பாரதாரியம் முதல் - பால்நரம்பு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பாரதாரியம் பிறன்மனை விழைகை .
பாரதி கலைமகள் ; பைரவி ; பண்டிதன் ; சொல் ; மரக்கலம் .
பாரதிக்கை இணைக்கைவகை .
பாரதியரங்கம் சுடுகாடு .
பாரதிவிருத்தி கூத்தன் தலைவனாகவும் நடன் நடிகை பொருளாகவும் வரும் நாடகவகை .
பாரதூரம் மிகத் தொலைவு ; முதன்மையானது ; ஆழ்ந்த முன்யோசனை .
பாரப்படுதல் பொறுப்புமிகுதல் ; சுமைமிகுதல் ; நீதிமன்றத்தில் விசாரணைக்கு வைக்கப்படுதல் .
பாரப்பழி பெருங்குற்றம் .
பாரப்புரளி பெரும்பொய் ; பெருங்குறும்பு .
பாரபட்சம் ஒரு தலைச்சார்பு .
பாரபத்தியக்காரன் மேல்விசாரணை செய்யும் அதிகாரி ; வரி வசூலிக்கும் அதிகாரி முதலியோர் ; அலுவலகன் ; பொறுப்பான வேலையுள்ளவன் .
பாரபத்தியம் மேல்விசாரணை ; நீதிபதியின் அதிகாரம் ; பொறுப்புமிக்க வேலை ; கொடுக்கல் வாங்கல் .
பாரம் பூமி ; பருத்திச்செடி ; பொறுக்கை ; கனம் ; சுமை ; ஒரு நிறைவகை ; பொறுப்பு ; பெருங்குடும்பம் ; கொடுமை ; சுரத்தால் வரும் தலைக்கனம் ; பெருமை ; கடமை ; ஒப்புவிக்கை ; குதிரைக்கலணை ; கவசம் ; தோணி ; காவுதடி ; கரை ; முடிவு ; விளையாட்டுவகை ; பாதரசம் .
பாரம்பரம் காண்க : பாரம்பரியம் .
பாரம்பரியநியாயம் மரபுவழியாக வரும் வழக்கம் .
பாரம்பரியம் மரபுவழி , பரம்பரை ; முறைமை .
பாரம்பரியரோகம் மரபுவழியாய் வரும் நோய் .
பாரம்பரை காண்க : பாரம்பரியம் .
பாரமார்த்திகம் முடிவில் உண்மையானது ; உண்மை அறிவிற்குரியது ; கபடமற்ற தன்மை ; ஈடுபாடு .
பாரமிதம் மேலானது .
பாரமேட்டி ஒருவகைத் துறவி .
பாரவதம் புறா .
பாரவம் வில்லின் நாண் .
பாராசாரி பெருங்குதிரை .
பாராட்டு புகழ்ச்சி ; அன்புசெய்தல் ; விரித்துரைக்கை ; பகட்டுச்செயல் ; கொண்டாடுதல் .
பாராட்டுக்காரன் பகட்டன் ; புனைந்து கூறுவோன் .
பாராட்டுதல் புகழ்தல் ; அன்புகாட்டுதல் ; பெருமிதம் உரைத்தல் ; கொண்டாடுதல் ; பலகாலம் சொல்லுதல் ; விரித்துரைத்தல் ; மனத்தில் வைத்தல் .
பாராட்டுந்தாய் ஈன்ற தாய் .
பாராட்டுப்பேசுதல் புகழ்தல் .
பாராத்தியம் துன்பம் .
பாராயணம் சமயநூலை முறைப்படி ஓதுதல் .
பாராயணன் முறையாக ஓதுவோன் ; ஒன்றனைக் குறிக்கொள்வோன் ; பார்ப்பான் .
பாராயணி கலைமகள் ; முறையாக ஓதுபவர் .
பாரார் பகைவர் ; நிலவுலகத்தார் .
பாராவதம் புறா ; கரும்புறா ; குரங்கு ; மலை ; கருங்காலிமரம் .
பாராவலையம் வளைதடி .
பாராவளையம் வளைதடி .
பாராவாரம் கடல் ; கடற்கரை .
பாரி பூமி ; நல்லாடை ; கட்டில் ; கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன் ; பூந்தாது ; கட்பாத்திரம் ; யானைகட்டுங் கயிறு ; சிறங்கை நீர் ; கடல் ; மனைவி ; சிங்கம் ; கள் ; பருத்தது ; முதன்மையானது ; கனவான் ; கொட்டுமுழக்குடன் புரியும் இராக்காவல் ; இராக்காவலாளர் பாடல் .
பாரிகன் தோட்சுமைக்காரன் .
பாரிகாரியம் தலையாய வேலை .
பாரிசச்சூலை பக்கவாதம் .
பாரிசஞ்செய்தல் பொறுப்பாக்குதல் .
பாரிசம் பக்கம் ; உடலின் ஒரு பக்கம் ; வசம் ; திசை .
பாரிசவாதம் காண்க : பக்கவாதம் ; குடலிறக்கம் .
பாரிசவாயு காண்க : பக்கவாதம் ; குடலிறக்கம் .
பாரிசாதம் ஐவகைத் தருக்களுள் ஒன்று ; காண்க : முள்முருங்கை ; பவழமல்லிகை .
பாரிடம் பூமி ; பூதம் .
பாரித்தல் பரவுதல் ; பருத்தல் ; மிகுதியாதல் ; தோன்றுதல் ; ஆயத்தப்படுதல் ; வளர்த்தல் ; தோன்றச்செய்தல் ; அமைத்துக்கொடுத்தல் ; உண்டாக்குதல் ; நிறைத்தல் ; அணிதல் ; அருச்சித்தல் ; வளைத்தல் ; உறுதிகொளல் ; விரும்புதல் ; காட்டுதல் ; பரப்புதல் ; பரக்கக்கூறுதல் ; சுமையாதல் ; நோயினால் கனமாதல் ; இன்றியமையாததாதல் ; சுமத்துதல் ; காத்தல் ; ஒத்தல் .
பாரித்தவன் பருத்தவன் .
பாரிப்பு பருமன் ; பரப்பு ; விருப்பம் ; வீரச்செயல் ; கனம் ; அதிகரிப்பு .
பாரிபத்திரம் காண்க : வேம்பு .
பாரிபோதல் நடுயாமத்தில் சுற்றுக்காவல் செய்தல் ; ஓடிவிடுதல் .
பாரியம் கடுக்காய் ; முருக்கு ; வேம்பு .
பாரியாள் பெருத்தவன் ; மனைவி .
பாரியை மனைவி .
பாரிவேட்டை வேட்டை ; கோயில் திருவிழாவகை .
பாரு மருந்து .
பாருசியம் அகில்மரம் .
பாரை கடப்பாரை ; புற்செதுக்குங் கருவி ; எறிபடைவகை ; செடிவகை ; ஒரு மீன்வகை .
பாரோலை பழம் வைக்கப்படும் பனையோலை .
பால் குழவி , குட்டி முதலியவற்றை ஊட்டத் தாய் முலையினின்று சுரக்கும் வெண்மையான நீர்மப்பொருள் ; பிணத்தை அடக்கம் பண்ணின மறுநாள் அவ்விடத்திற் பாலும் நவதானியமும் சேர்த்துத் தெளிக்கும் சடங்கு ; மரம் முதலியவற்றிலிருந்து வடியும் நீர்மப்பொருள் ; வெண்மை ; சாறு ; பகுதி ; அம்மை முதலியவற்றிலிருந்து கசியும் சீழ் ; பிரித்துக்கொடுக்கை ; பாதி ; பக்கம் ; வரிசை ; குலம் ; திக்கு ; குடம் ; குணம் ; உரிமை ; இயல்பு ; ஊழ் ; தகுதி ; ஐம்பாற்பிரிவு ; ஒருமை பன்மை என்ற இருவகைப் பாகுபாடு ; அகத்திணை புறத்திணை என்ற பாகுபாடு ; இடையர் குறும்பர்களின் வகை .
பால்கட்டுதல் நென்மணி முதலியவற்றில் பால் பற்றுதல் ; அம்மைகுத்துதல் .
பால்கறத்தல் பசு முதலியவற்றின் மடியிலிருந்து பாலைக் கறந்தெடுத்தல் .
பால்காய்ச்சுதல் புதுமனை புகுதற்குப் பால் காய்ச்சும் சிறப்பு .
பால்குனம் மாசி வளர்பிறைப் பிரதமை முதல் பங்குனி அமாவாசை முடியவுள்ள சாந்திரமான மாதம் .
பால்கொடுத்தல் முலையுண்ணுமாறு கொடுத்தல் .
பால்கோவா திரட்டுப்பால் என்னும் சிற்றுண்டிவகை .
பால்சுரம் மகளிர்க்குப் பால் மார்பில் கட்டிக் கொள்வதனால் உண்டாகும் காய்ச்சல் .
பால்சொரிதல் மாடு முதலியவற்றின் மடியில் இருந்து பால் தானே வழிதல் .
பால்சோர்தல் மாடு முதலியவற்றின் மடியில் இருந்து பால் தானே வழிதல் .
பால்தோய்த்தல் உறைகுத்துதல் .
பால்தோய்தல் பால் தயிராக மாறுகை .
பால்நண்டு வெள்ளைநண்டு .
பால்நரம்பு தாய்முலையில் பால் தோன்றும் போது காணும் பச்சை நரம்பு .