சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பரிசுத்தை | தூய்மையானவள் . |
| பரிசை | கேடகம் ; விருது ; சிற்றோடம் ; கருமத்தைத் தடுத்தற்பொருட்டுப் பொறுக்கவேண்டும் துன்பங்கள் . |
| பரிசைக்காரன் | கேடகம் பிடிப்போன் . |
| பரிசோதனை | நன்கு ஆராய்தல் . |
| பரிசோதித்தல் | நன்கு ஆராய்தல் . |
| பரிஞ்சு | வாட்பிடி . |
| பரிஞ்ஞானம் | பேரறிவு . |
| பரிட்சித்தல் | ஆராய்தல் ; சோதனைசெய்தல் . |
| பரிட்டவணை | மாறுகை . |
| பரிட்டினகம் | பறவை வட்டமிடுதல் . |
| பரிணதன் | கற்றோன் . |
| பரிணமித்தல் | ஒன்றிலிருந்து ஒன்று பெருகுதல் ; நிலைமாறுதல் . |
| பரிணயம் | திருமணம் . |
| பரிணாமம் | ஒன்று மற்றொன்றாக மாறுதல் . |
| பரித்தல் | அறுத்தல் ; சூழ்தல் ; ஓடுதல் ; சுமத்தல் ; ஆளுதல் ; பொறுக்கியெடுத்தல் ; பாதுகாத்தல் ; தரித்தல் . |
| பரித்தியாகம் | முற்றுந்துறத்தல் . |
| பரித்தியாகி | துறவி . |
| பரித்திராசம் | பெரும்பயம் . |
| பரித்திராணம் | பாதுகாப்பு . |
| பரிதபித்தல் | காண்க : பரிதவித்தல் . |
| பரிதல் | பற்றுவைத்தல் ; காதல்கொள்ளுதல் ; இரங்குதல் ; சார்பாகப் பேசுதல் ; வருந்துதல் ; பிரிதல் ; அறுதல் ; முறிதல் ; அழிதல் ; ஓடுதல் ; வெளிப்படுதல் ; அஞ்சுதல் ; வருந்திக் காத்தல் ; பகுத்தறிதல் ; அறிதல் ; அறுத்தல் ; அழித்தல் ; நீங்குதல் ; கடத்தல் ; உதிர்த்தல் ; வாங்கிக்கொள்ளுதல் . |
| பரிதவித்தல் | துயருறல் ; வருந்துதல் ; இரங்குதல் . |
| பரிதாகம் | வெம்மை . |
| பரிதாபப்படுதல் | வருந்துதல் ; இரங்குதல் . |
| பரிதாபம் | துன்பம் ; இரக்கம் ; தான் செய்த குற்றத்துக்கு வருந்துகை ; பெருந்தாகம் . |
| பரிதாபி | அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தாறாம் ஆண்டு ; இரக்கமுள்ளவன் ; துன்புறுபவர் . |
| பரிதானம் | பண்டமாற்று ; கைக்கூலி . |
| பரிதி | பரிவேடம் : வட்டவடிவு ; சூரியன் ; சக்கரப்படை ; தேருருளை ; சக்கரவாகப்புள் ; ஒளி ; வேள்விமேடை ; தருப்பை ; திருக்குறள் உரையாசிரியருள் ஒருவர் . |
| பரிதிமண்டலம் | சூரியமண்டலம் . |
| பரிதிவட்டம் | சூரியமண்டலம் . |
| பரிது | பெரியது ; விதம் . |
| பரிந்துபேசுதல் | மற்றொருவருக்காகப் பேசுதல் ; அன்போடு பேசுதல் . |
| பரிந்துரை | சிபாரிசு ; ஆதரவுப் பண்பு . |
| பரிநாமம் | புகழ் ; செல்வம் . |
| பரிநியாசம் | முடிவுசெய்கை ; வசனப்பொருள் . |
| பரிநிர்வாணம் | வீடுபேறு . |
| பரிப்பாகன் | குதிரை நடத்துவோன் . |
| பரிப்பு | இயக்கம் ; துன்பம் ; தாங்குகை . |
| பரிபக்குவம் | ஞானமுதிர்ச்சி ; தகுதி . |
| பரிபணம் | கைப்பணம் ; மூலதனம் . |
| பரிபரி | யானையை அடக்கும் பரியாய மொழிச்சொல் . |
| பரிபவம் | அவமானம் ; எளிமை ; இகழ்ச்சி . |
| பரிபவித்தல் | அவமதித்தல் , இகழ்தல் . |
| பரிபாகம் | சமைக்கை ; பக்குவம் ; முதிர்வு . |
| பரிபாகி | தகுந்தவன் ; அறிவுமுதிர்ச்சியுள்ளவன் . |
| பரிபாடி | ஒழுங்கு . |
| பரிபாடை | குறியீடு ; குழூஉக்குறி . |
| பரிபாலகன் | காப்போன் ; உதவியளிப்போன் . |
| பரிபாலனம் | ஆளுகை ; பாதுகாப்பு . |
| பரிபாலித்தல் | பாதுகாத்தல் ; அருளுதல் . |
| பரிபுரம் | காற்சிலம்பு . |
| பரிபுலம்புதல் | மிக வருந்துதல் . |
| பரிபூதம் | தெரிவு ; அவமானம் ; தூய்மையுள்ளது ; பழையது . |
| பரிபூர்த்தி | நிறைவு ; மிகுதி . |
| பரிபூரணத்துவம் | முழுமைத்தன்மை . |
| பரிபூரணதசை | வீடுபேறு ; இறப்பு . |
| பரிபூரணம் | நிறைவு ; மிகுதி ; முடிவு ; இறப்பு . |
| பரிபூரணன் | முழுமையன் ; கடவுள் . |
| பரிபூரணி | பார்வதி ; திருமகள் . |
| பரிமகம் | அசுவமேதம் . |
| பரிமளதிரவியம் | மணப்பண்டம் . |
| பரிமளதைலம் | நறுமணமுடைய எண்ணெய் . |
| பரிமளம் | மிகுமணம் ; நறுமணம் . |
| பரிமளித்தல் | மிகுமணம் வீசுதல் ; சிறப்படைதல் ; கூடிக்களித்தல் ; சிறக்கப் போற்றுதல் ; புகழ்தல் . |
| பரிமளிப்பு | மணம்வீசுதல் ; சிறப்பு ; போற்றுகை ; புகழ்ச்சி ; மகிழ்ச்சி ; கூடிக்களிக்கை . |
| பரிமா | குதிரை . |
| பரிமாணம் | அளவு . |
| பரிமாவடிப்போர் | குதிரைப்பாகர் . |
| பரிமாற்றக்காரி | விபச்சாரி . |
| பரிமாற்றப்பிழை | தீயொழுக்கம் . |
| பரிமாற்றம் | மாற்றிக்கொள்ளுகை ; நடக்கை ; நோய் பரவியிருக்கை ; கலந்திருக்கை ; விபசாரம் . |
| பரிமாறுதல் | மாற்றிக்கொள்ளுதல் ; உணவு படைத்தல் ; நுகர்தல் ; பணிமாறுதல் ; கையாளுதல் ; உட்கொள்ளுதல் ; புணர்தல் ; நடமாடுதல் ; பரவுதல் ; ஒழுகுதல் ; உலாவுதல் . |
| பரிமித்தல் | அலங்கரித்தல் . |
| பரிமிதம் | அளவுபட்டது . |
| பரிமிதி | காண்க : பரிமாணம் . |
|
|
|