பரிமுகம் முதல் - பருங்கி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பரிமுகம் காலின் குதிரைமுகம் ; அசுவினிநாள் .
பரிமுகமாக்கள் கின்னரர் .
பரிமுகவம்பி குதிரைமுகவோடம் .
பரிமேதம் காண்க : பரிமகம் .
பரிமேயம் காண்க : பரிமிதம் .
பரிய பருத்த .
பரியகம் பாதகிண்கிணி ; காற்சரி ; கைச்சரி .
பரியங்கம் கட்டில் ; துயிலிடம் .
பரியட்டக்காசு துகில்வகை .
பரியது பெரிய உடம்புபெற்றது .
பரியந்தம் எல்லை .
பரியம் மணப்பரிசு ; பரத்தையர்பெறுங் கூலி .
பரியயம் அசட்டை ; எதிரிடை ; ஒழுங்கின்மை .
பரியரை மரத்தின் பருத்த அடிப்பகுதி .
பரியல் இரங்குதல் ; விரைந்து செல்லுதல் .
பரியவசானம் கடைமுடிவு .
பரியவம் பலர் செல்லும் வழி .
பரியழல் காண்க : வடவைத்தீ .
பரியன் பெரியோன் ; உருவத்தால் பெரியவன் .
பரியாசகர் வேடிக்கைக்காரர் .
பரியாசம் காண்க : பரிகாசம் .
பரியாசை காண்க : பரிகாசம் .
பரியாத்தி மனநிறைவு ; பகுத்தறிகை ; சம்பாதிக்கை .
பரியாயச்சொல் ஒருபொருள் குறித்த மாற்றுச்சொல் .
பரியாயப்பெயர் ஒருபொருட் பல்பெயர் .
பரியாயநாமம் ஒருபொருட் பல்பெயர் .
பரியாயம் மாற்றுச்சொல் ; நானாவிதம் ; பொருளை வெளிப்படையாய்க் கூறாது குறிப்பாய்க் கூறும் அணி ; பரிணாமம் ; தடவை .
பரியாரம் மாற்றுவழி .
பரியாரி காண்க : பரிகாரி .
பரியாலோசனை ஆராய்தல் ; கூர்ந்த யோசனை .
பரியாளம் சூழ்வோர் .
பரிவட்டச்சீலை நேர்த்தியான ஆடை .
பரிவட்டணை மாறுகை ; யாழ்நரம்பு தடவுகை ; விருது .
பரிவட்டம் ஆடை ; கோயில் மரியாதையாக வணங்குவோரின் தலையைச்சுற்றிக் கட்டும் கடவுளாடை ; சீலை ; துண்டுச்சீலை ; தெய்வத்திருமேனியின் உடை ; துக்ககாலத்தில் தலையிற் கட்டுஞ் சீலை ; நெய்வார்கருவி வகை ; காண்க : பரிவேடம் .
பரிவத்தித்தல் சுற்றுதல் .
பரிவதனம் அழுதல் ; நிந்தனை .
பரிவயம் அரிசி ; இளமை .
பரிவர் அன்புடையவர் .
பரிவர்த்திதம் அபிநயக்கைவகை .
பரிவருத்தம் உலகமுடிவு ; சுற்றுதல் ; பொருள் தந்து பொருள்பெறல் ; ஆமை .
பரிவருத்தனம் பண்டமாற்றுகை ; குதிரைநடைவகை .
பரிவருத்தனை பண்டமாற்றுவகை ; ஒன்றற்கொன்று கொடுத்து வேறொன்று கொண்டனவாகக் கூறும் அணி .
பரிவற்சரம் ஆண்டு .
பரிவற்சனம் கொலை ; விடுகை .
பரிவாதம் பழிச்சொல் .
பரிவாரம் ஏவலர் ; சூழ்ந்திருப்போர் ; படை ; மறவர் அகம்படியருள் ஒரு பிரிவினர் ; உறை .
பரிவாரன் வேலைக்காரன் .
பரிவாராலயம் சுற்றுக்கோயில் .
பரிவிரட்டம் தவறு .
பரிவிராசகன் காண்க : பரித்தியாகி .
பரிவிருத்தி கோள்களின் சுற்று ; கிரகசாரவாக்கியம் .
பரிவு அன்பு ; பக்தி ; இன்பம் ; இரக்கம் ; பக்குவம் ; வருத்தம் ; குற்றம் .
பரிவேசம் காண்க : பரிவேடம் .
பரிவேட்டி வலம்வருகை .
பரிவேட்பு பறவை வட்டமிடுகை .
பரிவேடணம் சூழுதல் ; விருந்தினர்க்குப் பரிமாறுகை .
பரிவேடம் சந்திரசூரியரைச் சூழ்ந்து தோன்றும் வட்டம் .
பரிவேடிப்பு சந்திரசூரியரைச் சூழ்ந்து தோன்றும் வட்டம் .
பரிவேதனம் சம்பாத்தியம் ; திருமணம் ; பரந்த அறிவு ; அழுகை ; பெருந்துயரம் .
பரீக்கை காண்க : பரிசீலனை .
பரீட்சணம் காண்க : பரிசீலனை .
பரீட்சித்தல் ஆராய்தல் ; சோதித்தல் .
பரீட்சை தேர்வு ; ஆராய்ச்சி ; பழக்கம் .
பரீதாபி காண்க : பரிதாபி ; நாற்பத்தாறாம் ஆண்டு .
பரு சிறுகட்டி ; சிலந்திநோய் ; கணு ; கடல் ; மலை ; துறக்கம் ; நெல்லின் முளை .
பரு (வி) அருந்து , உண் ; குடி .
பருக்கன் பரும்படியானது .
பருக்குதல் பருகச்செய்தல் ; பெருக்குதல் .
பருக்கென்னுதல் பருத்துக்காட்டுதல் ; கொப்புளித்தல் .
பருக்கை பருமனாதல் ; சோற்று அவிழ் ; காண்க : பருக்கைக்கல் ; பளிங்கு ; புல்லன் ; கோது .
பருக்கைக்கல் சிறு கூழாங்கல் ; பளிங்கு ; சுக்கான்கல் .
பருகல் குடிக்கை ; குடித்தற்குரியது .
பருகு குடிக்கை .
பருகுதல் குடித்தல் ; உண்ணுதல் ; நுகர்தல் .
பருங்கி வண்டு .