பரமுத்தி முதல் - பராயணன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பரமுத்தி வீடுபேறு ; பாசங்களிலிருந்து நீங்கித் துய்க்கும் பேரின்பம் .
பரமேச்சுரன் கடவுள் ; சிவபிரான் .
பரமேச்சுவரன் கடவுள் ; சிவபிரான் .
பரமேசுவரன் கடவுள் ; சிவபிரான் .
பரமேசுவரி பார்வதி .
பரமேட்டி பரம்பொருள் ; பிரமன் ; திருமால் ; சிவன் ; அருகன் ; பரமபதத்திலுள்ள ஐம்பூதங்களுள் ஒன்று .
பரமைகாந்தி கடவுளிடமே மனத்தை நிறுத்தும் பெரியோன் .
பரமோபகாரம் பேருதவி .
பரர் பிறர் ; பகைவர் .
பரல் பருக்கைக்கல் ; விதை .
பரலோககமனம் இறப்பு .
பரலோகம் மேலுலகு ; வீட்டுலகு .
பரவக்காலி அவசரப்படுபவன் .
பரவக்காலித்தனம் அவசரப்படுகை .
பரவசம் பிறர்வயமாதல் ; தன்வயமற்றிருத்தல் ; பிரமாணம் ; பராக்கு ; மிகுகளிப்பு .
பரவணி தலைமுறை , பரம்பரை .
பரவர் ஒரு சாதியார் .
பரவல் பரவின இடம் ; வாழ்த்து .
பரவாகீசுவரி சிவசக்தி .
பரவாசுதேவன் பரமபதத்துள்ள திருமால் .
பரவாதி வேற்றுச்சமயத்தவன் ; இழிஞன் .
பரவிருதயம் குயில் .
பரவிவேகம் மெய்யறிவு .
பரவுக்கடன் நேர்த்திக்கடன் .
பரவுதல் பரந்திருத்தல் ; பரப்புதல் ; சொல்லுதல் ; புகழ்தல் ; துதித்தல் ; பாடுதல் .
பரவெளி பரமன் உறையும் ஞானாகாசம் ; கடவுள் .
பரவை பரப்பு ; கடல் ; உப்பு ; ஆடல் ; பரவல் ; மதில் ; பரவிநிற்கும் நீர் ; திடல் ; சுந்தரர் மனைவி .
பரவையமுது உப்பு .
பரவைவழக்கு கடலால் சூழப்பெற்ற உலக வழக்கு .
பரற்பரம் ஒன்றுக்கொன்று .
பரன் கடவுள் ; அயலான் ; சீவான்மா .
பரனந்தி காண்க : பரதெய்வம் .
பராக்கடித்தல் பராமுகஞ்செய்தல் ; அவமதித்தல் .
பராக்கதம் கடியப்பட்டது .
பராக்கிரமசாலி வலுவுள்ளவன் ; வீரன் .
பராக்கிரமம் வீரம் ; வல்லமை .
பராக்கிரமன் வீரன் .
பராக்கிரமித்தல் வீரச்செயல் காட்டுதல் .
பராக்கு கவனமின்மை ; மறதி ; எச்சரிக்கையைக் குறிக்கும் சொல் ; கவனமாறுகை .
பராகண்டம் கவனமின்மை .
பராகண்டிதம் கவனமின்மை .
பராகம் மகரந்தம் ; துகள் ; ஒரு நறுமணத்தூள் ; காண்க : சந்தனம் ; நோன்புவகை .
பராகரணம் இகழ்தல் .
பராகாசம் காண்க : பரவெளி .
பராகாசய காண்க : பரவெளி .
பராங்கதி காண்க : பரகதி .
பராங்குசன் எதிரிகளாகிய யானைகளை அடக்கும் அங்குசம் போன்றவன் ; நம்மாழ்வார் .
பராசக்தி ஞானமயமான சிவசக்தி ; நாற்பிரிவுள்ள சிவசக்தி .
பராசயம் தோல்வி .
பராசலம் திருப்பரங்குன்றம் .
பராசனன் கொலைஞன் .
பராசிதம் சிவன் கைவாள் ; விட்டுணுக்கிரந்தி .
பராசியம் காண்க : பரசியம் .
பராடம் பாலைநிலம் .
பராதீனம் சுதந்தரமின்மை ; உரிமையற்றது .
பராதீனம்பண்ணுதல் தன் சொத்தைப் பிறர்க்கு உரிமையாக்குதல் .
பராபத்தியம் காண்க : பாரபத்தியம் ; மேல் விசாரணை .
பராபரம் பரம்பொருள் .
பராபரவத்து பரம்பொருள் .
பராபரன் பரம்பொருள் .
பராபரி ஒழுங்கு ; சக்தி .
பராபரிக்கை சோதனை .
பராபரித்தல் ஒழுங்குபடுத்தல் .
பராபரியாய் கேள்விமூலமாய் .
பராபரை சிவசக்தி .
பராபவ அறுபதாண்டுக் கணக்கில் நாற்பதாம் ஆண்டு .
பராபவம் மதியாமை ; தோல்வி .
பராமரிசம் பகுத்தறிகை .
பராமரிசித்தல் ஆராய்தல் ; பகுத்தறிதல் .
பராமரித்தல் ஆதரித்தல் ; காத்தல் ; ஆலோசித்தல் ; விசாரித்தல் ; பத்திரப்படுத்துதல் ; செயல்புரிதல் .
பராமரிப்பு ஆதரிப்பு ; விசாரிப்பு ; மேலாண்மை செய்தல் .
பராமுகம் அசட்டை ; கவனிப்பின்மை ; புறக்கணிப்பு .
பராய் பிராய்மரம் .
பராயணம் குறிக்கோள் ; அறுசமயத்துள் ஒன்று ; இராசிமண்டலம் .
பராயணன் குறிக்கொள்வோன் ; சமயத்தைப் பின்பற்றுவோன் .