பாசிவரி முதல் - பாடாய்முடிதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பாசிவரி காண்க : பாசித்தீர்வை .
பாசிவிலை மீன்விலை .
பாசினம் கிளிக்கூட்டம் .
பாசீகன் சமையற்காரன் .
பாசு பசுமை ; மூங்கில் ; ஊக்கம் ; தளை ; அன்பு ; தேர்வு முதலியவற்றில் தேர்ச்சி ; வெளியில் அல்லது உள்ளே செல்வதற்கோ பொருள் கொண்டுபோவதற்கோ கொடுக்கும் அனுமதிச் சீட்டு .
பாசுபதம் அகப்புறச்சமயவகை ; சிவனது அம்பு ; காண்க : பாசுபதாத்திரம் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
பாசுபதன் சிவனை வழிபடுவோன் ; பாசுபதத்தையுடைய சிவபிரான் ; சைவர்களுக்குள் பாசுபத முறையைப் பின்பற்றுவோன் .
பாசுபதாத்திரம் சிவபெருமானைத் தேவதையாகக் கொண்ட அம்பு .
பாசுரம் திருப்பாடல் ; திருமுகம் ; மொழி ; வாய்பாடு ; புல்லாங்குழலோசை .
பாசை சமைக்கை ; மொழி ; ஆணை ; பாசி .
பாஞ்சசத்திகம் வாத்தியப்பொது .
பாஞ்சசன்னியம் திருமாலின் சங்கம் ; தீ ; நாணல் .
பாஞ்சராத்திரம் ஒரு வைணவ ஆகமம் .
பாஞ்சலம் காற்று ; நெருப்பு ; இலாபப் பொருள் .
பாஞ்சாலபுருடன் நல்லிலக்கணமுடையவன் .
பாஞ்சாலம் இலக்கணம் ; ஐந்து ஆறுகள் பாயும் ஒரு நாடு .
பாஞ்சாலி திரௌபதி ; சித்திரப்பாவை .
பாஞ்சாலிகம் மரப்பாவை விளையாட்டு .
பாட்டம் தோட்டம் ; மேகம் ; பெருமழை ; விட்டுவிட்டுப் பெய்யும் மழை ; வரி ; கிட்டிப்புள்ளு ; விளையாட்டுப் பகுதி ; குத்தகை ; குறுக்குநிலை ; குமாரிலபட்டர் என்பவர் மறையே தெய்வமென்று ஏற்படுத்திய மதம் .
பாட்டன் பெற்றோரின் தந்தை ; முன்னோன் ; பாட்ட மதத்தான் .
பாட்டா பெற்றோரின் தந்தை ; முன்னோன் ; புளிப்பு ; புளித்த கள் .
பாட்டாசாரியம் பாட்டாசாரியர் வேதமே கடவுளென்று ஏற்படுத்திய கொள்கை .
பாட்டாள் உழைப்பாளி ; சோம்பேறி ; பாடுபவன் .
பாட்டாளி உழைப்பாளி ; பாடுபவன் ; சங்கேதத் துறையில் ஓர் அலுவலன் .
பாட்டி பெற்றோரின் தாய் ; கிழவி ; நரி ; நாய் ; பன்றி இவற்றின் பெண்பாற் பொது ; பாடன் மகளிர் .
பாட்டியம் பிரதமைதிதி .
பாட்டியமி பிரதமைதிதி .
பாட்டியர் இசைபாடும் பெண்கள் .
பாட்டு பாடுகை ; இசைப்பாட்டு ; இசை ; கொய்சகம் முதலியவற்றின் அடுக்கு ; செய்யுள் ; சொல் ; வசைமொழி ; செங்கற்சுவர் எழுப்பும் போது நெடுக்காக வைக்கும் கல் .
பாட்டுக்கச்சேரி இன்னிசை அரங்கு .
பாட்டுக்காடன் பாடுவோன் ; இசைவல்லோன் .
பாட்டுக்கேட்டல் இசைகேட்டல் ; வசை கேட்டல் .
பாட்டுடைத்தலைமகன் காப்பியத் தலைவன் .
பாட்டுடைத்தலைவன் காப்பியத் தலைவன் .
பாட்டுநாயகன் காப்பியத் தலைவன் .
பாட்டுப்படித்தல் இசைப்பாட்டுப் பாடுதல் ; செய்யுளியற்றுதல் .
பாட்டுமடை குரவைக்கூத்து முதலியவற்றின் இடையே பாடும் பாட்டு .
பாட்டுவாங்குதல் வசைமொழி வாங்குதல் .
பாட்டை பாதை ; இசை முதலியவற்றின் நடை ; ஒழுக்கம் ; கடல்மீன் .
பாட்டைசாரி வழிப்போக்கன் .
பாட்பம் கண்ணீர் ; வெம்மை .
பாடகஞ்சொல்லுதல் தொன்மக் கதைகளை மனத்திற் படும்படி அபிநயத்துச் சொல்லுதல் .
பாடகம் தெரு ; காஞ்சியில் உள்ள ஒரு திருமால் தலம் ; வயற்பகுதி ; நிழல் ; ஒரு வாத்தியக்கருவி வகை ; கரை ; சூது விளையாடல் ; நட்டம் ; மகளிர் காலணி ; துகில்வகை ; சிவப்பு ; கூலி ; பாடுமிடம் .
பாடகன் பாடுவோன் ; சொல்வன்மையுள்ளவன் .
பாடகி பாடுபவள் .
பாடங்கேட்டல் ஆசிரியனிடத்து நூற்பொருள் கற்றல் ; படித்த பாடத்தை உசாவுதல் .
பாடசாலை கல்விச்சாலை .
பாடஞ்செய்தல் புகையிலை முதலியன பக்குவப்படுத்தல் ; தோலைப் பதப்படுத்தல் ; ஒளிவிடுதல் .
பாடஞ்சொல்லுதல் கற்பித்தல் ; பாடம் ஒப்பித்தல் .
பாடணம் பேச்சு ; போதனை .
பாடபேதம் ஒரு நூலின் படியிற் கண்டவற்றிற்கு வேறான பாடம் .
பாடம் படிக்கும் நூற்பகுதி ; படிப்பு ; மூலபாடம் ; வேதபாடம் ; பார்க்காமல் ஒப்பிக்கும்படி கைவந்தது ; தெரு ; இடையர் வீதி ; உடன்பாடு ; கடுமை ; மிகுதி ; பாரம் வைத்து அழுத்துகை ; பதப்படுத்துகை ; மணி முதலியவற்றின் ஒளி ; முடிமாலை ; வெற்றிலை ; சொல் .
பாடம்பண்ணுதல் மனப்பாடமாக்கல் ; ஓலை முதலியவற்றை அடுக்கிவைத்தல் ; தோலைப்பதனிடுதல் ; புகையிலை முதலியவற்றைப் பக்குவப்படுத்துதல் .
பாடம்போற்றுதல் படித்த பாடத்தைச் சிந்தித்தல் .
பாடல் பாடுகை ; இசைப்பா ; இசை ; பாட்டு ; புகழ் ; படிக்கை ; பாகல் ; காண்க : பாடலிபுரம் .
பாடல்பெற்றதலம் நாயன்மார்களாலேனும் ஆழ்வார்களாலேனும் பாடப்பெற்ற ஊர் .
பாடலம் சிவப்பு ; வெண்சிவப்பு ; குங்குமம் ; குதிரை ; சேரன் குதிரை ; பாதிரிமரம் ; மழைக் காலத்தில் விளையும் நெல் ; சூளுரை .
பாடலி பாதிரிமரம் ; பாடலிபுரம் என்னும் நகரம் ; கள் ; ஒரு நெல்வகை ; ஒரு கொடிவகை .
பாடலிபுரம் கங்கை சோணையாறுகள் கலக்குமிடத்தில் இருந்த மகத நாட்டின் தலைநகர் .
பாடலை ஒரு மரவகை ; துர்க்கை ; பாடலிபுரம் .
பாடவம் வடவைத்தீ ; வல்லமை ; களிப்பு ; நலம் ; மகளிர் காலணி .
பாடவள் பாடுபவள் ; மிதுனராசி .
பாடவன் பாடுபவன் ; மிதுனராசி .
பாடவை மிதுனராசி .
பாடற்பயன் இன்பம் , தெளிவு , நிறைவு , ஒளி , வன்சொல் , இறுதி , மந்தம் , உச்சம் என்னும் எண்வகையான இசைப்பயன் .
பாடன்மகடூஉ விறலி .
பாடன்மகள் விறலி .
பாடனம் பேசுகை ; போதிக்கை ; பாடுகை ; பிளக்கை .
பாடனுபவித்தல் வருந்துதல் .
பாடாகுதல் கெடுதியடைதல் ; அழுதல் .
பாடாண் பாட்டுடைத் தலைவனது புகழ் , வலி , கொடை , அளி முதலியவற்றைப் புகழ்ந்து கூறும் புறத்துறை .
பாடாண்திணை பாட்டுடைத் தலைவனது புகழ் , வலி , கொடை , அளி முதலியவற்றைப் புகழ்ந்து கூறும் புறத்துறை .
பாடாணம் கல் ; மருந்துச் சரக்கு ; எண்வகை இன்பங்களுள் பாறைநிலமும் அவற்றில் உண்டாகும் பொருள்களும் .
பாடாந்தரம் பாடவேறுபாடு ; வேற்றுமொழி .
பாடாய்முடிதல் கெடுதியாய் முடிதல் .