பழனியாண்டவன் முதல் - பள்குதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பழனியாண்டவன் பழனியில் கோயில் கொண்டுள்ள முருகக் கடவுள் .
பழனியாண்டி பழனியில் கோயில் கொண்டுள்ள முருகக் கடவுள் .
பழனிவேலன் பழனியில் கோயில் கொண்டுள்ள முருகக் கடவுள் .
பழி குற்றம் ; நிந்தை ; அலர் ; குறை ; பாவம் ; பழிக்குப் பழி ; பொய் ; பகைமை ; ஒன்றுக்கும் உதவாதவன் .
பழிக்குடி பழம்பகைகொண்ட குடும்பம் ; ஏழைக்குடி .
பழிக்குவிடுதல் அழியவிடுதல் .
பழிகரப்பங்கதம் வசையைக் குறிப்புப் பொருளாகக் கொண்ட செய்யுள்வகை .
பழிகரப்பு வசையைக் குறிப்புப் பொருளாகக் கொண்ட செய்யுள்வகை .
பழிகாரன் பிறர்மேல் பழிகூறுபவன் ; படுபாவி .
பழிகிடத்தல் தன்செயல் நிறைவேற ஒருவன் வீட்டுவாயிலில் உண்ணாமல் இருத்தல் .
பழிச்சு துதி .
பழிச்சுதல் புகழ்தல் ; வணங்குதல் ; வாழ்த்துதல் ; கூறுதல் .
பழிச்சொல் நிந்தை ; அலர் .
பழிசுமத்தல் நிந்தனையேற்றல் ; பழி ஒருவன் மேல் வருதல் ;
பழிசுமத்துதல் அநியாயமாகக் குற்றஞ்சாட்டுதல் .
பழிசை இகழ்ச்சி .
பழித்தல் நிந்தித்தல் ; புறங்கூறுதல் .
பழித்துரை காண்க : பழிச்சொல் .
பழிதீர்த்தல் பழிவாங்குதல் ; பாவம் போக்குதல் .
பழிதூற்றுதல் புறங்கூறுதல் ; அலர்பரப்புதல் .
பழிநாணல் பழிபாவத்திற்கு அஞ்சுதல் .
பழிப்பனவு பழிப்பான செயல் .
பழிப்பு நிந்தை ; குற்றம் ; குறளை ; குறை .
பழிப்புக்காரன் நிந்திப்போன் ; நகைப்புக்கு இடமானவன் .
பழிப்புவமை உவமேயத்தை உயர்த்தி உவமானத்தைப் பழிக்கும் அணி .
பழிபாதகம் பெரும்பாதகம் .
பழிபோடுதல் காண்க : பழிசுமத்துதல் .
பழிமுடித்தல் காண்க : பழிவாங்குதல் .
பழிமுடிதல் பகைமூட்டுதல் .
பழிமூட்டுதல் கோட்சொல்லுதல் .
பழிமூளுதல் பகையுண்டாகை .
பழிமொழி நிந்தனை ; புறங்கூறுகை .
பழியேற்றல் குற்றப் பொறுப்பைத் தாங்குதல் .
பழிவாங்குதல் தீமைக்குத் தீமை செய்தல் .
பழிவேலை வருத்தி வாங்கப்படும் வேலை .
பழு பொன்னிறம் ; விலாவெலும்பு ; விலா ; ஏணியின் படிச்சட்டம் ; சட்டம் ; பேய் .
பழுக்க முற்றவும் .
பழுக்கக்காய்ச்சுதல் சிவக்கக் காய்ச்சுதல் .
பழுக்கச்சுடுதல் நிறம் ஏறப் பொன்னைத் தீயில் காய்ச்சுதல் .
பழுக்கப்போடுதல் ஒரு செயல் முடிவதற்குக் காத்திருத்தல் .
பழுக்காய் பழுத்த பாக்கு ; மஞ்சள் கலந்த செந்நிறம் ; தேங்காய் ; சாயநூல் .
பழுக்காய்நூல் சாயமிட்ட நூல் .
பழுக்குறை எண் குறைந்த விலாவெலும்புகளையுடைய எருதுவகை .
பழுத்தபழம் முதிர்ந்த கனி ; முதிர்கிழவன் ; பக்குமடைந்தவன் ; தீமையிற் கைதேர்ந்தவன் .
பழுத்தல் பழமாதல் ; முதிர்தல் ; மூப்படைதல் ; பக்குவமாதல் ; கைவருதல் ; பரு முதலியன முற்றுதல் ; மனங்கனிதல் ; நிறம் மாறுதல் ; நன்மையாதல் ; செழித்தல் ; மிகுதல் ; பழுப்பு நிறமாதல் ; குழைதல் ; காரம் முதலியன கொடாமையால் பிள்ளை பெற்ற வயிறு பெருத்தல் .
பழுது பயனின்மை ; குற்றம் ; சிதைவு ; பதன் அழிந்தது ; பிணமாயிருக்குந் தன்மை ; பொய் ; வறுமை ; தீங்கு ; உடம்பு ; ஒழுக்கக்கேடு ; இடம் ; நிறைவு .
பழுதுபடல் சீர்கெடல் .
பழுதுபார்த்தல் கெட்டதைச் செப்பனிடுதல் .
பழுதை வைக்கோற்புரி ; கயிறு ; பாம்பு .
பழுப்படைதல் பூங்காவி நிறமாதல் .
பழுப்பு பொன்னிறம் ; அரிதாரம் ; முதிர்ந்து மஞ்சள் நிறப்பட்ட இலை ; சிவப்பு ; சீழ் ; ஏணியின் படிச்சட்டம் .
பழுப்புப்பொன் செம்பொன் .
பழுப்பேறுதல் காண்க : பழுப்படைதல் .
பழுபாகல் ஒரு பாகற்கொடிவகை ; காண்க : தும்பை .
பழுமணி மாணிக்கம் .
பழுமரம் ஆலமரம் ; பழுத்த மரம் .
பழுவம் காடு ; தொகுதி .
பழுவெலும்பு விலாவெலும்பு .
பழுனுதல் முதிர்தல் ; கனிதல் ; முற்றுப்பெறுதல் .
பழூஉ பேய் .
பழை கள் .
பழைஞ்சோறு காண்க : பழஞ்சோறு .
பழைமை தொன்மை ; தொன்மையானது ; வழங்காதொழிந்தது ; சாரமின்மை ; முதுமொழி ; நெடுநாட் பழக்கம் ; பழங்கதை ; மரபு ; நாட்பட்டதால் ஏற்படும் சிதைவு .
பழைய நாட்பட்ட .
பழையது நாட்பட்டது ; பழஞ்சோறு .
பழையநாள் பண்டைக்காலம் .
பழையபடி முன்போல ; மறுபடியும் .
பழையமனிதன் வயதுமுதிர்ந்தவன் ; பாவநிலையிலுள்ள மனிதன் .
பழையர் முன்னோர் ; கள் விற்போர் .
பழையவமுது காண்க : பழஞ்சோறு .
பழையவேற்பாடு பண்டை வழக்கம் ; விவிலிய நூலின் பூர்வாகமம் .
பழையோன் தொன்மையானவன் ; நீண்டகால நட்புடையவன் .
பழையோள் துர்க்கை .
பள் பள்ளச்சாதி ; நாடகநூல்வகை ; காளி முதலிய தெய்வங்கட்குப் பலிகொடுக்கும் காலத்துப் பாடப்படும் பண்வகை .
பள்குதல் பதுங்குதல் .