்தல் .
பரப்ப மிக .
பரப்பாழ் வானவெளி .
பரப்பிரமம் முழுமுதற் கடவுள் ; உலகியலறிவு அற்றவன் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
பரப்பு இடவிரிவு ; உலகம் ; மிகுதி ; தொகுதி ; அளவு ; ஒரு நிலவளவு ; கடல் ; முகடு ; நிவேதனப் பொருள் ; கதவுநிலையின் மேலுள்ள மண்தாங்கிப் பலகை ; படுக்கை ; வரிக்கணக்கு .
பரப்புதல் பரவச்செய்தல் ; செய்தி முதலியன பரப்பல் ; விரித்தல் ; ஒழுங்கின்றி வைத்தல் ; நிலைபெறுதல் ; பெருகக் கொடுத்தல் .
பரபக்கம் பிறர்மதக் கொள்கை .
பரபட்சம் பிறர்மதக் கொள்கை .
பரபத்தி சிவபத்தி ; கடவுளின் திருவுருவைக் காணும் பத்தியின் முதலாம் நிலை .
பரபத்தியம் முதல் ; வணிகக் கடன்களைப் பொறுக்கும் மதிப்பு ; கொடுக்கல் வாங்கல் ; சமன்செய்தல் .
பரபதம் காண்க : பரகதி .
பரபரத்தல் தீவிரப்படல் ; மிக விரைதல் ; தன்வயமழிதல் ; சுறுசுறுப்பாதல் ; தினவெடுத்தல் .
பரபரப்பு சுறுசுறுப்பு ; தினவு ; விரைவு .
பரபரெனல் விரைவுக்குறிப்பு .
பரபாகம் பிறர் சமைத்த உணவு ; மேன்மை ; பல வண்ணங்கள் கலத்தலால் உண்டாகும் அழகு ; நற்பேறு ; மிச்சம் .
பரபிருதம் குயில் ; காகம் .
பரபுட்டம் குயில் .
பரபுட்டை விலைமகள் .
பரபூர்வை மறுமணம் செய்தவள் .
பரபோகம் பேரின்பம் .
பரம் உடல் ; கவசம் ; பாரம் ; கேடகவகை ; மேலானது ; திருமால்நிலை ஐந்தனுள் ஓன்று ; கடவுள் ; மேலுலகம் ; திவ்வியம் ; வீடுபேறு ; பிறவிநீக்கம் ; முன் ; மேலிடம் ; அன்னியம் ; சார்பு ; தகுதி ; நிறைவு ; நரகம் ; குதிரைக் கலணை ; அத்திமரம் ; பரதேசி .
பரம்படித்தல் பரம்புச் சட்டத்தால் நிலத்தைச் சமப்படுத்தல் .
பரம்பரம் வழிவழியாக வரும் உரிமை ; வமிசம் ; காண்க : பரம்பரை ; பரம்பரன் ; முத்தி ; ஒன்றுக்கு ஒன்று மேலானது .
பரம்பரன் முழுமுதற் கடவுள் .
பரம்பரை இடையறாத் தொடர்பு ; தலைமுறைத் தொடர்பு .
பரம்பு உழுத கழனியைச் சமப்படுத்தும் பலகை ; பரவிய நிலம் ; மூங்கிற்பாய் ; வரப்பு ; இடவிரிவு ; வரிக்கணக்கு .
பரம்புதல் பரவுதல் ; தட்டையாக விரிதல் ; நிறைதல் .
பரம்புப்பலகை நிலத்தைச் சமப்படுத்தும் பலகை .
பரம்பொருள் மேலான பொருள் ; கடவுள் .
பரமகதி வீடுபேறு ; இறுதிக்காலத்தில் புகும் அடைக்கலம் ; பூரணகதி .
பரமகாரணன் ஆதிகாரணனான கடவுள் .
பரமகாருணிகன் பேரருளாளன் .
பரமகுரு சிறந்த குரு ; ஆசாரியனுக்கு ஆசாரியன் .
பரமசண்டாளன் கொடும்பாவி .
பரமசத்துரு பெரும்பகைவன் .
பரமசந்தேகம் தீரா ஐயம் .
பரமசித்தி காண்க : பரமபதம் .
பரமசிவன் சிவபிரான் .
பரமசுதன் தேவகுமாரர் , இயேசுநாதர் .
பரமசுந்தரி தருமதேவதை .
பரமசுவாமி கடவுள் : அழகர்மலைத் திருமால் .
பரமஞானம் இறையறிவு .
பரமண்டலம் அயல்நாடு ; வீடுபேறு .
பரமதம் பிறசமயம் .
பரமநாழிகை திதி வார யோக கரண நட்சத்திரங்களின் முழு நாழிகை .
பரமபதம் வீடுபேறு .
பரமபாகவதன் திருமாலடிமையில் சிறந்தவன் .
பரமம் சிறப்பு ; தலைமை ; முதன்மை ; முதற்கடவுள் ; தெய்வநிலை .
பரமமூர்த்தி காண்க : பரமன் .
பரமயோக்கியன் உண்மையிற் சிறந்தோன் .
பரமரகசியம் அதிரகசியம் ; மறைவான தத்துவக்கொள்கை .
பரமராசியம் அதிரகசியம் ; மறைவான தத்துவக்கொள்கை .
பரமலோபி மிகு உலுத்தன் .
பரமன் முதற்கடவுள் .
பரமன்னம் காண்க : பரமான்னம் .
பரமனையேபாடுவார் தொகையடியாருள் சிவனையே பாடும் ஒரு தொகுதியினர் .
பரமாகாசம் பரமன் உறையும் ஞானாகாசம் ; கடவுள் .
பரமாணு சூரியனின் கதிரில் படரும் துகளில் முப்பதில் ஒருபாகமாகிய மிகச் சிறிய அளவு .
பரமாத்துமன் கடவுள் .
பரமாத்துமா பரம்பொருள் ; சுத்தாத்துமா .
பரமார்த்தம் மேலான பொருள் ; உண்மைப் பொருள் ; உண்மை ; வீடுபேறு ; உலக இயல்பு ; அறியாமை ; ஒரு கற்பநூல் .
பரமார்த்தன் உண்மையிற் சிறந்தோன் ; உலக அனுபவமற்றவன் .
பரமாற்புதம் பெருவியப்பு .
பரமான்மா பரம்பொருள் .
பரமான்னம் பாயசவகை .
பரமானந்தம் பேரின்பம் .
பரமீசன் காண்க : பரமாத்துமன் .