சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பவனிவருதல் | உலாவருதல் . |
| பவாயனை | கங்கையாறு . |
| பவானி | பார்வதி ; காவிரியாற்றின் துணையாறு . |
| பவி | இடியேறு ; நீர் . |
| பவிகம் | சிறப்பு . |
| பவிசு | மதிப்பு ; செல்வம் ; ஒளி ; செருக்கு ; ஒழுங்கு . |
| பவிடியம் | எதிர்காலம் ; பதினெண் புராணத்துள் ஒன்று . |
| பவித்தல் | உண்டாதல் . |
| பவித்திரம் | தூய்மை ; காண்க : தருப்பை ; பூணூல் ; தருப்பைப் பவித்திர வடிவான பொன் மோதிரம் ; பசுந்தரநோய் ; துருப்பைப் புல்லாற் செய்த ஒரு முடிச்சு ; திருவிழா ; மாலைவகை ; நெய் ; தேன் . |
| பவித்திரவான் | தூயவன் . |
| பவித்திரன் | தூயவன் . |
| பவித்திரி | தருப்பைப் புல் ; தூயவன் . |
| பவித்திரை | தூய்மையுள்ளவள் . |
| பவுஞ்சு | படை ; ஒழுங்கு . |
| பவுத்தர் | புத்த சமயத்தோர் . |
| பவுத்திரநோய் | மலவாயருகில் உண்டாகும் கட்டிவகை , பகந்தரநோய் . |
| பவுத்திரம் | மலவாயருகில் உண்டாகும் கட்டிவகை , பகந்தரநோய் . |
| பவுத்திரன் | மக்கள்வயிற்றுப் பேரன் . |
| பவுதிகம் | இயற்பியல் ; பூத சம்பந்தமானது . |
| பவுந்திரம் | காண்க : பவுத்திரம் . |
| பவுமன் | செவ்வாய் . |
| பவுரணை | முழுமதி . |
| பவுரம் | முழுமதி . |
| பவுரி | மண்டலமிடுதல் ; மண்டலமாய் ஆடும் கூத்துவகை ; பெரும்பண்வகை . |
| பவுரிசம் | போலியான நடை . |
| பவுருசம் | ஆண்மை . |
| பவுழியன் | பூழிநாட்டை ஆண்டவனான சேரன் . |
| பழக்கம் | வழக்கம் ; பயிற்சி அறிமுகம் ; ஒழுக்கம் ; திறன் ; அமைதிக்குணம் . |
| பழக்கம்காட்டுதல் | தீயொழுக்கத்தை வெளிப்படுத்துதல் . |
| பழக்காய் | செங்காய் . |
| பழக்குதல் | பழகச்செய்தல் . |
| பழகுதல் | பயிலுதல் ; உறவுகொள்ளுதல் ; பதப்படுதல் ; சாதுவாதல் ; இணக்கமாதல் ; ஊடாடுதல் ; நாட்படுதல் . |
| பழங்கஞ்சி | முதல்நாளிலுள்ள கஞ்சி ; புளித்த கஞ்சி . |
| பழங்கண் | துன்பம் ; ஒலி ; மெலிவு . |
| பழங்கணாளர் | துன்புற்றோர் . |
| பழங்கதை | முன்வரலாறு ; மறந்த செய்தி ; தொன்மம் , புராணம் . |
| பழங்கந்தை | கிழிந்த துணி . |
| பழங்கள் | புளித்த கள் . |
| பழங்காதை | காண்க : பழங்கதை . |
| பழங்கிடையன் | பழைய பொருள்கள் . |
| பழங்குடி | பழமையான குடி ; வழிவழியாக நிலைபெற்றுவரும் குடி . |
| பழசு | நாட்பட்டது . |
| பழஞ்சரக்கு | நாட்பட்ட பண்டம் ; பிராரத்த கருமம் . |
| பழஞ்சாதம் | காண்க : பழஞ்சோறு . |
| பழஞ்செருக்கு | மிகுந்த குடிவெறி . |
| பழஞ்சொல் | பழமொழி . |
| பழஞ்சோற்றுத்தண்ணீர் | காண்க : நீராகாரம் . |
| பழஞ்சோறு | பழைய அன்னம் . |
| பழந்தக்கராகம் | ஒரு பழைய பண்வகை . |
| பழநடை | வழக்கம் . |
| பழப்பாக்கு | முதிர்ந்த பாக்கு . |
| பழம் | கனி ; வயது முதிர்ந்தோன் ; கைகூடுகை ; ஆட்டக்கெலிப்பு ; முக்கால் . |
| பழம்பகை | நெடுநாட் பகை ; மனவைரம் ; இயற்கைப் பகை . |
| பழம்பஞ்சுரம் | குறிஞ்சிப்பண்வகை . |
| பழம்படி | முன்போல . |
| பழம்பாக்குவாங்குதல் | கலியாணம் உறுதி செய்தல் . |
| பழம்பாசி | காண்க : கொட்டைப்பாசி ; வெதுப்படக்கி . |
| பழம்பாடம் | படித்த பாடம் ; நினைவாற்றலுடன் நன்றாய் மீண்டும் சொல்லக்கூடிய பாடம் . |
| பழம்பெருச்சாளி | அனுபவமிக்க தந்திரசாலி . |
| பழம்பொருள் | கடவுள் ; பழைய பொருள் ; புதையல் . |
| பழம்போக்கு | பழைய முறை . |
| பழமலை | திருமுதுகுன்றம் , விருத்தாசலம் . |
| பழமனை | இடிந்து பாழான வீடு . |
| பழமா | தேமா . |
| பழமெடுத்தல் | பழத்தைப் பறித்தல் ; ஆட்டங்கெலித்தல் . |
| பழமை | தொன்மை ; தொன்மையானது ; வழங்காதொழிந்தது ; சாரமின்மை ; முதுமொழி ; வெகுநாட் பழக்கம் ; நாட்பட்டதால் ஏற்படும் சிதைவு ; பழங்கதை ; மரபு . |
| பழமைபாராட்டுதல் | நெடுநாளாக உள்ள பழக்கத்தைத் தெரிவித்தல் . |
| பழமொழி | முதுசொல் ; பதிணெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று . |
| பழரசம் | பழச்சாறு . |
| பழவடியார் | வழித்தொண்டர் . |
| பழவரிசி | குற்றிப் பழகிய அரிசி . |
| பழவினை | முன்வினை . |
| பழனம் | வயல் ; மருதநிலம் ; பொய்கை . |
| பழனல்வெதிர் | கரும்பு . |
| பழனவெதிர் | கரும்பு . |
|
|
|