பலித்தல் முதல் - பவனிக்குடை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பலித்தல் நேர்தல் ; பயன்விளைத்தல் ; செழித்தல் ; மிகுதல் ; கொடுத்தல் .
பலிதம் பலிக்கை ; இலாபமாகை ; பயன் ; கனிமரம் ; நரைமயிர் .
பலிதேர்தல் பிச்சையெடுத்தல் .
பலிதை கிழவி .
பலிப்பு வெற்றி ; பயன் ; நன்றாக விளையும் தன்மை ; வினைப்பயன் .
பலிபீடம் பலியிடும் மேடை .
பலிபீடிகை பலியிடும் மேடை .
பலிபுட்டம் பலியால் வளர்க்கப்படும் காக்கை .
பலியம் தளிர் ; பூ .
பலியூட்டுதல் காண்க : பலிகொடுத்தல் .
பலினம் நிறையக் காய்த்திருக்கும் மரம் ; ஞாழல்மரம் ; மிளகு .
பலினி ஞாழல்மரம் ; நிறையக் காய்த்திருக்கும் மரம் ; மல்லிகை ; எலிவகை .
பல¦ எருது ; ஒட்டகம் ; கடா ; கோழை ; பன்றி .
பலு காண்க : பலகறை .
பலுக்குதல் தெளிவாக உச்சரித்தல் ; தற்புகழ்ச்சியாகப் பேசுதல் ; தெளித்தல் .
பலுகம் குரங்கு .
பலுகுகட்டை வயலில் மண்கட்டிகளை உடைத்துப் பரப்புவதற்கான பலகொழுத்தட்டு .
பலுகுதல் பலவாதல் ; மிகுதல் .
பலே 'மிக நன்று' எனும் பொருள்படும் குறிப்புச் சொல் .
பலேந்திரன் வலுவுள்ளவன் .
பலை காண்க : திரிபலை ; பசி , தாகம் முதலியவற்றை யழிக்கும் மந்திரம் ; சிற்றாமுட்டிச் செடி .
பலோத்தமை திராட்சைப்பழவகை .
பலோதகம் பழச்சாறு .
பலோதயம் ஆதாயம் ; பயன்விளைகை ; மகிழ்ச்சி ; வீடுபேறு ; வலிமை .
பலோற்காரம் காண்க : பலாத்காரம் .
பலோற்பதி மாமரம் .
பவ்வம் மரக்கணு ; நிறைநிலா ; பருவகாலம் ; ஆழ்கடல் ; நீர்க்குமிழி ; நுரை .
பவ்வி மலம் ; அழுக்கு .
பவ்வியம் தாழ்மை , அடக்கம் , பணிவு .
பவ அறுபதாண்டுக் கணக்கில் எட்டாம் ஆண்டு .
பவசாகரம் பிறவிக்கடல் .
பவஞ்சம் காண்க : பிரபஞ்சம் .
பவண் கொடி .
பவணம் நாகலோகம் .
பவணர் நாகலோகத்தில் வாழ்நர் .
பவணேந்திரன் இந்திரருள் ஒருவன் .
பவணை கழுகு .
பவத்தல் தோன்றுதல் .
பவதி பார்வதி .
பவந்தம் சூது ; பாசாங்கு .
பவந்தருதல் தோன்றுதல் .
பவநாசன் பிறப்பை அறுக்கும் கடவுள் .
பவம் பிறப்பு ; உலகவாழ்க்கை ; உலகம் ; கரணம் பதினொன்றனுள் ஒன்று ; உண்மை ; பாவம் ; மனவைரம் ; அழிவு ; பதினொன்றை உணர்த்தும் குறிப்புச்சொல் .
பவமானன் வாயுதேவன் .
பவமின்மை இறைவன் எண்குணத்துள் ஒன்றாகிய பிறப்பின்மை .
பவர் நெருக்கம் ; பரவுதல் ; அடர்ந்த கொடி ; பாவிகள் .
பவர்க்கம் நரகம் ; பகரவரிசை .
பவர்தல் நெருங்கியிருத்தல் .
பவரணை நிறைநிலா ; பலகறை .
பவழம் மணிவகை ஒன்பதனுள் ஒன்று .
பவழமல்லிகை ஒரு மரவகை ; காம்பு சிவந்து இதழ் வெண்மையாய் இருக்கும் ஒரு பூவகை , பாரிசாதம் .
பவழவாய் கருத்தங்கும் பை ; பவழம் போன்ற வாய் .
பவளக்காலி பவளநிறக் காலுடைய பறவை வகை ; ஒரு பூண்டுவகை .
பவளக்குறிஞ்சி மருதோன்றி .
பவளக்கொடி கடலில் வளரும் கொடிவகை ; வெற்றிலைவகை ; ஓர் அரசி .
பவளநீர் குருதி , செந்நீர் , இரத்தம் .
பவளநெடுங்குஞ்சியோன் பைரவன் .
பவளப்பழம் முற்றின பவளம் .
பவளப்பூண்டு ஒரு செடிவகை .
பவளம் காண்க : பவழம் .
பவளமணி பவளத்தாலாகிய கையணி .
பவளமல்லிகை காண்க : பவழமல்லிகை .
பவளமாலை பவழத்தாலான கழுத்தணிவகை .
பவளவடம் பவழத்தாற் கட்டிய மாலை ; பவழத்தாலான முன்கை வளை .
பவளவடிவன் சிவந்த வடிவம் உள்ள முருகன் .
பவன் சிவபிரான் ; கடவுள் ; புதிதாய் உண்டாவது ; பதினோர் உருத்திரருள் ஒருவர் .
பவனகுமாரன் அக்கினி .
பவனசம் காற்றை உண்ணும் பாம்பு .
பவனம் அரண்மனை ; வீடு ; பூமி ; உலகப்பொது ; இராசி ; நாகலோகம் ; பாம்பு ; துறக்கம் ; விமானம் ; பூனை ; வாயுதேவன் ; நெல் முதலியன தூற்றுகை .
பவனவாய் காற்றுச் செல்லும் வாசலான மலவாய் .
பவனன் வாயுதேவன் .
பவனாசனம் காண்க : பவனசம் .
பவனாத்துமசன் வாயுவின் மகன் ; அனுமன் ; வீமன் .
பவனி உலாவருகை .
பவனிக்குடை அரசன் உலாவருகையிற் பிடிக்குங் குடை .