பறங்கிக்காய் முதல் - பறையறைதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பறங்கிக்காய் பூசணிக்காய்வகை .
பறங்கிக்காரன் ஐரோப்பியன் ; சட்டைக்காரன் .
பறங்கிச்சாம்பிராணி பெரிய மரவகை ; சாம்பிராணிவகை .
பறங்கிப்பட்டை ஒரு கொடிவகை .
பறங்கிவியாதி ஒருநோய்வகை .
பறட்டை செழிப்பற்றது ; இன்மையைக் குறிக்கும் ஒரு விளையாட்டுக் குறியீடு ; தூற்று மயிர் ; பறட்டைக்கீரை ; ஒரு நிந்தைமொழி .
பறட்டைச்சி தூறுபோன்ற தலைமயிர் , உடையவள் .
பறட்டைத்தலை தூறடர்ந்த மயிர்த்தலை .
பறட்டையன் தூறடர்ந்த மயிர்த்தலையன் .
பறண்டுதல் நகத்தால் சுரண்டுதல் .
பறண்டை ஒரு வாத்தியவகை ; கைம்முட்டியின் மொழி .
பறத்தல் பறவை , பஞ்சு முதலியன வானத்தில் பறத்தல் ; வேகமாக ஓடுதல் ; விரைவுபடுத்தல் ; அமைதியற்று வருந்துதல் ; சிதறியொழிதல் .
பறதி பறத்தல் ; பதற்றம் .
பறந்தடித்தல் கவலையால் விரைவுபடுதல் .
பறந்தலை பாழிடம் ; பாலைநிலத்தூர் ; சுடுகாடு ; போர்க்களம் ; படைவீடு .
பறப்பன் தேள் ; விருச்சிகராசி ; அவசரக்காரன் .
பறப்பன சிறகுடைய உயிரிகள் .
பறப்பு பறக்கை ; விரைவு ; கவலை .
பறப்புப்பார்த்தல் அன்றாட வேலையைக் கவனித்தல் .
பறப்பை பறவை ; பறவை வடிவமாகச் செய்த வேள்விமேடை ; வேள்வியில் நெய்வைக்கும் பாத்திரம் .
பறப்பைப்படுத்தல் கருடன் , பருந்து முதலிய பறவைவடிவாக வேள்விமேடை அமைத்தல் .
பறபறத்தல் மிக விரைதல் ; பறபறவென்று ஒலித்தல் .
பறபறெனல் விரைவுக்குறிப்பு ; துணி கிழித்தல் முதலியன நிகழும்போது உண்டாகும் ஒலிக்குறிப்பு .
பறம்பர் தோல்வேலை செய்பவர் .
பறம்பி மோசக்காரி .
பறம்பு மலை ; பாரியின் மலை ; பாரியின் நாடு ; முலை .
பறம்புதல் அடித்தல் .
பறல் பறவை .
பறவாதி பேராசைக்காரன் ; விரைவுடையோன் ; விரைவு .
பறவை புள் ; இறகு ; பறக்கை ; வண்டு ; அவிட்டநாள் ; அம்மைவகை .
பறவைமாநாகம் காண்க : குக்குடசர்ப்பம் .
பறவையணில் மலையில் வாழும் பறக்கும் அணில்வகை .
பறவைவேந்தன் பறவைக்கு அரசனான கருடன் .
பறழ் பருப்பு ; மரங்களில் வாழ்வன , தவழ்வன , மூங்கா , வெருகு , எலி , அணில் , நாய் , பன்றி , புலி , முயல் , நரி , இவற்றின் இளமைப்பெயர் .
பறளிகை காண்க : பற்றிரும்பு ; தளவரிசைப் படை ; உலோகத்தகடு ; குறடு .
பறளை காண்க : பற்றிரும்பு ; தளவரிசைப் படை ; உலோகத்தகடு ; குறடு .
பறாண்டுதல் காண்க : பிறாண்டுதல் .
பறி பிடுங்குகை ; கொள்ளை ; இறக்கின பாரம் ; மீன்பிடிக்குங் கருவி ; பனையோலைப் பாய் ; உடம்பு ; பொன் .
பறிக்கல் கிட்டம் .
பறிகாரன் அநியாயக்காரன் ; வழிப்பறி செய்வோன் .
பறிகொடுத்தல் களவு கொடுத்தல் ; சாகக் கொடுத்தல் .
பறித்தல் செடியிலிருந்து இலை முதலியவற்றை வலிய நீக்குதல் ; பிடுங்குதல் ; வலிதிற்கவர்தல் ; தோண்டுதல் ; பாரம் இறக்குதல் ; அழித்தல் ; நீக்குதல் .
பறிதல் ஓடிப்போதல் ; நிலைபெயர்தல் ; வெளிப்படுதல் ; எய்யப்படுதல் ; ஒலியுடன் வெளிப்படுதல் ; கட்டவிழ்த்தல் ; இல்லாமற் போதல் ; சேய்மைநிலையாதல் ; ஒட்டிப்போதல் ; திரட்டப்படுதல் ; அறுதல் ; உண்டாதல் ; தணிதல் ; தீர்மானப்படாதிருத்தல் ; தப்பிப் போதல் ; முன்செல்லுதல் ; ஊடுருவுதல் .
பறிதலைக்கையர் தலைமயிரைப் பறித்துக் கொள்ளும் அமணர் .
பறிதலையர் தலைமயிரைப் பறித்துக் கொள்ளும் அமணர் .
பறிபோதல் கொள்ளையிடப்படுதல் .
பறிபோடுதல் மீன்பிடிக்கப் பறிவைத்தல் .
பறிமணல் பொன்மணல் .
பறிமுதல் அரசால் கவர்ந்துகொள்ளப்பட்ட பொருள் ; கொள்ளையிடப்பட்ட பொருள் .
பறிமுறை பல் வீழ்ந்து முளைத்தல் .
பறியோலை பனையோலைப் பாய் .
பறிவு கழிவு ; அதிர்கை ; நிலைபெயர்கை ; ஒட்டிப்போகை .
பறிவை செடிவகை ; சீந்திற்கொடி ; காண்க : நந்தியாவட்டம் ; தாழை .
பறுகு சிறுதூறு ; குள்ளம் .
பறுணி கொள்ளு ; சீந்திற்கொடி ; காண்க : பெருங்குமிழ் ; வல்லாரை ; பெருங்குரும்பை .
பறை தோற்கருவி ; தப்பு ; பறையடிக்குஞ் சாதி ; வட்டம் ; சொல் ; விரும்பிய பொருள் ; ஒரு முகத்தலளவை ; மரக்கால் ; நூல்வகை ; வரிக்கூத்துவகை ; குகை ; பறத்தல் ; பறவை இறகு ; பறவை .
பறைக்கோலம் இழிவான கோலம் .
பறைகொட்டுதல் தப்படித்தல் ; மேளமடித்தல் ; பல் முதலியன ஒன்றுடன் ஒன்று அடித்துக் கொள்ளுதல் .
பறைச்சல் பேச்சு .
பறைச்சி பறைக்குடிப் பெண் .
பறைச்சேரி பறையர் வாழும் இடம் .
பறைசாற்றுதல் காண்க ; பறையறைதல் ; இரகசியத்தை வெளிப்படுத்துதல் .
பறைத்தல் சொல்லுதல் ; நீக்குதல் .
பறைத்துடைவை பறை அடிப்பவர்களுக்கு விடப்படுகிற தோட்டம் முதலிய மானிய வருவாய் .
பறைதட்டுதல் காண்க : பறையறைதல் .
பறைதல் சொல்லல் ; தேய்தல் ; அழிதல் .
பறைப்பருந்து கரும்பருந்து .
பறைப்பேச்சு கொச்சைச்சொல் ; செயல் நிறைவேறாத பேச்சு .
பறைபடுத்துதல் காண்க : பறையறைதல் .
பறைமுறைசாற்றுதல் பறையடித்தறிவித்தல் .
பறைமேளம் பறையர் தப்பட்டை ; அலப்புவோன் .
பறைமை வரிக்கூத்துவகை ; ஊர்ச் சுதந்தரவகை .
பறையடித்தல் காண்க : பறையறைதல் .
பறையலகு காண்க : பலகறை .
பறையறைதல் செய்தி தெரிவித்தற்குப் பறையடித்தல் ; நெஞ்சடித்தல் .