பாய்மா முதல் - பாரதாரிகன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பாய்மா குதிரை ; புலி .
பாய்மாலி வெள்ள அழிவு .
பாய்வலித்தல் கப்பற்பாயேற்றுதல் ; கப்பற்பாய் காற்றுட்கொண்டு விரியச்செய்தல் .
பாய்விரி பசலைக்கீரை .
பாய்விரித்தல் கப்பற்பாய் காற்றுட்கொண்டு விரியச்செய்தல் ; பயணப்படுதல் .
பாயக்கட்டு ஊரதிகாரி .
பாயசம் பால் , அரிசி , சருக்கரை அல்லது வெல்லம் முதலியவற்றோடு சேர்த்துச் செய்யும் இன்னமுது ; பாற்சோற்றிச்செடி .
பாயதானம் பாலன்னம் .
பாயம் புணர்ச்சி விருப்பம் ; நீர் ; மனத்திற்கு விருப்பமானது .
பாயமுகம் வடவைத்தீ .
பாயல் மக்கட் படுக்கை ; உறக்கம் ; பாதி .
பாயலுணர்த்துதல் துயில் எழுப்பல் .
பாயிரம் முகவுரை ; பொருளடக்கம் ; வரலாறு ; புறம்பானது .
பாயிறக்குதல் கப்பற்பாயை மடக்குதல் .
பாயு மலவாய் .
பாயுடுக்கையர் பாயை உடுத்துக்கொள்ளும் சமணத்துறவியர் .
பாயுரு காண்க : பாயு .
பார் பரப்பு ; தேரின் பரப்பு ; வண்டியின் நெடுஞ்சட்டம் ; பூமி ; நிலம் என்னும் பூதம் ; நாடு ; வன்னிலம் ; பாறை ; தடை ; உரோகிணிநாள் ; பருமை ; வரம்பு ; முத்து விளையும் திட்டு ; மறையோன் ; புத்தன் ; பாத்தி பலகொண்ட பகுதி ; அடுக்கு ; தடவை .
பார்க்க உறழ்ச்சிப் பொருளில் வரும் சொல் .
பார்க்கட்டுதல் புன்செய்க்கு வரம்பிடுதல் .
பார்க்கவன் பிருகுவின் வழித்தோன்றலான சுக்கிரன் ; பரசுராமன் .
பார்க்கவி திருமகள் ; மலைமகள் ; காண்க : வெள்ளறுகு .
பார்ச்சட்டம் வண்டியின் அடிப்பாகத்துள்ள நெடுஞ்சட்டம் .
பார்சுவகிரகணம் குறைக்கிரகணம் .
பார்சுவம் விலாப்பக்கம் ; பக்கம் ; உதவி ; வட்டம் .
பார்த்தல் ஆராய்தல் ; நோக்குதல் ; அறிதல் ; எதிர்பார்த்தல் ; விரும்புதல் ; தேடுதல் ; வணங்குதல் ; மதித்தல் ; கவனித்தல் ; மேற்பார்த்தல் ; பார்வையிடுதல் ; மருந்து முதலியன கொடுத்தல் ; மந்திரித்தல் ; கருதுதல் ; கடைக்கணித்தல் .
பார்த்திப அறுபதாண்டுக் கணக்கில் பத்தொன்பதாம் ஆண்டு .
பார்த்திபன் அரசன் .
பார்த்திவன் அரசன் .
பார்த்திவம் பூமி தொடர்பானது ; நிலங்களில் இருந்து பெறும் ஊதியம் .
பார்ப்பதி காண்க : பார்வதி .
பார்ப்பனத்தி காண்க : பார்ப்பனி .
பார்ப்பனன் காண்க : பார்ப்பான் .
பார்ப்பனி பார்ப்பனக்குலப் பெண் .
பார்ப்பான் பிராமணன் ; பிரமன் ; யமன் .
பார்ப்பி காண்க : பார்ப்பனி .
பார்ப்பு தவழ்சாதிப் பிள்ளை ; விலங்கின் குட்டி ; பறவைக்குஞ்சு ; பார்ப்பனச்சாதி .
பார்ப்புத்தேள் காண்க : பார்மகள் .
பார்படை தானிய அரியைக் களத்திற் பங்கிட்டுக் கொள்ளுகை .
பார்மகள் நிலமகள் .
பார்மிசைநடந்தோன் புத்தன் .
பார்மிசையோன் புத்தன் .
பார்வதம் காண்க : வாலுளுவை ; வேம்பு .
பார்வதி பருவதராசன் மகளான உமை ; திரௌபதி ; இடைச்சி ; காவிமண் ; ஆனைநெருஞ்சி .
பார்வதேயம் மலையிற் பிறப்பன .
பார்வல் பார்க்கை ; காவல் ; பறவைக்குஞ்சு ; மான் முதலியவற்றின் கன்று ; காண்க : பார்வைவிலங்கு .
பார்வை காட்சி ; கண் ; தோற்றம் ; நேர்த்தி ; மதிப்பு ; நோக்கி மந்திரிக்கை ; சூனியம் ; கண்ணோட்டம் ; சோதனை ; மேல்விசாரிப்பு ; கவனம் ; காண்க : பார்வைவிலங்கு .
பார்வைக்காரன் மந்திரித்து நோய் தீர்ப்போன் ; மதிப்பிடுவோன் ; மேலதிகாரி ; அஞ்சனமிட்டுப் புதையல் காண்போன் .
பார்வைக்குறைவு கட்புலன் மங்குகை ; பேணுதலில் உண்டாகும் குறை .
பார்வைத்தாழ்ச்சி அசட்டை ; பேணுதலில் உண்டாகும் குறை .
பார்வைபார்த்தல் நோய் தீர்க்க மந்திரமுச்சரித்தல் ; மதித்தல் ; ஆராய்தல் ; ஏவல்வைத்தல் .
பார்வைமான் காண்க : பார்வைவிலங்கு .
பார்வையிடுதல் காண்க : பார்வைபார்த்தல் .
பார்வைவிலங்கு விலங்குகளைப் பிடிப்பதற்காகப் பழக்கப்பட்ட விலங்கு .
பாரகம் பூமி ; திரைச்சீலை ; தோணி .
பாரகன் சுமப்பவன் ; தாங்குபவன் ; கல்விமிகக் கற்றவன் .
பாரகாவியம் பெருங்காப்பியம் .
பாரங்கதன் கல்விக்கடலில் கரைகண்டவன் .
பாரங்கம் இலவங்கப்பட்டை .
பாரங்கு சிறுதேக்கு ; காட்டிலவு ; நரிவாழை .
பாரச்சுமை கனத்த சுமை .
பாரசிகை பருந்து .
பாரணம் உண்ணுகை ; பட்டினியிருந்து உண்ணல் ; மனநிறைவு ; மேகம் .
பாரணை காண்க : பாரணம் ; பாரிப்பு .
பாரத்தனம் பெருமிதம் .
பாரத்துவாசம் வலியன்குருவி , கரிக்குருவி ; காண்க : காடை ; கற்பநூலுள் ஒன்று ; எலும்பு .
பாரத்தொந்தரை தொந்தரவுமிக்க பெருஞ்செயல் .
பாரதகண்டம் இந்திய நாடு .
பாரதந்திரியம் பிறன்வயமாதல் .
பாரதப்போர் பாண்டவ கௌரவர் போர் ; பெருஞ்சச்சரவு .
பாரதம் இந்திய நாடு ; பாரதப்போர் ; மகாபாரதம் ; மிக விரிவுடைய செய்தி ; பாதரசம் .
பாரதர் பாண்டவர் கௌரவர் உள்ளிட்ட பரதவமிசத்தவர் ; பாரத நாட்டினர் .
பாரதவருடம் காண்க : பாரதகண்டம் .
பாரதாரிகம் காண்க : பாரதாரியம் .
பாரதாரிகன் பிறன்மனைவியை விரும்புபவன் .