சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பற்காட்டுதல் | சிரித்தல் ; பல்லைக் காட்டிக் கெஞ்சுதல் . |
| பற்காவி | தாம்பூலம் முதலியவற்றால் பல்லில் ஏறிய காவி . |
| பற்காறை | பற்களில் கட்டியாய்த் திரண்டிருக்கும் ஊத்தை ; காண்க : பற்காவி ; பற்களில் ஏற்றிய கறுப்புக்கறை . |
| பற்குச்சி | பல் விளக்குங் குச்சி . |
| பற்குடைச்சல் | பல்நோவு ; சொத்தைப் பல் . |
| பற்குத்து | பல்நோவு . |
| பற்குறி | பற்பட்ட குறி ; புணர்ச்சிக் காலத்து மகளிர் உறுப்பில் ஆடவர் பற்பட்டு உண்டாகும் தழும்பு . |
| பற்குனி | காண்க : பங்குனி . |
| பற்சர் | பகைவர் . |
| பற்சன்னியன் | வருணன் . |
| பற்சனம் | நிந்தை . |
| பற்சீவுங்கோல் | பற்குச்சி . |
| பற்சீவுதல் | பல் விளக்குதல் . |
| பற்சொத்தை | பல்லிற் பூச்சிவிழும் நோய் . |
| பற்படகம் | காண்க : பற்பாடகம் . |
| பற்பணம் | ஒரு பலம் உள்ள நிறையளவு . |
| பற்பதம் | மலை . |
| பற்பநாபன் | காண்க : பதுமநாபன் . |
| பற்பம் | தூள் ; திருநீறு ; நீற்றுமானப் பொருள் ; தாமரை ; ஒரு பேரெண் ; பதினெண் புராணத்துள் ஒன்று . |
| பற்பராகம் | மாணிக்கவகை . |
| பற்பரோகம் | கண்ணிமையில் செஞ்சதை வளர்ந்திருக்கும் நோய்வகை . |
| பற்பல | மிகுதியானவை . |
| பற்றைகொட்டுதல் | குளிரால் பல் ஒன்றோடொன்று தாக்கி ஒசையுண்டாக்குதல் . |
| பற்பாடகம் | ஒரு மருந்துப்பூடுவகை . |
| பற்பொடி | பல்விளக்க உதவும் தூள் . |
| பற்ற | முன்னிட்டு ; ஒட்ட ; காட்டிலும் . |
| பற்றடித்தல் | சுவர் முதலியவற்றிற்கு ஒட்டிடுதல் . |
| பற்றடைப்பு | பயிரிடுதற்காக நிலத்தைக் குடிகளிடம் விடுங் குத்தகை . |
| பற்றம் | கற்றை ; கூட்டம் ; துணையாகப் பிடிக்கை ; வீக்கம் ; நன்றியறிவு ; கனம் . |
| பற்றலம்புதல் | சமைத்த பாண்டங்களைக் கழுவுதல் . |
| பற்றலர் | காண்க : பற்றார் . |
| பற்றவைத்தல் | உலோகங்களைப் பொருத்துதல் ; தீமூட்டல் ; பகைவிளைத்தல் . |
| பற்றற்றான் | பற்றற்றவனான கடவுள் . |
| பற்றற | முழுதும் . |
| பற்றறுதி | முழுதுந் தொடர்பறுகை . |
| பற்றாக்கை | அம்புத்திரள் ; அம்புத்திரள் கட்டும் கயிறு . |
| பற்றாசு | உலோகங்களைப் பொருத்த இடையிலிடும் பொடி ; பற்றுக்கோடு ; தஞ்சம் ; காரணம் ; ஓர் அசைவகை . |
| பற்றாதது | சிறுமையானது ; போதாதது ; கொஞ்சம் . |
| பற்றாப்படி | போதியதும் போதாததுமானது ; குறைவு . |
| பற்றாப்போரி | தகுதியற்ற எதிரி . |
| பற்றாமாக்கள் | காண்க : பற்றார் . |
| பற்றாயம் | பெரும்பெட்டி ; உயிரினங்களைப் பிடிக்கவும் அடைக்கவும் உதவும் கூண்டு , பொறி முதலியன . |
| பற்றாயார் | முனிவர் . |
| பற்றார் | பகைவர் . |
| பற்றி | உலோகங்களைப் பொருத்த உதவும் பொடி ; குறித்து . |
| பற்றிப்படர்தல் | கொடிபடர்தல் ; குடும்பஞ் செழித்தல் . |
| பற்றிப்பிடித்தல் | தொடர்ந்துநிற்றல் ; நன்றாய்ப் பிடித்தல் ; சோறு வெந்து கரிந்துபோதல் . |
| பறறியெரிதல் | தீமூண்டெரிதல் ; சினம் மூளுதல் . |
| பற்றிரும்பு | இணைக்கும் தகட்டிரும்பு . |
| பற்றிலார் | பகைவர் ; உலகப் பற்றற்றவரான முனிவர் . |
| பற்றிலான் | காண்க : பற்றற்றான் . |
| பற்றிலி | தரிசுநிலம் . |
| பற்றின்மை | இறைவன் எண்குணத்துள் ஒன்றாகிய விருப்பின்மை . |
| பற்றினர் | உறவினர் ; நண்பர் . |
| பற்று | பிடிக்கை ; ஏற்றுக்கொள்கை ; அகப்பற்றுப் புறப்பற்றுகளாகிய விருப்புகள் ; சம்பந்தம் ; ஒட்டு ; பற்றாசு ; பசை ; சமைத்த பாண்டத்தில் பற்றிப் பிடித்திருக்கும் சோற்றுப்பருக்கை ; சோற்றுப்பருக்கை ஒட்டியுள்ள பாத்திரம் ; உரிமையிடம் ; தங்குமிடம் ; பல ஊர்களுடைய நாட்டுப்பகுதி ; பெற்றுக் கொண்ட பொருள் ; பற்றுக்கோடு ; தூண் ; அன்பு ; நட்பு ; வீட்டுநெறி ; செல்வம் ;இல்வாழ்க்கை ; வயல் ; கட்டு ; கொள்கை ; மருந்துப் பூச்சி ; வாரப்பாடல் ; சிற்றூர் ; கலவைச் சுண்ணாம்புவகை . |
| பற்று | (வி) ஊன்று : பிடி ; கைக்கொள் . |
| பற்றுக்கால் | தாங்குகட்டை ; பொய்க்கால் . |
| பற்றுக்குறடு | ஒரு கம்மக்கருவிவகை . |
| பற்றுக்கொடிறு | ஒரு கம்மக்கருவிவகை . |
| பற்றுக்கோடு | ஆதாரம் ; பற்றுக்கோல் ; கட்டுத்தறி ; அடைக்கலம் . |
| பற்றுக்கோல் | ஊன்றுகோல் ; மாடுகளுக்குச் சூடுபோட உதவும் இருப்புக்கோல் ; ஈயம் பற்ற வைக்குங் கருவி ; கம்மக்கருவியினொன்று . |
| பற்றுச்சீட்டு | ரசீது ; சாகுபடிக் குத்தகைப் பத்திரம் . |
| பற்றுதல் | பிடித்தல் ; பயனறுதல் ; ஊன்றிப்பிடித்தல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; மனத்துக் கொள்ளுதல் ; தொடுதல் ; உணர்தல் ; தொடர்தல் ; நிறம்பிடித்தல் ; தீ முதலியன மூளுதல் ; தகுதியாதல் ; ஒட்டுதல் ; பொருந்துதல் ; போதியதாதல் ; உறைத்தல் ; உண்டாதல் ; பொறுத்தல் . |
| பற்றுப்போடுதல் | பூச்சுமருந்து தடவுதல் . |
| பற்றுமஞ்சள் | நிறம்பிடிக்கும் பூச்சுமஞ்சள் . |
| பற்றுவரவு | கொடுக்கல்வாங்கல் ; கணக்கின் வரவுசெலவுக் குறிப்பு . |
| பற்றுவாய் | பற்றுவைக்கும் இடம் ; துப்பாக்கியில் மருந்திடும் துளை . |
| பற்றுவைத்தல் | ஆசைகொள்ளுதல் ; அன்பு வைத்தல் . |
| பற்றுள்ளம் | இவறல் , பொருளின்மேல் விருப்பு . |
| பற்றை | காண்க : செங்காந்தள் ; தூறு ; தொகுதி ; கீழோன் . |
| பற்றைச்சி | விலைமகள் . |
| பறக்கடித்தல் | துரத்துதல் ; சிதறடித்தல் . |
| பறக்கவிடுதல் | வானத்திற் செல்லும்படி செய்தல் ; தொந்தரவுசெய்தல் ; கெடுத்தல் ;உதவி செய்யாது கைவிடுதல் . |
| பறகுபறகெனல் | சொறிதற்குறிப்பு . |
| பறங்கி | பூசணிக்காய்வகை ; ஒரு மேகநோய் ; ஐரோப்பியன் ; சட்டைக்காரன் . |
|
|
|