பலசித்தி முதல் - பலித்தம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பலசித்தி பயனடைகை .
பலசூதனன் பலன் என்னும் அசுரனைக் கொன்ற இந்திரன் .
பலட்சயம் வலுக்குறைவு ; விளைவிழப்பு .
பலண்டு வெங்காயம் .
பலத்தல் கடுமையாதல் ; வலிமையடைதல் ; செழித்தல் .
பலத்தியாகம் செய்யும் செயலின் பயனை விடுகை .
பலதானம் சிறப்பு நாள்களில் பழத்துடன் அளிக்கும் கொடை ; சாந்திக் கலியாணம் .
பலதேவன் காண்க : பலராமன் .
பலப்படுதல் வலுவடைதல் ; கருவுறுதல் ; பலனுக்கு வருதல் ; நயப்படுதல் .
பலப்பம் ஒரு மாக்கல்வகை ; கற்பலகையில் எழுத உதவும் குச்சி .
பலபட்டடை பலசாதி ; கலப்புச் சாதி ; பலபண்டமுள்ள சாலை ; பல கலப்பானது .
பலபடுதல் பலவாதல் ; கட்சிப்படுதல் .
பலபத்திரன் காண்க : பலராமன் .
பலபத்திரன்படை பலபத்திரனது படையாகிய கலப்பை .
பலபலவெனல் ஒலிக்குறிப்பு ; பொழுது விடியற்குறிப்பு ; கண்ணீர் விரைந்து வடிதற்குறிப்பு .
பலபலெனல் ஒலிக்குறிப்பு ; பொழுது விடியற்குறிப்பு ; கண்ணீர் விரைந்து வடிதற்குறிப்பு .
பலபாடு பலவகைத் துன்பம் ; பல செயல் ; அநேக வகையான நிந்தை .
பலபை சூரியன் மையவரியில் நிற்கையில் சூரியக் கடிகார மத்தியில் விழும் நிழல் .
பலபொருளொருசொல் பலபொருள் கொண்ட ஒரு சொல் .
பலபோகம் பூமியில் பலருக்குரிய தனித்தனி நுகர்ச்சி ; பலனை நுகர்கை .
பலம் வலி ; வேகம் ; படை ; உறுதி ; பருமன் ; நெற்றி ; இலை ; நிறைவகை ; இறைச்சி ; நிமிடம் ; கனி ; காய் ; கிழங்கு ; பயன் ; பொன் ; காண்க : வெட்பாலை ; சாதிக்காய் ; கேடகம் ; மகளிர் சூதகம் ; வட்டத்தின் பரப்பு ; ஆயுத நுனி ; செல்வாக்கு ; கலப்பையின் கொழு ; கணித உறுப்புகளுள் ஒன்று .
பலமிலி காய்ப்பில்லா மரம் .
பலமுகம் பலவழி .
பலமூலசாகாதி கனி , கிழங்கு , இலை முதலியன .
பலர் அநேகர் ; சபை .
பலர்க்கம் கன்னம் .
பலர்பால் உயர்திணைப் பன்மைப்பால் .
பலரறிசுட்டு யாவராலும் அறியப்பட்ட சுட்டு .
பலரறிசொல் பலருமறிந்த செய்தி ; காண்க : பலர்பால் .
பலராமன் திருமாலின் பத்துப் பிறப்புகளுள் கண்ணபிரானுக்குத் தமையனாய் வந்தவர் .
பலலம் சேறு ; பிண்ணாக்கு ; ஊன் .
பலவத்து பயனுள்ளது ; வலிமையுள்ளது .
பலவந்தம் வலாற்காரம் ; கட்டாயம் .
பலவந்தன் முரடன் ; வலிமையுள்ளவன் .
பலவம் குழி ; காய் ; பழம் .
பலவரி மெய்வருக்கம் .
பலவழித்தோன்றல் மருமகன் .
பலவறிசொல் காண்க : பலவின்பால் .
பலவான் வலிமையுடையவன் .
பலவின்பால் ஐம்பாலுள் அஃறிணையிற் பன்மை குறிக்கும் பால் .
பலவினீட்டம் பல பொருள்களின் தொகுதி .
பலவினைச்சிலேடை பல வினைபற்றி வருஞ்சிலேடையணிவகை .
பலவீனம் வலியின்மை ; அசதிநோய் .
பலவு பலாமரம் .
பலவுறுதல் பெருவிலை பெறுதல் .
பலவேலைக்காரன் பலதொழில் செய்பவன் ; கோயிலில் சில்லறை வேலை செய்பவன் .
பலற்காரம் காண்க : பலாத்காரம் .
பலன் விளைச்சல் ; பழம் ; பயன் ; சோதிடபலன் ; இந்திரனால் கொல்லப்பட்ட ஓர் அரக்கன் ; வெங்காயம் .
பலன்காணுதல் போதிய அளவு விளைதல் .
பலா பலாமரம் ; காண்க : சிற்றாமுட்டி .
பலாக்கன் குறும்பார்வையினன் .
பலாக்கினி பித்தம் .
பலாகம் கொக்கு .
பலாகாரம் காண்க : பலகாரம் .
பலாசம் பசுமை ; இலை ; முருக்கமரம் ; பலா மரம் ; காண்க : ஈரப்பலா ; புரசமரம் .
பலாசனம் பழம் உண்ணும் கிளி .
பலாசு முருக்கமரம் .
பலாட்டியம் பலம் ; வலாற்காரம் .
பலாண்டு வெங்காயம் .
பலாத்காரம் கட்டாயப்படுத்துதல் .
பலாந்தம் ஒரு முறை காய்த்துப் பட்டுபோகும் பூண்டு ; காண்க : மூங்கில் .
பலாபலம் வலிமை மெலிமை .
பலாபலன் ஊதியமும் இழப்பும் , இலாப நட்டம் .
பலாயனம் புறங்காட்டியோடுதல் ; நிலை குலைவு .
பலாரெனல் பொழுதுவிடிதற்குறிப்பு .
பலாலம் வைக்கோல் .
பலாற்காரம் காண்க : பலாத்காரம் .
பலான இன்னதென்று அறியப்பட்ட .
பலி வேள்வி முதலியவற்றில் தேவர் , தென்புலத்தார் முதலியோரை முன்னிட்டு இடும் உணவுப்பொருள் ; பலியிடுதற்குரிய உயிரினம் முதலியன ; காக்கை முதலிய உயிரினங்கள் உண்ண இடுஞ் சோறு ; பிச்சை ; சோறு ; பூசையில் அருச்சிக்கும் பூ முதலியன ; சாம்பல் ; திருநீறு ; கப்பம் ; மாவலிச் சக்கரவர்த்தி ; பலிப்பது ; காய்கனிகளுள்ள மரம் ; காக்கை ; மரவகை ; கந்தகம் ; 'பல¦ன் சடுகுடு' என்னும் விளையாட்டுவகை .
பலிக்கந்தம் பலியிடும் இடம் .
பலிகை பிண்ணாக்கு .
பலிகொடுத்தல் தெய்வத்திற்குப் பலியிடுதல் ; கொல்லுதல் .
பலிகொள்ளி பிச்சை ஏற்கும் சிவபெருமான் .
பலிசை ஊதியம் ; இலாபம் ; வட்டி .
பலித்தம் பயன் ; ஊதியம் ; பலிக்கை ; கனிமரம் .