சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பிரமாயுதம் | பத்து நூறாயிரம் . |
| பிரமானந்தம் | வீட்டின்பம் ; பேரின்பம் . |
| பிரமி | ஒரு பூண்டுவகை . |
| பிரமித்தல் | திகைத்தல் , மயங்குதல் . |
| பிரமிதி | அளவையால் அறியும் அறிவு . |
| பிரமிப்பு | மயக்கம் , திகைப்பு . |
| பிரமியம் | ஒரு நோய்வகை ; ஒரு பூண்டுவகை . |
| பிரமிருதம் | உழவுத்தொழில் ; உழவால் வரும் பொருள் . |
| பிரமுகம் | சிறந்தது ; நிகழ்காலம் . |
| பிரமுகன் | சிறந்தோன் . |
| பிரமேகம் | வெட்டைநோய் . |
| பிரமேயம் | நியாய அளவையால் அளந்தறியப்பட்ட பொருள் ; வாய்ப்பு ; சொல்லப்படும் பொருள் ; ஐயம் . |
| பிரமை | மயக்கம் ; பைத்தியம் ; பெருமோகம் ; அறியாமை . |
| பிரமைபிடித்தல் | பித்துக்கொள்ளுதல் . |
| பிரமோதம் | பெருமகிழ்ச்சி . |
| பிரமோதூத | அறுபதாண்டுக்கணக்கில் நான்காம் ஆண்டு . |
| பிரமோற்சவம் | ஆண்டுக்கொருமுறை கோயில்களில் நடக்கும் சிறப்புத் திருவிழா . |
| பிரயத்தனம் | முயற்சி . |
| பிரயாசப்படுதல் | முயற்சி எடுத்தல் ; வருந்தி உழைத்தல் . |
| பிரயாசம் | உழைப்பு ; முயற்சி ; வருத்தம் ; வேள்விவகை . |
| பிரயாசை | உழைப்பு ; முயற்சி ; வருத்தம் ; முயற்சியுள்ளவர் . |
| பிரயாணம் | பயணம் ; ஆத்திரை ; இறப்பு . |
| பிரயுதம் | பத்துலட்சம் ; கோடி . |
| பிரயோகம் | மந்திர ஏவல் ; செலுத்துகை ; பயன் படுத்துதல் ; மருந்து ; உவமானம் ;மேற்கோள் ; குதிரை . |
| பிரயோகித்தல் | செலுத்துதல் ; பயன்படுத்துதல் . |
| பிரயோசனம் | பயன்படுகை ; ஆதாயம் ; சடங்கு ; பயன் . |
| பிரயோசனம்பண்ணுதல் | உதவிசெய்தல் . |
| பிரயோசனன் | பயன்படுபவன் ; நல்லகுணமுள்ளவன் . |
| பிரலம்பம் | தொங்குகை ; அசைவு ; கிளை . |
| பிரலாபம் | பிதற்றல்மொழி ; புலம்பல் ; பிதற்றுதல் உண்டாக்கும் சன்னி . |
| பிரலாபித்தல் | புலம்புதல் ; பிதற்றுதல் ; ஊன்றிப்பேசுதல் . |
| பிரவசனம் | சொற்பொழிவு . |
| பிரவஞ்சம் | காண்க : பிரபஞ்சம் . |
| பிரவணம் | நான்கு தெருக்கள் கூடுமிடம் ; வளைவு ; பள்ளத்தாக்கு . |
| பிரவர்த்தகம் | முயற்சி ; காண்க : பிரவர்த்தனம் . |
| பிரவர்த்தனம் | செல்லுதல் ; செய்தல் . |
| பிரவர்த்தி | முயற்சி ; மலக்கழிவு . |
| பிரவர்த்தித்தல் | முயலுதல் . |
| பிரவரம் | மரபு , வமிசம் . |
| பிரவாகம் | வெள்ளம் ; குளம் ; தொழில் . |
| பிரவாதம் | காற்று ; ஊர்ப்பேச்சு . |
| பிரவாலம் | இளந்தளிர் . |
| பிரவாளம் | பவளம் . |
| பிரவிடை | காண்க : பிரவுடை . |
| பிரவிருத்தன் | முயல்பவன் ; அதிகாரசிவன் . |
| பிரவிருத்தி | காண்க : பிரவர்த்தி . |
| பிரவிருத்தித்தல் | காண்க : பிரவர்த்தித்தல் . |
| பிரவீணன் | விரகன் ; திறமையானவன் . |
| பிரவுடை | முப்பத்தொன்று முதல் ஐம்பத்தைந்து வயதுவரை உள்ள பெண்பாற்பருவம் ; பருவமடைந்த பெண் . |
| பிரவேசம் | வேலை முதலியவற்றின் தொடக்கம் ; நடிகர் முதலியோர் தோன்றுதல் ; வாயில் . |
| பிரவேசனம் | வாயில் . |
| பிரவேசித்தல் | உட்செல்லுதல் . |
| பிரவை | ஒளி ; திருவாசி ; துர்க்கை ; தண்ணீர்ப்பந்தல் . |
| பிரளயகாலம் | உலக முடிவுகாலம் . |
| பிரளயம் | வெள்ளம் ; ஒரு பேரெண் ; கற்பமுடிவு ; அழிவு ; படையிலொரு தொகை . |
| பிரளயாக்கினி | ஊழித் தீ . |
| பிரளயாகலர் | ஆணவகன்ம மலங்களையுடைய உயிர்கள் . |
| பிரற்றுதல் | உரத்துச் சத்தமிடுதல் . |
| பிராக்கியன் | அறிவுடையோன் . |
| பிராக்கு | சென்றது . |
| பிராகபாவம் | முன்னின்மை . |
| பிராகாமியம் | எண்வகைச் சித்திகளுள் ஒன்று , நினைத்த இன்பங்களையடைவது ; ஒரே காலத்தில் பெண்கள் பலரோடு இன்பம் நுகரும் ஆற்றல் . |
| பிராகாரம் | கோயில் சுற்றுப்பகுதி ; மதில் . |
| பிராகிருதம் | அழியத்தக்கது ; இயற்கையானது ; பிரகிருதி சம்பந்தமானது ; வடமொழித்திரிபாயுள்ள மொழி . |
| பிராகிருதர் | பிரகிருதியில் தோன்றிய பொருள்களையே உண்மை என்று எண்ணுவோர் ; சாமானியர் . |
| பிராசம் | அடுத்தடுத்து வரும் எழுத்தோசை ஒற்றுமை ; ஒர் ஆயுதவகை . |
| பிராசயம் | ஆதி . |
| பிராசனம் | சோறூட்டுதல் ; உண்ணுதல் . |
| பிராசாதம் | கோயில் ; உபரிகை ; கருவறை ; மந்திரம் . |
| பிராசாபத்தியம் | பரிசப்பொருள் பெறாது மகட்கொடை நேரும் மணவகை ; காண்க : பிரசாபத்தியம் ; மைத்துனக் கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறுக்காது கொடுக்கும் மணவகை ; பகலில் ஒன்பதாம் முகூர்த்தம் ; உரோகிணிநாள் ; தலையிடுகை ; விரதவகை . |
| பிராசி | கிழக்கு ; முன்னுள்ளது . |
| பிராசீனம் | பழைமை ; காண்க : ஆடுதின்னாப்பாளை . |
| பிராசீனர் | முன்னோர் . |
| பிராஞ்ஞத்துவம் | நல்லறிவு ; நல்லறிவுடைமை . |
| பிராஞ்ஞம் | நல்லறிவு . |
|
|
|