பாழ்ங்குடி முதல் - பான்மடை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பாழ்ங்குடி சீர்கெட்ட குடும்பம் .
பாழ்ஞ்சேரி குடியிருப்பற்ற ஊர்ப்பகுதி .
பாழ்த்தல் அழிவடைதல் ; பயனறுதல் ; சீர்குன்றுதல் .
பாழ்ந்தாறு படுகுழி .
பாழ்ந்துரவு காண்க : பாழ்ங்கிணறு .
பாழ்நிலம் விளைவுக்குதவாத நிலம் .
பாழ்படுதல் கேடுறுதல் ; ஒளிமங்குதல் .
பாழ்ம்புறம் குடியோடிப்போன நிலப்பகுதி .
பாழ்மூலை எளிதிற் செல்லமுடியாது சேய்மையிலுள்ள இடம் .
பாழ்வாய்கூறுதல் நன்றியை மறந்து முணுமுணுத்தல் .
பாழ்வீடு குடியில்லாத வீடு .
பாழ்வெளி வெட்டவெளி ; பரவெளி .
பாழாக்குதல் பயனில்லாததாகச் செய்தல் .
பாழாதல் ஊழ்த்தல் ; கெடுதல் .
பாழி அகலம் ; உரை ; குகை ; இடம் ; கோயில் ; நகரம் ; மருதநிலத்தூர் ; பகைவரூர் ; முனிவர் வாழிடம் ; மக்கள் துயிலிடம் ; விலங்கு துயிலிடம் ; சிறுகுளம் ; இறங்குதுறை ; இயல்பு ; எலிவளை ; சொல் ; வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று ; வெறுமை ; வானம் ; கடல் ; பாசறை ; பெருமை ; வலிமை ; போர் .
பாழிமை வெறுமை ; வலிமை .
பாழிவாய் கழிமுகத்துத் திட்டு .
பாழுக்கிறைத்தல் வீணாகச் செயல் செய்தல் .
பாழூர் குடிநீங்கிய ஊர் .
பாளச்சீலை புண்ணுக்கிடும் மருந்துபூசிய சீலை .
பாளம் உலோகக்கட்டி ; தகட்டு வடிவம் ; வெடித்த தகட்டுத்துண்டு ; தோலுரிவு ; வெடியுப்பு ; சீலையின் கிழிவு ; பளபளப்பு .
பாளயம் காண்க : பாளையம் .
பாளாசக்கயிறு குதிரையின் காலுக்குக் கட்டுங் கயிறு .
பாளி அடையாளம் ; பணித்தூசு ; விதானச்சீலை .
பாளிதம் சோறு ; பாற்சோறு ; குழம்பு ; பட்டுப்புடைவை ; விதானச்சீலை ; பணித்தூசு ; கண்டசருக்கரை ; பச்சைக்கருப்பூரம் ; சந்தனம் .
பாளை பாக்கு , தெங்கு , பனை முதலியவற்றின் பூவை மூடிய மடல் ; செம்பாளைநெல் ; பதர் ; சுறாவின் ஈரல் ; கருப்பருவம் ; ஐந்து ஆண்டுக்கு உட்பட்ட பருவம் .
பாளைக்கத்தி கள்ளிறக்குவோர் கைக்கொள்ளும் வெட்டுக்கத்தி .
பாளைசீவுதல் கள்ளிறக்கப் பாளையைச் சீவுதல் .
பாளையப்பட்டு அரசருக்குப் போரில் உதவி செய்யும் நிபந்தனையுடன் படைத்தலைவருக்கு விடப்படும் ஊர்த்தொகுதி .
பாளையம் படை ; பாசறை ; பொற்றை சூழ்ந்த ஊர் ; குறுநிலமன்னரூர் .
பாளையமிறங்குதல் படைவந்து இருத்தல் .
பாற்கட்டி கட்டிப்பால் ; குழந்தைகளின் வயிற்றில் உண்டாகும் கட்டி .
பாற்கட்டு குழந்தை குடியாமையால் முலையில் பால்சுரந்து தேங்குகை .
பாற்கடல் ஏழு கடல்களுள் பால்மயமான கடல் .
பாற்கதிர் நிலா .
பாற்கரன் சூரியன் .
பாற்கரியம் பிரமத்தினின்றும் உலகம் தோன்றிற்று என்னும் மதம் .
பாற்கரியோன் இந்திரன் .
பாற்கலசம் பால் கறக்கும் கலம் .
பாற்கலயம் பால் கறக்கும் கலம் .
பாற்கவடி வெள்ளைச் சோகி .
பாற்காரன் பால் விற்போன் .
பாற்காரி பால் விற்பவள் ; குழந்தைகளுக்குத் தன் முலைப்பாலைக் கொடுத்து வளர்க்கும் செவிலித்தாய் .
பாற்காவடி பாற்குடங்கள் கொண்ட காவடி .
பாற்கிண்டல் பால் கலந்த உணவுவகை .
பாற்குழந்தை கைக்குழந்தை .
பாற்குழம்பு நன்றாகக் காய்ந்து ஏடுபடிந்த பால் .
பாற்குனம் உத்தரநாள் ; பங்குனிமாதம் .
பாற்குனி உத்தரநாள் ; பங்குனிமாதம் .
பாற்கூழ் பாற்சோறு .
பாற்கெண்டை ஒரு மீன்வகை .
பாற்சுண்டு பால்காய்ச்சிய பானையின் அடியிற்பற்றிய பாற்பற்று ; தலையில் தோன்றும் பொடுகு .
பாற்சொக்கு செல்வமகிழ்ச்சி .
பாற்சோற்றி ஒரு பூண்டுவகை .
பாற்சோறு பால்கலந்த அன்னம் .
பாற்பசு கறவைப்பசு .
பாற்பட்டார் துறவியர் .
பாற்படுதல் ஒழுங்குபடுதல் ; நன்முறையில் நடத்தல் .
பாற்பல் முதன்முதல் முளைக்கும் பல் .
பாற்பாக்கியம் கறவைப்பசுக்களை அடைந்திருக்கும் பேறு .
பாற்புட்டி குழந்தைகளுக்குப் பாலூட்டும் புட்டி .
பாற்பொங்கல் பாலில் சமைத்த சோறு .
பாற்போனகம் காண்க : பாற்கூழ் .
பாற்றம் செய்தி .
பாற்று உரியது .
பாற்றுதல் நீக்குதல் ; அழித்தல் .
பாறல் எருது ; இடபராசி ; மழைப்பாட்டம் .
பாறு கேடு ; பருந்து ; கழுகு ;மரக்கலம் .
பாறுதல் அழிதல் ; சிதறுதல் ; நிலைகெட்டோடுதல் ; கிழிபடுதல் ; அடிபறிதல் ; ஒழுங்கற்றுப் பரந்துகிடத்தல் ; பொருதல் ; கடத்தல் .
பாறுபாறாக்குதல் சிதைத்தல் .
பாறை பூமியிலுள்ள கருங்கல்திரள் ; சிறுதிட்டை ; மீன்வகை .
பாறைபடுதல் இறுகுதல் .
பாறையுப்பு கல்லுப்பு .
பான் ஒரு வினையெச்ச விகுதி .
பான்மடை காண்க : பாற்சோறு .