சொல்
|
அருஞ்சொற்பொருள் |
பிசின் | வெட்டுக்குருத்து ; காண்க : பிரம்பு ; ஒட்டுந்தன்மையுள்ள மரப்பால் ; சாம்பிராணி ; பஞ்சிநூல் ; ஒட்டுகை . |
பிசினம் | இவறல் ; கோட்சொல்லுகை . |
பிசினன் | இவறலன் ; கோட்சொல்வோன் . |
பிசினாறி | இவறலன் ; கோட்சொல்வோன் . |
பிசினி | இவறல் , உலோபம் ; இவறலன் ; உலோபி ; கோட்சொல்பவன் ; நெல்வகை ; வெட்டுக்குருத்து . |
பிசினேறி | இவறலன் . |
பிசு | காண்க : பருத்தி ; குட்டநோய்வகை ; நானூறு பலம்கொண்ட எடுத்தலளவை . |
பிசுக்கர் | புல்லர் . |
பிசுக்கு | இவறல் , உலோபம் , குசர் , பசையுறு பொருள் , பெருமிதம் ; பீர்க்கங்கொடி . |
பிசுக்கொட்டுதல் | ஒட்டுந்தன்மையாதல் . |
பிசுகம் | காண்க : வேலிப்பருத்தி . |
பிசுகுதல் | பிசிறுதல் ; இவறல் ; தடுமாறுதல் ; பண்டம் வாங்கியபின் மேலும் கொஞ்சம் கொடுக்கும்படி கேட்டல் . |
பிசுபிசுத்தல் | பசைத்தன்மையாதல் ; மழை தூறிக்கொண்டிருத்தல் ; வெற்றியில்லையாதல் . |
பிசுபிசுத்தவன் | இவறலன் , உலோபி , மந்தன் . |
பிசுமந்தம் | வேப்பமரம் , செங்கழுநீர் . |
பிசுனம் | கோட்சொல்லுகை ; இவறல் , உலோபம் ; குங்குமம் ; மஞ்சள் ; பருத்தி ; காக்கை . |
பிசுனன் | காண்க : பிசினன் . |
பிசுனாறி | காண்க : பிசினாறி ; பிசினி . |
பிசுனி | காண்க : பிசினாறி ; பிசினி . |
பிசைதல் | மா முதலியவற்றைச் சிறிதாக நீர் விட்டுக் கையால் நன்றாகத் துழாவுதல் ; கையாற் பிசைதல் ; தேய்த்தல் ; கசக்குதல் ; உரசுதல் . |
பிஞ்சகன் | அழிப்போன் ; சிவன் . |
பிஞ்சடம் | கண்பீளை . |
பிஞ்சம் | இறகு ; மயிற்றோகை ; சத்திக்கொடி . |
பிஞ்சரம் | அரிதாரம் ; கருமை கலந்த செந்நிறம் ; பொன் . |
பிஞ்சலம் | தருப்பை . |
பிஞ்சிற்பழுத்தல் | இளமையிலே முதிர்வடைதல் ; இளமையிலே அறிவு பெருகுதல் ; கெட்டுப்போதல் . |
பிஞ்சு | இளங்காய் ; முற்றாமை ; இளமையானது ; நகையின் அரும்புக்கட்டு ; கால் . |
பிஞ்சுக்கட்டை | தலையகன்ற தூண் . |
பிஞ்சுப்பறை | இளம்பிறை . |
பிஞ்செழுத்து | ஐந்தெழுத்தில் சத்தியைக் குறிக்கும் 'வ' என்னும் எழுத்து . |
பிஞ்சை | இளங்காய் ; மஞ்சள் . |
பிஞ்ஞகம் | மகளிர் தலைக்கோலம் . |
பிஞ்ஞகன் | அழிப்பவனான சிவன் . |
பிஞ்ஞை | காண்க : நப்பின்னை . |
பிட்குதல் | கத்துதல் . |
பிட்சாகாரம் | பிச்சையுணவு . |
பிட்சாடனம் | இரப்பு . |
பிட்சாடனன் | சிவபிரான் . |
பிட்சாபாத்திரம் | இரக்கப் பயன்படும் கலம் . |
பிட்சான்னம் | காண்க : பிச்சைச்சோறு . |
பிட்டகம் | பலகாரம் . |
பிட்டடித்தல் | கால்கள் பிட்டத்திற்படக் குதித்தல் . |
பிட்டம் | பரப்பு ; பிசைந்த மா ; பின்பக்கம் ; இடுப்பின் பூட்டு ; குண்டி ; முதுகு . |
பிட்டன் | மதத்திற்குப் புறம்பானவன் ; ஆடுதின்னாப்பாளை . |
பிட்டி | பருத்திருக்கை ; சிறு கூடை ; குழந்தை நோய்வகை ; பின்பக்கம் ; இடுப்பின் பூட்டு ; குண்டி ; முதுகு ; அரைத்த மா ; தரிசுநிலம் ; குறைவு ; தாழ்வு . |
பிட்டு | சிற்றுண்டிவகை ; தினை மா . |
பிட்டுக்காட்டுதல் | கூறுபடுத்தி விளக்கிச் சொல்லுதல் ; மறை வெளிப்படுத்துதல் . |
பிட்டுவம் | அரைக்கை . |
பிட்டை | வீங்கின அண்டம் . |
பிடகம் | நூல் ; கூடை ; புத்தநூல் ; கொப்புளம் ; பிச்சை . |
பிடகன் | திரிபிடக ஆசிரியனான புத்தன் ; மருத்துவன் . |
பிடகாரி | நஞ்சுமருத்துவன் . |
பிடகை | பூந்தட்டு . |
பிடங்கு | கத்தியின் முதுகு ; ஆயுதங்களின் அடிப்பாகம் . |
பிடர் | புறங்கழுத்து ; செருக்கு ; பெருமை . |
பிடர்த்தலை | புறங்கழுத்து . |
பிடரி | புறங்கழுத்து . |
பிடல் | கதவு . |
பிடவம் | குட்டிப்பிடவமரம் ; மரக்கிளை . |
பிடவு | ஒரு மரவகை ; குட்டிப்பிடவமரம் . |
பிடா | ஒரு மரவகை ; குட்டிப்பிடவமரம் . |
பிடாகை | உட்கிடையூர் . |
பிடாந்திரம் | இல்லாப் பழி . |
பிடாம் | போர்வை . |
பிடார் | செருக்கு ; பெருமை . |
பிடாரச்சொல் | மருத்துவச்சொல் ; புதிதாய் உண்டாக்கிய சொல் . |
பிடாரன் | பாம்பு பிடிப்போன் ; மருத்துவன் ; குறவன் , இசை பாடுவோன் . |
பிடாரி | ஓர் ஊர்த்தேவதை . |
பிடாரிச்சி | குறப்பெண் . |
பிடி | பற்றுகை ; மனத்திற் பற்றுகை ; நம்பிக்கை ; மதக்கொள்கை ; கைம்முட்டி ; மற்பிடி ; ஆயுதப்பிடி ; குதிரையின் வாய்க்கருவியிற் கோக்குங்குசை ; உபாயம் ; உறுதி ; உதவி ; உள்ளங்கைப் பிடியளவு ; பணியாரவகை ; நான்கு விரல்கொண்ட ஓர் அளவு ; பெண்யானை ; பேய் ; உலர்ந்தது ; காண்க : ஏலம் ; சீட்டாட்டத்தில் ஒருமுறை எடுக்கப்படும் சீட்டு . |
பிடிக்கட்டு | பனையோலையின் சிறுகட்டு . |
பிடிக்கொம்பன் | சிறுகொம்புள்ள விலங்கு . |
பிடிகம் | பிள்ளைக் கைவளை . |
பிடிகயிறு | மாடுகட்டுங் கயிறு . |
பிடிகாரன் | மீன் பிடிப்பவன் ; வேட்டையாடுவோன் . |
![]() |
![]() |
![]() |