பாங்கி முதல் - பாசிலை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பாங்கி தலைவியின் தோழி ; பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும் நிதிச்சாலை .
பாங்கினம் ஆயம் .
பாங்கு அழகு ; பக்கம் ; இடம் ; ஒப்பு ; நன்மை ; தகுதி ; நலம் ; இயல்பு ; ஒழுக்கம் ; தோழமை ; துணையானவர் ; இணக்கம் ; ஒருசார்பு ; நாணயம் ; வழி ; தொழுமிடம் ; ஆட்டுக்கிடை மறிப்பதற்குரிய விரியோலை முதலியன .
பாங்குபண்ணுதல் நல்லுடை தரித்தல் .
பாங்கோர் நட்பினர் ; பக்கத்திலுள்ளவர் ; சார்பாயுள்ளவர் .
பாச்சல் காண்க : பாய்ச்சல் .
பாச்சி தாய்ப்பால் .
பாச்சிகை சூதாடுகருவி .
பாச்சியம் பகுதி ; வகுக்கப்படும் எண் .
பாச்சுருட்டி நெய்த ஆடையைச் சுருட்டும் நெசவுத் தறிமரம் .
பாச்சுற்றி நெய்த ஆடையைச் சுருட்டும் நெசவுத் தறிமரம் .
பாச்சை புத்தகப்பூச்சி ; தத்துப்பூச்சிவகை ; சுவர்க்கோழி ; கரப்பு .
பாசக்கட்டு பிறப்பிற்குக் காரணமான உயிர்த்தளை .
பாசக்கயிறு சுருக்குக்கயிறு .
பாசகம் உண்ட உணவைச் செரிப்பதற்காக இரைப்பையில் உண்டாகும் நீர் ; வகுக்குமெண் .
பாசகரன் பாசத்தைக் கையிலுடைய யமன் .
பாசகன் காண்க : பாகுவன் .
பாசகுசுமம் இலவங்கமரம் .
பாசஞானம் வாக்குகளாலும் கலாதி ஞானத்தாலும் அறியும் அறிவு ; அறியாமை .
பாசடம் வெற்றிலை .
பாசடை பசுமையான இலை .
பாசண்டச்சாத்தன் சமயநூல்களில் வல்லவனான ஐயனார் .
பாசண்டம் தொண்ணூற்றாறுவகைச் சமயசாத்திரக் கோவை ; புறச்சமயக் கொள்கை ; வேத ஒழுக்கத்திற்கு வேறான சமயம் .
பாசண்டிமூடம் புறமதத்தவரைப் போற்றும் மடமை .
பாசத்தளை காண்க : பாசக்கட்டு .
பாசத்தன் யமன் ; வருணன் ; விநாயகன் .
பாசதரன் யமன் ; வருணன் ; விநாயகன் .
பாசநாசம் குருவின் அருளால் ஆணவம் , கன்மம் , மாயை என்னும் மும்மலங்களை நீக்குகை .
பாசநாசன் கடவுள் .
பாசபந்தம் காண்க : பாசக்கட்டு ; பாசக்கயிறு .
பாசபாணி சிவன் ; வருணன் ; யமன் ; விநாயகன் .
பாசம் ஆசை ; அன்பு ; கயிறு ; கயிற்று வடிவமான ஆயுதவகை ; படை அணிவகுப்புவகை ; தளை ; மும்மலம் ; ஆணவமலம் ; பற்று ; கட்டு ; பத்தி ; கவசம் ; தையல் ; ஊசித்துளை ; நூல் ; சுற்றம் ; பேய் ; சீரகம் .
பாசமாலை கழுத்தணிவகை .
பாசமோசனம் காண்க : பாசவிமோசனம் .
பாசருகம் காண்க : அகில் .
பாசவர் வெற்றிலை விற்போர் ; ஆட்டிறைச்சி விற்போர் ; இறைச்சி விற்போர் .
பாசவல் செவ்வி அவல் ; பசுமையான விளைநிலம் .
பாசவிமோசனம் உயிர் உலகப்பற்றிலிருந்து நீங்குகை .
பாசவினை பந்தத்திற்கு ஏதுவாகிய வினை .
பாசவீடு மும்மலங்களிலிருந்து விடுபடுகை .
பாசவைராக்கியம் உலகப் பொருள்களில் வெறுப்பு .
பாசறவு பற்றறுகை ; நிறத்தின் அழிவு ; துயரம் .
பாசறை போர்க்களத்தில் படைகள் தங்கும் இடம் ; ஒரு மரவகை ; மணியாசிப்பலகை ; துன்பம் ; பசிய இலையால் செறிந்த முழை .
பாசறைமுல்லை ஒருவகைத் துறை , பாசறையில் தலைமகன் தலைவியை நினைக்கும் புறத்துறை .
பாசன் சிற்றுயிர் , சீவான்மா ; யமன் , வருணன் ; சிவபெருமான் .
பாசனக்கால் நிலங்களுக்குப் பாயும் வாய்க்கால் .
பாசனம் வெள்ளம் ; நீர்பாய்ச்சுதல் ; வயிற்றுப்போக்கு ; பாண்டம் ; உண்கலம் ; மட்கலம் ; மரக்கலம் ; தங்குமிடம் ; ஆதாரம் ; சுற்றம் ; பங்கு ; பிரிவுக்கணக்கு ; நீக்கம் ; நெருப்பு ; ஒரு மருந்துவகை ; புளிப்பு .
பாசாங்கடித்தல் போலியாக நடித்தல் .
பாசாங்கு போலி நடிப்பு ; வஞ்சகம் .
பாசாங்குக்காரன் பாசாங்கு செய்வோன் .
பாசாங்குக்காரி பாசாங்கு செய்பவள் .
பாசாங்குசதரன் பாசத்தையும் அங்குசத்தையும் தாங்கியிருப்பவனாகிய கணபதி .
பாசாங்குசன் பாசத்தையும் அங்குசத்தையும் தாங்கியிருப்பவனாகிய கணபதி .
பாசாண்டி புறச்சமயநூல் வல்லோன் .
பாசாணபேதி நெருஞ்சிமுள் ; சிறுநெருஞ்சி .
பாசி பசுமையுடையது ; நீர்ப்பாசி ; கடற்பாசி ; நெட்டிப்புல் ; பூஞ்சணம் ; காண்க : சிறுபயறு ; குழந்தைகளின் கழுத்தணிக்கு உதவும் மணிவகை ; மேகம் ; காண்க : பாசிநிலை ; வருணன் ; யமன் ; நாய் ; ஆன்மா ; கிழக்கு ; மீன்பிடிப்பு ; மீன் சமைத்தல் .
பாசித்தீர்வை மீன் பிடித்துக்கொள்வதற்குக் கொடுக்கும் வரி .
பாசிதம் பிரிக்கப்பட்ட பங்கு ; வகுத்த ஈவு .
பாசிதூர்த்துக்கிடத்தல் அழுக்குப் பிடித்துக் கிடத்தல் .
பாசிநிலை பகைவருடைய வலிகெட அவருடைய அகழிடத்துப் பொருதலைக் கூறும் புறத்துறை .
பாசிநீக்கம் சொல்தோறும் அடிதோறும் பொருள் ஏற்றுவரும் பொருள்கோள் .
பாசிநீக்கு சொல்தோறும் அடிதோறும் பொருள் ஏற்றுவரும் பொருள்கோள் .
பாசிப்படை திடீரென்று தாக்கும் படை ; பலமுள்ள படை ; கைவிட்ட நம்பிக்கை .
பாசிப்பயறு ஒரு பயறுவகை .
பாசிப்பருவம் மீசையின் இளம்பருவம் .
பாசிப்பாட்டம் மீன்பிடிப்பதற்கு இடும் வரி .
பாசிபடர்தல் பாசிபிடித்தல் .
பாசிபந்து தோளணிவகை .
பாசிபற்றினபல் ஊத்தையும் பசுமைநிறமும் பிடித்த அழுக்குப் பல் .
பாசிபற்றுதல் பாசியுண்டாதல் .
பாசிபிடித்தல் பாசியுண்டாதல் .
பாசிபூத்தல் காண்க : பாசிபற்றுதல் ; பழமையாதல் .
பாசிமணி கரிய மணிவடம் ; பச்சை மணிவடம் .
பாசிமறன் போர்மேற் சென்ற படை அகழிப்போர் வெற்றிக்குப்பின் பகைவர் ஊரகத்துப் போர் விரும்புதலைக் கூறும் புறத்துறை .
பாசிலை வெற்றிலை ; பச்சையிலை .