சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பள்ளக்காடு | தாழ்ந்த நிலப்பகுதி . |
| பள்ளக்கால் | காண்க : பள்ளக்காடு ; தாழ்ந்த நன்செய் நிலம் ; தாழ்விடத்துப் பாயும் வாய்க்கால் . |
| பள்ளக்குடி | பள்ளச்சாதி ; பள்ளர் குடியிருக்கும் இடம் . |
| பள்ளச்சி | பள்ளச்சாதிப் பெண் . |
| பள்ளத்தாக்கு | மலைகளின் நடுவே உள்ள இடம் ; தாழ்ந்த நிலம் . |
| பள்ளநாலி | தாழ்விடத்துப் பாயும் நீர்க்கால் . |
| பள்ளம் | தாழ்வு ; தாழ்ந்த நிலம் ; ஆழம் ; குழி ; முகம் , கால் இவற்றில் உள்ள குழிவு . |
| பள்ளம்பறித்தல் | குழிதோண்டுதல் ; ஒருவனைக் கெடுக்க முயலுதல் . |
| பள்ளமடை | தாழ்ந்தவிடத்துப் பாயும் நீர்க்கால் ; பள்ளமான வயலுக்குப் பாயும்படி வைக்கப்பட்ட மடை ; தாழ்ந்தவிடத்தில் வேகமாய்ப் பாயும் நீரோட்டம் ; எளிதாகப் பாய்தற்கு இயலும் பூமி ; எளிதில் நிகழ்வது . |
| பள்ளயம் | காண்க : பள்ளையம் . |
| பள்ளர் | உழவர் ; ஒரு சாதியார்வகை . |
| பள்ளவோடம் | படகுவகை . |
| பள்ளாடு | குள்ளமான ஆட்டுவகை . |
| பள்ளி | கல்வி கற்குமிடம் ; அறை ; அறச்சாலை ; இடம் ; சிற்றூர் ; இடைச்சேரி ; நகரம் ; முனிவர் இருப்பிடம் ; சமண பௌத்தக் கோயில் ; அரசருக்குரிய அரண்மனை முதலியன ; பணிக்களம் ; மக்கட் படுக்கை ; கிறித்துவக் கோயில் ; பள்ளிவாசல் ; தூக்கம் ; விலங்கு துயிலிடம் ; சாலை ; வன்னியச் சாதி ; குள்ளமானவள் ; குறும்பர் . |
| பள்ளிக்கட்டில் | அரியணை . |
| பள்ளிக்கட்டு | இளவரசியின் திருமணம் ; ஊர் உண்டாக்குகை . |
| பள்ளிக்கணக்கன் | பள்ளிக்கூடச் சிறுவன் . |
| பள்ளிக்கணக்கு | பள்ளிக்கூடத்துப் படிப்பு . |
| பள்ளிகிராமம் | கோயிற்குரிய ஊர் . |
| பள்ளிக்குவைத்தல் | பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவைத்தல் . |
| பள்ளிக்குறிப்பு | தூக்கக் குறி . |
| பள்ளிக்கூடத்துத்தம்பி | ஊரில் எழுதப்படிக்கத் தெரிந்தவன் . |
| பள்ளிக்கூடம் | கல்வி கற்குமிடம் . |
| பள்ளிக்கொண்டபெருமாள் | கிடந்த திருக்கோலங்கொண்ட திருமால் . |
| பள்ளிகொண்டான் | கிடந்த திருக்கோலங்கொண்ட திருமால் . |
| பள்ளிகொள்ளுதல் | துயில்கொள்ளுதல் . |
| பள்ளிச்சந்தம் | சமண பௌத்தக் கோயில்களுக்கு வழங்கப்பட்ட ஊர் . |
| பள்ளித்தாமம் | இறைவனுக்குச் சாத்தும் மாலை . |
| பள்ளித்தேவாரம் | அரண்மனையில் வணங்கும் தெய்வம் ; அரண்மனைத் தெய்வத்துக்குரிய பூசை . |
| பள்ளித்தோழமை | பள்ளிக்கூடத்து நட்பு . |
| பள்ளிப்பிள்ளை | மாணாக்கன் . |
| பள்ளிப்பீடம் | காண்க : பள்ளிக்கட்டில் . |
| பள்ளிபடை | அரசர் முதலியோர்க்குப் புரியும் ஈமக்கடன் ; இறந்த அரசரின் நினைவாகக் கட்டப்பட்ட கோயில் . |
| பள்ளிபருத்தல் | அரசர் முதலியோர்க்கு ஈமக் கடன் செய்தல் . |
| பள்ளிமண்டபம் | காண்க : பள்ளியறை . |
| பள்ளிமாடம் | காண்க : பள்ளியறை . |
| பள்ளியந்துலா | படுக்கைப் பல்லக்கு . |
| பள்ளியம்பலம் | காண்க : பள்ளிமாடம் . |
| பள்ளியயர்தல் | உறங்குதல் . |
| பள்ளியறை | துயிலிடம் . |
| பள்ளியெழுச்சி | துயிலெழுப்புதல் ; காண்க : திருபள்ளியெழுச்சி ; அரசர் முதலியோரைத் துயிலெழுப்பும் சிற்றிலக்கியவகை . |
| பள்ளியோடம் | காண்க : பள்ளவோடம் . |
| பள்ளியோடவையம் | பள்ளியோடம்போன்ற வண்டி . |
| பள்ளிவாசல் | முகமதியர் மசூதி . |
| பள்ளு | உழத்திப் பாட்டு , ஒரு சிற்றிலக்கிய வகை ; காண்க : பள் . |
| பள்ளை | குள்ளம் ; ஆடு ; குள்ளமான ஆட்டு வகை ; வயிறு ; பருத்த உயிரினம் . |
| பள்ளைச்சி | குள்ளமானவள் . |
| பள்ளையம் | உண்கல :ம் ; சிறுதெய்வங்களுக்குப் படைக்கும் பொருள் . |
| பள்ளையம்போடுதல் | தெய்வத்துக்குமுன் அன்னம் , கறி முதலியவற்றைப் படைத்தல் . |
| பள்ளையன் | குறுகிப் பருத்தவன் . |
| பள்ளையாடு | காண்க : பள்ளாடு . |
| பளக்கு | கொப்புளம் . |
| பளகம் | பவளம் ; மலை . |
| பளகர் | மூடர் ; குற்றமுடையவர் . |
| பளகு | குற்றம் . |
| பளபளத்தல் | ஒளிர்தல் . |
| பளபளப்பு | ஒளி ; பாடல்நயம் . |
| பளபளவெனல் | ஒளிக்குறிப்பு ; ஒலிக்குறிப்பு . |
| பளாபளா | வியப்புக்குறிப்பு ; இன்மைக் குறிப்பு . |
| பளிக்கறை | பளிங்குப் கற்களால் கட்டப்பட்ட மாளிகை . |
| பளிக்கறைமண்டபம் | பளிங்குப் கற்களால் கட்டப்பட்ட மாளிகை . |
| பளிக்காய் | பச்சைக்கருப்பூரங் கலந்த பாக்கு . |
| பளிக்குமாடம் | கண்க ; பளிக்கறைமண்டபம் . |
| பளிங்கு | படிகம் ; கண்ணாடி ; கருப்பூரம் ; சுக்கிரன் ; தோணிக்கயிறு ; புட்பராகம் ; காண்க : அழுங்கு . |
| பளிச்சிடுதல் | ஒளிவீசுதல் . |
| பளிச்சுப்பளிச்செனல் | ஒளிவீசுதற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; தெளிவுக்குளிப்பு ; வேதனைக்குறிப்பு . |
| பளிச்செனல் | ஒளிவீசுதற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; தெளிவுக்குளிப்பு ; வேதனைக்குறிப்பு . |
| பளிஞ்சி | தோணிக்கயிறு . |
| பளிதச்சுண்ணம் | பச்சைக்கருப்பூரம் கலந்த பொடி . |
| பளிதம் | கருப்பூரம் ; பச்சைக்குருப்பூரம் ; பச்சடி ; ஒரு பேரெண் . |
| பளீரெனல் | ஒலிக்குறிப்பு ; ஒளிவீசுதற்குறிப்பு ; வேதனைக்குறிப்பு . |
| பளு | பாரம் ; கனம் ; கடுமை . |
| பளுவு | பாரம் ; கனம் ; கடுமை . |
| பளை | வளை ; விலங்கு முதலியவற்றின் வளை . |
| பற்கடித்தல் | கோபம் முதலியவற்றால் பல்லைக் கடித்தல் . |
|
|
|