பால்பகாவஃறிணைப்பெயர் முதல் - பாலை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பால்பகாவஃறிணைப்பெயர் ஒருமை பன்மைக்குப் பொதுவாய் வரும் அஃறிணைப்பெயர் .
பால்பற்றிச்சொல்லுதல் ஒருசார்பாகப் பேசுதல் .
பால்பாய்தல் தாய்ப்பால் தானே பெருகுகை ; வெட்டு முதலியவற்றால் மரத்தினின்று பால் வெளிப்படுகை .
பால்பிடித்தல் நென்மணி முதலியவற்றில் பால் பற்றுதல் .
பால்பிடிபதம் பயிர்க்கதிர் பாலடையும் பருவம் .
பால்பொழிதல் செழிப்பாயிருத்தல் .
பால்மடி நிரம்பக் கறக்கக்கூடிய கால்நடைகளின் மடி .
பால்மடியழற்சி பசு முதலியவற்றின் முலைக்காம்பு வெடித்திருக்கை .
பால்மணம் பாலின் நாற்றம் ; கஞ்சி காய்ச்சுகையில் பக்குவமானவுடன் உண்டாகும் நாற்றம் ; பால்குடிக்கும் குழந்தைகளின் வாயிலிருந்து வீசும் பால்நாற்றம் ; முற்றின அம்மைப்பாலின் நாற்றம் .
பால்மரம் பாலுள்ள மரம் .
பால்மறத்தல் குழந்தை பால் குடிப்பதைத் தவிர்தல் .
பால்மறுத்தல் பால் வற்றுதல் ; காண்க : பால்மறத்தல் .
பால்மறை பசுக்கொட்டிலில் உள்ள குறை .
பால்மாறுதல் பால் வற்றிப்போதல் ; தாய்ப்பால் உண்ணாது பிற உணவு கொள்ளுதல் ; சோம்பியிருத்தல் ; பின்வாங்குதல் .
பால்மேனியாள் கலைமகள் .
பால்வண்ணன் பலராமன் ; சிவன் .
பால்வரைகிளவி எண் , அளவு முதலியவற்றின் பகுதியைக் குறிக்கும் சொல் .
பால்வரைதெய்வம் நல்வினை தீவினைகளை வகுக்கும் தெய்வம் .
பால்வழு ஒருபாற் சொல் ஏனைப்பாற் சொல்லோடு முடிதலாகிய குற்றம் .
பால்வழுவமைதி பால் வழுவை ஆமென்று அமைத்துக்கொள்கை .
பால்வழுவமைப்பு பால் வழுவை ஆமென்று அமைத்துக்கொள்கை .
பால்வறையல் பாலைச் சேர்த்து செய்த துவட்டல் .
பால்வன்னத்தி சிவசக்தி .
பால்வாய்க்குழவி நற்பேறு பெற்ற குழந்தை .
பால்வார்த்தல் பாம்புப்புற்றில் பாலூற்றிச் செய்யுஞ் சடங்கு .
பால்வெடித்தல் நெற்பயிர் பாலடையாது கெட்டுப்போதல் .
பாலக்கிரகாரிட்டம் கோள்களின் தீய பார்வையால் குழந்தைகட்கு உண்டாகும் பீடை ; குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கு .
பாலகம் காண்க : எள் ; வெண்கோட்டம் .
பாலகன் காணக : பாலன் .
பாலகி மகள் .
பாலசந்திரன் பிறைச்சந்திரன் .
பாலசிட்சை குழந்தைக்குப் கற்பிக்கை ; சிறுவர்க்குரிய பாடப்புத்தகம் .
பாலசூரியன் உதயசூரியன் .
பாலடி பாலில் சமைத்த சோறு .
பாலடிசில் பாலில் சமைத்த சோறு .
பாலடை குழந்தைகளுக்குப் பால் புகட்டுகிற சங்கு ; காண்க : சித்திரப்பாலாடை(வி) ; பாலகப்பை .
பாலத்தூண் ஆற்றின்மேற் பாலத்தைத் தாங்குதற்குக் கட்டும் முள்ளுக்கட்டை .
பாலபாடம் சிறுவர்க்குரிய புத்தகம் .
பாலம் வாராவதி ; நீரின் அணைச்சுவர் ; நெற்றி ; பூமி ; மரக்கொம்பு ; வெட்டிவேர் .
பாலம்மை வைசூரி .
பாலமணி அக்குமணி ; வெள்ளைப் பாசிமணி .
பாலமணிக்கோவை குழந்தைகளின் கழுத்தணிவகை .
பாலமிர்தம் பாற்சோறு .
பாலமை பிள்ளைமை ; அறியாமை .
பாலர் சிறுவர் ; காப்பவர் ; இடையர் ; முல்லைநில மக்கள் .
பாலரசம் பொன்னிறம் .
பாலல¦லை குழந்தை விளையாட்டு ; இளைஞரின் இன்ப விளையாட்டு .
பாலலோசனன் நெற்றிக்கண்ணுடைய சிவபிரான் .
பாலவன் பால்வண்ணனான சிவன் .
பாலவி காண்க : பாலமிர்தம் .
பாலவோரக்கட்டை பாலத்தின் இருகரைகளிலுமுள்ள பக்கச்சுவர் .
பாலன் குழந்தை ; புதல்வன் ; காப்போன் .
பாலனம் பாதுகாப்பு .
பாலனன் காப்போன் .
பாலா கையீட்டி .
பாலாசிரியன் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியன் .
பாலாடை காண்க : பாலேடு ; குழந்தைகளுக்குப் பால்புகட்டும் சங்கு .
பாலாலயம் இளங்கோயில் , சிறிய ஆலயம் .
பாலாவி பாலின் ஆவி .
பாலாறு நந்திதுர்க்கத்தில் தோன்றித் தமிழ் நாட்டில் பாயும் ஓர் ஆறு .
பாலி ஒரு பழைய மொழி ; ஆலமரம் ; செம்பருத்தி ; காண்க : பாலாறு ; கள் .
பாலிகை இளம்பெண் ; ஒரு காதணிவகை ; கலியாணம் முதலிய நற்காலங்களில் முளைகள் உண்டாக ஒன்பதுவகைத் தானியங்கள் விதைக்குந் தாழி ; ஆயுதக்கூர் ; உதடு ; அடம்பு ; கத்திப்பிடி ; வட்டம் ; நீரோட்டம் ; மேற்கட்டி .
பாலிகைபாய்தல் அணையின்றித் தானே நீர் பாய்தல் .
பாலிசம் அறியாமை .
பாலிசன் மூடன் .
பாலித்தல் காத்தல் ; கொடுத்தல் ; விரித்தல் ; அருளுதல் .
பாலியம் குழந்தைப்பருவம் ; இளம்பருவம் .
பாலியன் ஆண்குழந்தை ; இளைஞன் .
பாலிறங்குதல் பால் தொண்டைவழிச் செல்லுகை ; அம்மைப்பால் வற்றுகை .
பாலிறுவி முருங்கைமரம் .
பாலுகம் கருப்பூரம் .
பாலுண்ணி உடம்பில் உண்டாகும் ஒருவகைச் சதைவளர்ச்சி .
பாலேடு காய்ச்சிய பாலின்மேற் படியும் ஆடை .
பாலேயம் கழுதை ; சிறுமுள்ளங்கி ; மென்மை .
பாலை முல்லையும் குறிஞ்சியும் திரிந்த நிலம் ; பாலைத்தன்மை ; புறங்காடு ; பாலைநிலத்து உரிப்பொருளாகிய பிரிவு ; காண்க : இருள்மரம் ; முள்மகிழ் ; மரவகை ; பெரும்பண்வகை ; ஒரு யாழ்வகை ; பாலையாழிற் பிறக்கும் எழுவகைப் பண்வகை ; புனர்பூசம் ; மிருகசீரிடநாள் ; கவறாட்டத்து வழங்கும் ஒரு குழூஉக்குறி ; பெண் ; குழந்தை ; பதினாறு அகவைக் குட்பட்ட பெண் ; சிவசத்தி ; மீன்வகை .