புரவித்தேவர் முதல் - புருடன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
புரவித்தேவர் குதிரைமுகமுள்ள தேவரான அசுவினிதேவர்கள் .
புரவிவட்டம் குதிரை செலுத்தும் வீதியாகிய வையாளிவீதி .
புரவிவேள்வி காண்க : அசுவமேதம் .
புரவு பாதுகாப்பு ; அரசு ; கொடை ; ஆட்சியிடம் ; அரசிறை ; இறையிலி நிலம் ; ஆற்றுநீர் பாயும் வயல் ; செழுமை .
புரவுவரி காண்க : புரவரியார் .
புரவுவரித்திணைக்களம் அரசிறைக் கணக்கர் கூடும் உத்தியோகசாலை .
புரளி பொய் ; வஞ்சனை ; குறும்பு ; சண்டை ; கலகம் ; முருட்டுத்தனம் .
புரளிக்காரன் பொய்யன் ; புரட்டுச்செய்வோன் ; சண்டையிடுபவன் ; ஆணையை மீறிக் கலகஞ்செய்பவன் .
புரளிபண்ணுதல் குறும்புசெய்தல் ; எள்ளிநகையாடல் .
புரளுதல் உருளுதல் ; கழிதல் ; அலைமறிதல் ; நிரம்பிவழிதல் ; அழுக்காதல் ; நீரிற்கலத்தல் ;சொற்பிறழுதல் ; மிகுதல் ; மாறிமாறிவருதல் ; சாதல் .
புராகிருதபாவம் முன்செய்த தீவினை .
புராகிருதம் முன்செய்தது .
புராணகன் காண்க : புராணிகன் ; படிப்போன் .
புராணபுருடன் திருமால் .
புராணம் பழைமை ; தொன்மம் ; பழங்கதை ; வேதவாக்கியப் பொருள்களை வலியுறுத்தும் நூல் ; கோயிலிற் புராணம் படிப்பதற்கு விடப்பட்ட மானியம் .
புராணன் பழமையான கடவுள் .
புராணிகன் புராணப் பிரசங்கம் செய்வோன் ; புராணம் செய்த ஆசிரியன் .
புராணை காண்க : புராதனி .
புராதனகாண்டம் விவிலிய நூலின் பழைய ஏற்பாடு .
புராதனம் பழமையானது ; பழமை ; கிழத்தனம் ; பழஞ்சோறு .
புராதனர் முன்னோர் .
புராதனி பழமையான பார்வதி .
புராந்தகன் காண்க : புரமெரித்தோன் .
புராந்தகி சிவசத்தி .
புராந்திமகாண்டம் காண்க : புராதனகாண்டம் .
புராந்திமம் பழைமை .
புராரி காண்க : புரமெரித்தோன் .
புராவிருத்தம் இதிகாசம் .
புரி செய்கை ; கயிறு ; முறுக்கு ; சுருள் ; சுரி ; சங்கு ; விருப்பம் ; யாழ்நரம்பு ; மாலை ; கட்டு ; தலைநகர் ; மருதநிலத்தூர் ; உடல் .
புரி (வி) புரிஎன் ஏவல் ; செய் ; விரும்பு .
புரிக்கூடு நெற்சேர் .
புரிகுழல் கடைகுழன்று சுருண்ட கூந்தல் .
புரிகை அங்கக்கிரியைவகை .
புரிசடை திரண்டு சுருண்ட சடை .
புரிசம் அருமை ; நான்குமுழ நீளம் .
புரிசாலம் கெஞ்சுகை ; விண்ணப்பம் .
புரிசை மதில் .
புரித்தல் விரும்பச்செய்தல் ; நிரைத்தல் ; பதித்தல் ; பொருள் விளங்குதல் ; விளங்குதல் .
புரிதல் விரும்புதல் ; தியானித்தல் ; செய்தல் ; படைத்தல் ; ஈனுதல் ; கொடுத்தல் ; நுகர்தல் ; உற்றுப்பார்த்தல் ; விசாரணைசெய்தல் ; சொல்லுதல் ; நடத்துதல் ; மேற்கொள்ளுதல் ; முறுக்குக்கொள்ளுதல் ; திரும்புதல் ; மிகுதல் ; அசைதல் ; விளங்குதல் ; பொருள் விளங்குதல் .
புரிதிரித்தல் கயிற்றுக்காகப் புரிமுறுக்குதல் ; கெடுக்க வழிதேடுதல் .
புரிந்தோர் நண்பர் .
புரிநாண் திரித்துச் செய்யப்பெற்ற கயிறு .
புரிநூல் காண்க : புரிமுந்நூல் .
புரிப்பித்தல் வளைந்து திரும்பச் செய்தல் .
புரிமணை பாண்டம் வைப்பதற்கு வைக்கோல் , நார் முதலியவற்றால் அமைத்த பீடம் .
புரிமுகம் கோபுரம் ; சங்கு ; நத்தை .
புரிமுந்நூல் பூணூல் .
புரிமுறுக்கல் கோள்மூட்டிவிடுதல் .
புரிமுறுக்கு காண்க : புரிமுறுக்கல் ; மலராத தாமரைப் பூ .
புரிமுறுக்குதல் கோட்சொல்லுதல் .
புரியட்டகம் நுண்ணுடல் .
புரியட்டகாயம் நுண்ணுடல் .
புரியணை காண்க : புரிமணை .
புரியம் கூத்துவகை .
புரியிட்டீர்த்தல் பழுதையினாற் கட்டி இழுத்தல் ; துன்புறுத்தல் .
புரியைக்கட்டியிழுத்தல் பழுதையினாற் கட்டி இழுத்தல் ; துன்புறுத்தல் .
புரிவலித்தல் கட்டுதல் .
புரிவளை முறுக்குவளையல் .
புரிவிடுதல் கயிறுதிரிக்கப் புரியை முறுக்குதல் .
புரிவில்புகழ்ச்சியணி காண்க : புகழாப்புகழ்ச்சி .
புரிவின்மைநயம் புத்த சமயத்து நயம் நான்கனுள் ஒன்று .
புரிவு அன்பு ; விருப்பம் ; தொழில் ; தவறு ; தப்பி நீங்குகை ; வேறுபடுகை ; தெளிவு .
புரீடம் மலம் ; அழுக்கு .
புரு ஒரு மரவகை ; மிகுதி ; பருமை ; வீடுபேறு ; குழந்தை ; ஓரரசன் ; விருடப தீர்த்தங்கரர் ; ஓர் அசுரன் .
புருகூதன் வேள்விகளில் மிகுதியாக அழைக்கப்படும் இந்திரன் .
புருடகாலம் முப்பத்தைந்து ஆண்டுக்காலம் .
புருடதத்துவம் சுத்தாசுத்த தத்துவம் ஏழனுள் ஒன்றாகியதும் மும்மலங்களோடு கூடியதுமான தத்துவம் .
புருடநட்சத்திரம் இரேவதிநாள் .
புருடநாள் இரேவதிநாள் .
புருடம் ஐந்துவகைப் பிரமங்களுள் ஒன்றான மந்திரம் ; காண்க : தற்புருடம் ; நான்குமுழ நீளம் ; புன்னைமரம் .
புருடமேதம் மனிதவேள்வி .
புருடமோகினி பார்வதி .
புருடராகம் ஒன்பதுவகை மணிகளுள் ஒன்று .
புருடவாகனன் காண்க : நரவாகனன் .
புருடன் ஆண்மகன் ; கணவன் ; மனிதன் ; சிற்றுயிர் , சீவான்மா ; பேருயிர் ; பரமான்மா ; காண்க : புருடதத்துவம் .