பாலைக்கிழத்தி முதல் - பாழ்ங்கிணறு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பாலைக்கிழத்தி பாலைக்கு உரியவளான கொற்றவை .
பாலைத்திறம் காண்க : பாலையாழ்த்திறம் .
பாலைநிலப்பூ கள்ளி ; பாலை ; பூளை .
பாலைநிலம் முல்லையும் குறிஞ்சியும் திரிந்த நிலம் .
பாலைநிலவிலங்கு செந்நாய் .
பாலைப்பண் பெரும்பண்வகை .
பாலைமணி அக்குமணி .
பாலையாழ் பெரும்பண்வகை .
பாலையாழ்த்திறம் பாலைப்பண்ணைச் சார்ந்த சிறு பண்கள் .
பாலைவனம் பரந்த மணல்வெளி .
பாலொடுவை காண்க : கொடிப்பாலை .
பாவகம் அக்கினி ; சேங்கொட்டை ; கொலை ; கருத்து ; தியானம் ; இயல்பு ; உருவம் ; காதலை வெளியிடும் குறிப்பு ; பாசாங்கு .
பாவகன் தூய்மையானவன் ; தூய்மைசெய்வோன் ; அக்கினி ; நஞ்சுதீர்க்கும் மருத்துவன் .
பாவகாரி பாவம் செய்வோன் .
பாவகி தீயில் பிறந்தோனாகிய முருகன் .
பாவச்சுமை நுகர்ந்து கழித்தற்குரிய பாவத்திரள் .
பாவசுத்தி பாவம் நீங்குகை ; மனத்தூய்மை .
பாவசேடம் நுகர்ந்து கழிக்கவேண்டிய வினைப்பயன் ; தூயவரிடத்து எஞ்சியிருக்கும் தீவினை .
பாவட்டை செடிவகை ; சிறு மரவகை ; ஆடாதோடை .
பாவடி அங்கவடி ; பாட்டிலடங்கிய அடி .
பாவண்ணம் நூற்பாச் சந்தம் .
பாவநாசம் பாவநீக்குகை ; பாவம் போக்கும் இடம் அல்லது தீர்த்தம் .
பாவநிவாரணம் பாவம் நீக்குதல் .
பாவபாணம் மனோபாவங்களாகிய நல்வினை தீவினைகள் .
பாவம் தீவினைப் பயன் ; தீச்செயல் ; நரகம் ; இரக்கக்குறிப்பு ; உளதாந்தன்மை ; முறைமை ; தியானம் ; எண்ணம் ; அபிநயம் ; விளையாட்டு ; நிலைதடுமாற்றம் ; ஆத்துமாவிடம் உண்டாகும் பரிணாம விசேடம் ; இயக்கம் .
பாவம்பழி கொடுந்தீச்செயல் .
பாவமன்னிப்பு பாவத்தைப் பொறுக்கை .
பாவமூர்த்தி வேடன் .
பாவர் பாவிகள் .
பாவரசம் கருத்துநயம் ; அபிநயச்சுவை .
பாவல் மிதியடி ; மரக்கல வுறுப்புகளுள் ஒன்று ; பாகற்கொடி .
பாவலர் கவிஞர் ; புலவர் .
பாவறை கூடாரம் .
பாவனத்துவனி சங்கு .
பாவனம் துப்புரவுசெய்கை ; தூய்மை ; மருந்து குழைக்கை .
பாவனன் துப்புரவாளன் ; அனுமன் ; வீமன் .
பாவனாதீதம் எண்ணுதற்கு அரியது .
பாவனி கங்கை ; பசு ; துளசி ; மேளகர்த்தாக்களுள் ஒன்று .
பாவனை நினைப்பு ; தெளிகை ; ஐம்புலனுள் ஒன்று ; தியானம் ; தியானிக்கப்படுவது ; ஒப்பு ; அடையாளம் ; போலி ; நடத்தை ; நடிப்பு ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
பாவனைகாட்டுதல் ஒன்றன் செயல்போலச் செய்தல் ; அபிநயித்தல் ; வேடங்கொள்ளுதல் ; வரைந்துகாட்டுதல் .
பாவாடம் நாக்கறுத்துக்கொள்ளும் வேண்டுதல் .
பாவாடை பெண்களின் உடைவகை ; பெரியோர் முதலியவர் நடந்துசெல்லத் தரைமீது விரிக்குஞ் சீலை ; கடவுள் முதலியோர்க்கு முன் ஆடையிற் படைக்கும் அன்னம் ; மேலெழ வீசும் ஒருவகை விருதுச்சீலை ; மேசைவிரிப்பு ; வேலைநாள் .
பாவாணர் பாவலர் .
பாவாத்துமா தீச்செயல் புரிவோன் .
பாவாபாவம் உண்மையும் இன்மையும் .
பாவார்த்தம் கருத்துரை ; சொற்பொருள் .
பாவாற்றி நெய்வார் குச்சு .
பாவாற்றுதல் நெசவுப்பாவைத் தறிக்கு ஆயத்தம் செய்தல் .
பாவி தீமையாளன் ; சாது ; வரக்கூடியது ; பேதை .
பாவி (வி) மதி ; பாவனைசெய் .
பாவிகம் தொடக்கமுதல் முடிவுவரை வனப்புடையதாக அமையும் காப்பியப் பண்பு .
பாவிட்டன் கொடும்பாவஞ் செய்தவன் .
பாவித்தல் எண்ணுதல் ; தியானித்தல் ; பாவனைசெய்தல் ; பொய்யாக நடித்தல் ; நுகர்தல் .
பாவியம் காப்பியம் ; பாவிக்கத்தக்கது ; தகுதி .
பாவியர் குறிப்புடையவர் .
பாவிரிமண்டபம் சங்கமண்டபம் .
பாவினம் தாழிசை ; துறை , விருத்தம் என்னும் முப்பகுதியான பாவின்வகை .
பாவு நெசவுப்பா ; இரண்டுபாக வளவு ; இரண்டு பலங்கொண்ட நிறுத்தலளவை .
பாவுகல் தளம் பரப்புங் கல் .
பாவுதல் படர்தல் ; பரவுதல் ; ஊன்றுதல் ; தளவரிசையிடுதல் ; நாற்றுக்கு நெருக்கி விதைத்தல் ; நாற்று நடுதல் ; தாண்டுதல் ; பரப்புதல் .
பாவுபலகை மேல்தளமாகப் பரப்பும் பலகை .
பாவை பொம்மைபோன்ற அழகிய பெண் ; பதுமை ; அழகிய உருவம் ; கருவிழி ; பெண் ; குரவமலர் ; காண்க : பாவைக்கூத்து ; நோன்பு வகை ; திருவெம்பாவை ; திருப்பாவை ; இஞ்சிக்கிழங்கு ; மதில் .
பாவைக்கூத்து அவுணர் மோகித்து விழுமாறு திருமகள் கொல்லிப்பாவை வடிவுகொண்டு ஆடிய ஆடல் ; பொம்மலாட்டம் .
பாவைத்தீபம் கோயிலில் வழங்கும் தீப ஆராதனைக் கருவிவகை .
பாவைப்பாட்டு திருப்பாவை திருவெம்பாவைகளில் உள்ளவைபோல நான்கடியின் மிக்குவருஞ் செய்யுள்வகை .
பாவையாடல் காண்க : பாவைக்கூத்து ; பெண்பாற் பிள்ளைத்தமிழின் உறுப்புகளுள் பாட்டுடைத் தலைவி பாவை வைத்து விளையாடுகை .
பாவையிஞ்சி இஞ்சிக்கிழங்கு .
பாவைவிளக்கு பெண் கையில் தாங்கிநிற்பது போல அமைக்கும் விளக்கு , பதுமைவிளக்கு .
பாவோடல் நெசவில் இழையோடுந் தடி .
பாவோடுதல் நெய்வார் தொழிலினொன்று , நூலை நெசவுப் பாவாக்குதல் ; சலித்துக் கொண்டே இருத்தல் .
பாழ் அழிவு ; இழப்பு ; கெடுதி ; இழிவு ; அந்தக் கேடு ; வீண் ; வெறுமை ; இன்மை ; ஒன்றுமில்லாத இடம் ; தரிசுநிலம் ; குற்றம் ; வானம் ; மூலப்பகுதி ; புருடன் .
பாழ்க்கடித்தல் அழித்தல் .
பாழ்க்கிறைத்தல் காண்க : பாழுக்கிறைத்தல் .
பாழ்க்கோட்டம் சுடுகாடு .
பாழ்ங்கிணறு தூர்ந்து அல்லது இடிந்து பாழான கிணறு .