சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பரார்த்தம் | பிறர்க்கு உதவியானது ; ஒரு பேரெண் ; பிரமன் ஆயுளில் பாதி . |
| பராரி | ஓடிப்போனவன் ; நிலம் வீடு இவற்றை விட்டு ஓடிய குடி . |
| பராரை | பருத்த அடிமரம் ; விலங்கின் பருத்த மேல்தொடை ; உள்ளோசை . |
| பராவணம் | துதிக்கப்படும் பொருள் . |
| பராவமது | தெய்வங்கட்குரிய அமுதம் . |
| பராவர்த்திதம் | கூத்துறுப்பினுள் ஒன்று . |
| பராவர்த்து | சம்பளப்பட்டி ; மதிப்பு . |
| பராவரம் | ஒழுங்கின்மை . |
| பராவுதல் | வணங்குதல் ; புகழ்தல் . |
| பரான்னம் | பிறர் கொடுத்த உணவு ; தனக்குச் சொந்தமில்லாத உணவு . |
| பரானுகூலம் | பிறர்க்கு உதவியானது . |
| பரானுகூலி | உபகாரி ; விபசாரி . |
| பரானுபவம் | பேரின்பம் . |
| பரானுபூதி | பிறரனுபவம் . |
| பரி | செலவு ; வேகம் ; குதிரைநடை ; குதிரை ; அசுவினிநாள் ; குதிரைமரம் ; உயர்ச்சி ; பெருமை ; கறுப்பு ; மாயம் ; பருத்திச்செடி ; பாதுகாக்கை ; சுமை ; துலை ; ஊற்றுணர்வு ; அன்பு ; வருத்தம் ; மிகுதிப்பொருள் குறிக்கும் ஓர் இடைச்சொல் . |
| பரிக்காரம் | ஒப்பனை , அலங்காரம் . |
| பரிக்காரர் | குத்துக்கோற்காரர் ; குதிரை நடத்துவோர் . |
| பரிக்கிரகத்தார் | ஊர்ச்சபையார் . |
| பரிக்கிரகத்துப்பெண்டுகள் | கோயிற் பணிப்பெண்கள் . |
| பரிக்கிரகம் | பற்றுகை ; ஏற்றுக்கொள்கை ; மனைவி ; வைப்பாட்டி ; சூளுரை ; ஊர்ச்சபை . |
| பரிக்கிரகித்தல் | ஏற்றுக்கொள்ளுதல் ; வைப்பாகக் கொள்ளுதல் . |
| பரிக்கிரமம் | சுற்றுதல் , அலைந்துதிரிதல் . |
| பரிக்கிரயம் | விற்பனை . |
| பரிக்கை | காண்க : பரீட்சை ; தாங்குகை . |
| பரிக்கோல் | குத்துக்கோல் . |
| பரிகணித்தல் | அளவிடுதல் . |
| பரிகம் | அகழி ; மதிலுள்மேடை ; மதில் ; அழித்தல் ; எழுமரம் ; நித்திய யோகத்துள் ஒன்று ; ஓர் இரும்பாயுதம் . |
| பரிகரம் | துணைக்கருவி ; சேனை ; பரிவாரம் ; செய்யுளணிவகை . |
| பரிகரித்தல் | நீக்குதல் ; நோயைக் குணப்படுத்துதல் ; முன் கூறியதை மறுத்தல் ; போக்குதல் ; அடக்குதல் ; ஒன்றுங்கொடாமை ; போற்றுதல் ; கடத்தல் ; கழுவாய் செய்தல் ; பத்தியம் முதலியன உதவி நோயாளியைக் கவனித்தல் . |
| பரிகலசேடம் | ஞானாசிரியர் உண்ட மிச்சில் . |
| பரிகலபரிச்சின்னங்கள் | எடுபிடி முதலியவற்றைக் கொண்டுசெல்லும் பணியாளர் . |
| பரிகலம் | குருமார் உண்கலம் ; பெரியோர் உண்டு மிகுந்தது ; சேனை ; பேய்க்கூட்டம் . |
| பரிகாசம் | பகடி ; நிந்தனை ; எள்ளல் ; விளையாட்டு . |
| பரிகாரச்செலவு | மருத்துவச்செலவு . |
| பரிகாரம் | நீக்குகை ; கழுவாய் ; மாற்று உதவி ; மருத்துவம் ; காத்தல் ; கேடுநீங்கக் கூறும் வாழ்த்து ; வழுவமைதி ; விலக்கு ; பொருள் ; கப்பம் ; பெண்மயிர் . |
| பரிகாரி | மருத்துவன் ; நாவிதன் . |
| பரிகை | அகழி ; மதிலுள்மேடை ; முத்திரை வகை . |
| பரிச்சதம் | போர்வை . |
| பரிச்சயம் | பழக்கம் ; குதிரைநோய்வகை . |
| பரிச்சாத்து | குதிரைத்திரள் . |
| பரிச்சிதம் | பழக்கம் . |
| பரிச்சின்னம் | அரசர் முதலியவர்க்குரிய சின்னம் ; அளவுபட்டது . |
| பரிச்செண்டு | விளையாடுஞ் செண்டுவகை ; பரிச்செண்டு வீசி ஆடும் விளையாட்டு . |
| பரிச்சேதம் | துண்டிப்பு ; அளவுக்கு உட்படுகை ; அத்தியாயம் ; பகுத்தறிகை ; முழுமை ; சிறுபகுதி . |
| பரிச்சை | பழக்கம் ; காண்க : பரீட்சை . |
| பரிசகம் | சித்திரசாலை . |
| பரிசணித்தல் | மெதுவாய்ப் பேசுதல் . |
| பரிசம் | முலைவிலை , மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்காகத் தரும் கொடைப்பொருள் ; சீதனம் ; தொடுதல் ; ஊற்றறிவு ; கிரகணம் பற்றல் ; பரத்தைக்குக் கொடுக்கும் முன்பணம் ; ஆழம் ; ஆசிரியன் மாணவற்குச் செய்யும் தீட்சைகளுள் ஒன்று ; வல்லெழுத்து மெல்லெழுத்துகள் . |
| பரிசம்போடுதல் | திருமணம் உறுதிசெய்தல் . |
| பரிசயம் | பழக்கம் . |
| பரிசயித்தல் | பழகுதல் . |
| பரிசரண் | காவற்காரன் ; தோழன் ; படைத்தலைவன் . |
| பரிசன்னியம் | மேகம் ; மேரு . |
| பரிசனபேதி | காண்க : பரிசனவேதி . |
| பரிசனம் | உறவு ; ஏவல் செய்வோர் ; பரிவாரம் ; தொடுதல் ; கிரகணம் பற்றுகை . |
| பரிசனவேதி | தாழ்ந்த உலோகங்களைப் பொன்னாக்கும் மருந்து . |
| பரிசனன் | காற்று . |
| பரிசனை | காண்க : பரிசயம் . |
| பரிசாரகம் | ஏவற்றொழில் ; சமையல்தொழில் . |
| பரிசாரகன் | பணியாள் ; சமையற்காரன் . |
| பரிசாரம் | காண்க : பரிசாரகம் ; வணக்கம் ; பெண்மயிர் . |
| பரிசாரிகை | வேலைக்காரி . |
| பரிசித்தல் | தொடுதல் ; தீண்டல் ; கிரகணம் பற்றுதல் ; நுகர்தல் ; பழகுதல் . |
| பரிசிரமம் | பெருமுயற்சி ; மிகுவருத்தம் . |
| பரிசிரயம் | கூட்டம் . |
| பரிசில் | கொடை ; சிற்றோடம் . |
| பரிசிலர் | பரிசில்வேண்டி இரப்போர் . |
| பரிசிலாளர் | பரிசில்வேண்டி இரப்போர் . |
| பரிசீலனை | ஆராய்ச்சி ; சோதனை . |
| பரிசு | பரிசில் ; குணம் ; விதம் ; விதி ; பெருமை ; சிற்றோடம் ; கொடை ; மணமகளுக்கு மணமகன் வீட்டார் அளிக்கும் பணம் முதலியன . |
| பரிசுகெடுதல் | சீரழிதல் . |
| பரிசுத்தம் | தூய்மை ; துப்புரவு . |
| பரிசுத்தர் | தூயோர் ; தேவதூதர் . |
| பரிசுத்தவான் | தூயோன் . |
| பரிசுத்தன் | தூயோன் . |
|
|
|