சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பிரியப்படுதல் | அன்புவைத்தல் . |
| பிரியம் | அன்பு ; விருப்பம் ; விரும்பிய பொருள் ; பண்டங்களின் பெறலருமை . |
| பிரியலர் | ஒருவரை ஒருவர் பிரியாதிருக்கும் நண்பர் . |
| பிரியன் | அன்புள்ளவன் ; கணவன் . |
| பிரியாம்பு | மாமரம் . |
| பிரியாமை | நீங்காமை . |
| பிரியாவிடை | உள்ளம் பிரியாதே விடை பெறுகை . |
| பிரியாவுடையாள் | சிவபிரானைப் பிரியாத பார்வதி . |
| பிரியை | பெண் ; மனைவி . |
| பிரிவாற்றாமை | தலைவன் பிரிவைத் தலைவி பொறுக்கமுடியாமை . |
| பிரிவிலசைநிலை | தனியே வழங்காது இரட்டித்தே நிற்கும் அசைநிலை . |
| பிரிவினை | வேறுபாடு ; பிரிகை ; பாகம் ; ஒற்றுமையின்மை . |
| பிரிவு | பிரிதல் ; வகுத்தல் ; பாகம் ; ஒற்றுமையின்மை ; பகுதி ; அவிழ்கை ; வேறுபாடு ; இடையீடு ; மூலமதத்தின் வேறுபட்ட உட்பேதம் ; இறப்பு . |
| பிரிவுக்கட்டை | நீரோட்டத்தைப் பிரிக்கும் மதகு . |
| பிரீதி | அன்பு ; விருப்பம் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று . |
| பிருகதி | கத்தரிச்செடி ; மாமரம் ; ஒரு வீணைவகை . |
| பிருகற்பதி | வியாழன் ; புரோகிதன் ; அறநூலாசிரியருள் ஒருவர் ; அறநூல் பதினெட்டனுள் பிருகற்பதியால் இயற்றப்பட்ட நூல் . |
| பிருகு | பனை முதலியவற்றின் முற்றாக் கிழங்கு ; சுக்கிரன் ; ஒரு முனிவர் . |
| பிருகுடி | புருவம் ; நெற்றியை நெரிக்கை . |
| பிருங்கம் | வண்டு ; கரிசலாங்கண்ணி . |
| பிருங்கராசம் | கரிசலாங்கண்ணி . |
| பிருங்கிமலை | பறங்கிமலை . |
| பிருசகன் | கொலைஞன் . |
| பிருட்டம் | பின்பக்கம் ; இடுப்பின் பூட்டு ; குண்டி ; முதுகு ; பரப்பு ; அரைத்த மா . |
| பிருடை | யாழ் முதலியவற்றின் முறுக்காணி ; சுழலாணி ; அடைக்குந் தக்கை ; பொய்ச் செய்தி ; போலி நடிப்பு . |
| பிருத்தியன் | அடிமை . |
| பிருதிவி | நிலம் , ஐம்பூதத்தினுள் ஒன்று ; கடுக்காய்வகை . |
| பிருதிவிலிங்கம் | காஞ்சி , திருவாரூரிலுள்ள மண்ணாலாகிய இலிங்கம் . |
| பிருது | விருது ; சூரிய குலத்தரசருள் ஒருவன் . |
| பிருதுமானம் | யானைக்கொம்புகளுக்கு இடையிலுள்ள முகப்பகுதி . |
| பிருதூதரம் | ஆட்டுக்கடா . |
| பிருந்தம் | கூட்டம் ; துளசிச்செடி ; விலங்கின் கூட்டம் . |
| பிருந்தாவனம் | துளசிக்காடு ; கல்லறை . |
| பிருந்தை | துளசிச்செடி ; காண்க : நெருஞ்சி . |
| பிரேதக்குழி | கல்லறை . |
| பிரேதகருமம் | சாவுச்சடங்கு . |
| பிரேதகாரியம் | சாவுச்சடங்கு . |
| பிரேதபதி | இறந்தோர்க்குத் தலைவனான யமன் . |
| பிரேதம் | பிணம் ; பேய் ; தெற்கு ; பிதிரர் ; பின் . |
| பிரேதவனம் | நன்காடு . |
| பிரேதவிசாரணை | ஐயப்பட்ட சாவின் காரணத்தைப்பற்றிய விசாரணை . |
| பிரேயம் | காண்க : பிழி . |
| பிரேரகப்பிரேரியபாவம் | தூண்டுவோன் தூண்டப்படுவோன் இருவருக்குமுள்ள தொடர்பு . |
| பிரேரகம் | தூண்டுவது ; சத்தியின் இயக்கம் . |
| பிரேரகன் | வினை நடத்துவோன் ; ஏவுவோன் ; முன்மொழிபவன் , பிரேரிப்பவன் . |
| பிரேரணம் | காண்க : பிரேரணை . |
| பிரேரணை | தூண்டுகை ; முன்மொழிகை , அவையோர் முடிவு அறிய ஒரு செய்தியை முதலில் எடுத்துக் கூறுகை . |
| பிரேரித்தல் | செயற்படுத்துதல் ; அவையோர் முடிவு அறிய ஒரு செய்தியை எடுத்துக் கூறுதல் ; முன்மொழிதல் ; நல்லாசானிடம் மாணாக்கனைச் சேர்ப்பித்தல் ; காரியப்படுதல் . |
| பிரேரியம் | செலுத்தப்படுவது . |
| பிரை | உறைமோர் ; பாதி ; பயன் ; பந்தலிட்ட இடம் ; தொழிற்சாலை ; சுவரின் மாடம் . |
| பிரைக்காற்சின்னி | அரைக்காற் படி . |
| பிரைகுத்துதல் | உறைமோர் குத்துதல் . |
| பிரோகம் | முடிச்சு . |
| பிரௌடம் | பெருமிதமானது . |
| பில்குதல் | சிறுதுவலை வீசுதல் ; பொசிதல் ; வழிதல் ; கொப்புளித்தல் . |
| பில்லடை | இடியப்பம் . |
| பில்லாணி | பெண்கள் கால்விரலில் அணியும் மிஞ்சி . |
| பில்லி | சூனியவித்தை ; சூனியக்காரர் ஏவும் தீத்தேவதை ; பூனை . |
| பில்லு | நெசவுப்பாவைச் செம்மை செய்யும் கருவிவகை ; புல் ; பணச்சீட்டு . |
| பில்லை | மங்கிய மஞ்சள் நிறம் ; வில்லை ; திரண்டு உருண்டது ; தலையிலணியும் அணிவகை ; சதுர ஓடு ; ஆணியின் திருகுவரை ; சேவகர் முதலியோர் தரிக்கும் வில்லை . |
| பிலகரி | ஒரு பண்வகை . |
| பிலகாரி | பெருச்சாளி . |
| பிலஞ்சுலோபம் | எறும்பு . |
| பிலந்துவாரம் | கீழுலகஞ் செல்லும் வழி ; நிலவறை . |
| பிலம் | பாதாளம் ; கீழறை ; குகை ; வளை . |
| பிலம்பி | புளிச்சைக்காய் . |
| பிலவ | அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தைந்தாம் ஆண்டு . |
| பிலவகம் | குரங்கு ; தவளை . |
| பிலவங்க | அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தோராம் ஆண்டு . |
| பிலவங்கம் | ஆடு ; தவளை ; மான் ; நஞ்சுள்ள உயிரினங்கள் . |
| பிலவம் | தவளை ; ஆடு ; காண்க : வாகை . |
| பிலன் | எறும்பு . |
| பிலா | பலாமரம் . |
| பிலாக்கு | ஒரு மூக்கணிவகை . |
| பிலாச்சை | கடல்தவளை ; மீன்வகை . |
|
|
|