சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பிராஞ்ஞன் | அறிவுடையவன் ; உயிர் . |
| பிராட்டி | தலைவி ; தேவி ; இறைவி . |
| பிராணசகி | உயிர்த்தோழி . |
| பிராணசங்கடம் | பெருந்துன்பம் . |
| பிராணசினேகம் | பெருநட்பு . |
| பிராணசினேகிதன் | உயிர்நண்பன் . |
| பிராணத்தறுவாய் | உயிர்போகுஞ் சமயம் . |
| பிராணத்தியாகம் | தானே உயிர்விடுகை . |
| பிராணநாதன் | கணவன் . |
| பிராணநாயகன் | கணவன் . |
| பிராணநாயகி | மனைவி . |
| பிராணம் | காண்க : பிராணன் . |
| பிராணவாயு | உயிர்வளி ; பத்து வாயுக்களுள் மூச்சை நிகழ்விப்பது ; வாயுவகை ; நோய்வகை . |
| பிராணவேதனை | இறப்புத் துன்பம் . |
| பிராணன் | உயிர் ; மூச்சு ; பத்துவகை வாயுக்களுள் மூச்சை நிகழ்விப்பது ; வலிமை ; இரணியகருப்பன் . |
| பிராணாந்தம் | இறுதிக்காலம் ; வாழ்நாள் முடிவுவரை . |
| பிராணாந்திகம் | இறுதிக்காலம் ; வாழ்நாள் முடிவுவரை . |
| பிராணாயாமம் | எண்வகை யோகத்துள் ரேசகம் , பூரகம் , கும்பகம் என்னும் மூவகையாய் மூச்சை அடக்கியாளும் யோகமுறை . |
| பிராணி | உயிருள்ளது , உயிரி . |
| பிராணித்தல் | மூச்சுவிடுதல் . |
| பிராணேசன் | காண்க : பிராணநாதன் . |
| பிராத்தி | எண்வகைச் சித்தியுள் ஒன்று , வேண்டுவன அடைதல் ; பயன் ; விதி . |
| பிராத்திகன் | விரும்பியதை அடையச் செய்வோன் . |
| பிராத்தித்தல் | காண்க : பிரார்த்தித்தல் . |
| பிராதக்காலம் | விடியற்காலம் . |
| பிராதானியம் | முதன்மை . |
| பிராது | முறையீடு . |
| பிராந்தகன் | அறிவு மயங்கியவன் . |
| பிராந்தன் | அறிவு மயங்கியவன் . |
| பிராந்தம் | ஓரம் ; நாட்டுப்பகுதி ; திரிபுணர்ச்சி . |
| பிராந்தி | மயக்கம் ; கழிச்சல் ; சாராயம் ; கவலை ; திரிபுணர்ச்சி . |
| பிராந்திஞானம் | திரிபுணர்ச்சி , ஒன்றை ஒன்றாக உணரும் அறிவு . |
| பிராந்திமதாலங்காரம் | ஒப்புமைபற்றிய மயக்கவணி . |
| பிராந்தியம் | சுற்றுப்புறம் ; நாட்டுப்பகுதி . |
| பிராந்து | பருந்து ; மயக்கம் ; அறிவு மயங்கியவன் . |
| பிராப்தி | பேறு ; விரும்பியதை அடைதலாகிய பெரும்பேறு , பயன் ; விதி ; உரிமம் . |
| பிராப்பியம் | பயன் ; பெறத்தக்கது ; எய்தப்படுவதாகிய செயப்படுபொருள் . |
| பிராமணம் | பிராமண சம்பந்தமானது ; மந்திர பாகமல்லாத வேதப்பகுதி . |
| பிராமணன் | பார்ப்பனன் . |
| பிராமணி | பார்ப்பனி ; எழுவகை மாதருள் ஒருத்தி ; காண்க : பாம்பரணை . |
| பிராமணியம் | பார்ப்பனத்தன்மை ; சான்று . |
| பிராமமுகூர்த்தம் | சூரியோதயத்துக்கு இரண்டு நாழிகைக்கு முன்னுள்ள இரண்டு நாழிகை நேரம் . |
| பிராமி | கலைமகள் ; வடமொழியின் பழைய வடிவெழுத்துவகை . |
| பிராமியம் | காண்க : பிராமமுகூர்த்தம் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; சத்தியலோகம் . |
| பிராயச்சித்தம் | பாவசாந்தி , கழுவாய் ; பாவத்தைப் போக்குவதற்கான சடங்கு ; தண்டனை . |
| பிராயம் | வயது ; நிலை ; சமானம் . |
| பிரார்த்தம் | பழவினை . |
| பிரார்த்தனம் | வேண்டுகோள் ; நேர்த்திக்கடன் ; ஒரு விண்ணப்பம் ; துதி . |
| பிரார்த்தனை | வேண்டுகோள் ; நேர்த்திக்கடன் ; ஒரு விண்ணப்பம் ; துதி . |
| பிரார்த்தித்தல் | வேண்டுதல் ; நேர்த்திக்கடன்பூணுதல் ; துதித்தல் . |
| பிராரத்தம் | காண்க : பிரார்த்தம் . |
| பிராரத்துவம் | காண்க : பிரார்த்தம் . |
| பிராரம்பம் | தொடக்கம் . |
| பிராவண்ணியம் | ஈடுபாடு . |
| பிராவம் | கொல்லை . |
| பிராறு | நிறைபுனல் ; நீரூர்பாதை . |
| பிரான் | தலைவன் ; கடவுள் ; சிவன் ; போற்றுபவன் . |
| பிரிசம் | பொருளின் அருமை . |
| பிரிசல் | பொருளின் அருமை ; பாகம் ; பிரிந்து கிடக்கும் நிலை . |
| பிரித்தல் | பிரியச்செய்தல் ; முறுக்கவிழ்தல் ; பகுத்தல் ; வகுத்தல் ; கட்டவிழ்தல் ; பங்கிடுதல் . |
| பிரிதல் | விட்டுவிலகுதல் ; கட்டவிழ்தல் ; பகுக்கப்படுதல் ;வேறுபடுதல் ; முறுக்கவிழ்தல் ; வகைப் படுதல் ; வசூலித்தல் ; நினைத்தல் . |
| பிரிதி | அன்பு ; விருப்பம் ; உவகை ; திருமால் தலமான இமயத்துள்ள நந்தப்பிரயாகை ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று . |
| பிரிந்திசைக்குறள் | ஒத்தாழிசைக் கலியுறுப்பினுள் ஒன்றாகிய அம்போதரங்கம் . |
| பிரந்திசைத்துள்ளல் | பல தளையும் விரவிவரும் கலிப்பா ஓசைவகை |
| பிரிந்திசைத்தூங்கல் | பல தளையும் விரவிவரும் வஞ்சிப்பா ஓசைவகை . |
| பிரிநிலை | வேறுபடுத்திக்காட்டும் நிலை . |
| பிரிநிலையெச்சம் | பிரிக்கப்பட்ட பொருள் விளங்கக் கூறப்பெறாமல் எஞ்சிநிற்கும் வாக்கியம் ; வாக்கியத்தில் கூறப்படாது எஞ்சிநிற்குஞ் சொல் . |
| பிரிப்பு | வேறுபாடு ; பிரிவு . |
| பிரிபு | வேறுபாடு ; பிரிவு . |
| பிரிமணை | காண்க : புரிமணை . |
| பிரிமொழிச்சிலேடை | ஒருவகையானின்ற சொல்லைப் பிரித்துத் தொகை வேறுபடுத்திப் பலபொருள் கொள்வது ; பிரிக்கப்பட்டுப் பலபொருள் பயக்கும் சொற்றொடர் . |
| பிரியகம் | கடப்பமரம் ; வேங்கைமரம் . |
| பிரியங்காட்டுதல் | அன்பு வெளிப்படுத்துதல் . |
| பிரியதரிசினி | வன்னிமரம் . |
| பிரியப்படுத்துதல் | மகிழ்வித்தல் ; இச்சகம் பேசுதல் ; தன்னுடையதை உயர்த்திப்பேசுதல் . |
|
|
|