சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| புருடாமிருகம் | மனிதமுகம்கொண்ட விலங்கு வகை . |
| புருடாயிதம் | புணர்ச்சிவகையுள் ஒன்று . |
| புருடார்த்தசொரூபம் | அறம் , பொருள் , இன்பம் , தன்னைத்தான் அறிதல் , இறைவனை அறிதல் என ஆன்மாவால் அடையப்படும் ஐவகைப்பேறு . |
| புருடார்த்தம் | மனிதன் அடையவேண்டிய அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப்பொருள் . |
| புருடோத்தமன் | சிறந்தவன் ; திருமால் . |
| புருவநெரித்தல் | கோபத்தால் புருவங்களை வளைத்தல் . |
| புருவம் | கண்ணின்மேல் உள்ள மயிர்வளைவு ; புண்ணின் விளிம்பு ; வரம்பு ; குதிரை . |
| புருவை | ஆடு ; செம்மறியாடு ; பெண்ணாடு ; இளமை . |
| புரூணகத்தி | கருவழித்தலாகிய பாவச்செயல் . |
| புரூணகம் | காண்க : புரூணகத்தி ; கரு . |
| புரூணம் | கரு ; இளமை . |
| புரூரம் | புருவம் . |
| புரை | குற்றம் ; உட்டுளைப்பொருள் ; குரல்வளை ; விளக்குமாடம் ; உள்ளோடும் புண் ; கண்ணோய்வகை ; பொய் ; களவு ; இலேசு ; மடிப்பு ; கூறுபாடு ; வீடு ; ஆசிரமம் ; தேவாலயம் ; அறை ; பெட்டியின் அறை ; மாட்டுத்தொழுவம் ; இடம் ; ஏகதேசம் ; பூமி ; பழைமை : ஒப்பு ; உயர்ச்சி ; பெருமை . |
| புரைக்கட்டி | உட்டுளையுடைய புண்கட்டி . |
| புரைக்குழல் | பிடரியில் அல்லது கழுத்தில் தோன்றும் சதைக்கட்டி ; உட்டுளையுடைய புண்கட்டி . |
| புரைக்கேறுதல் | காண்க : புரையேறுதல் . |
| புரைச்சல் | திணறுமூச்சு . |
| புரைசல் | பொத்தல் ; கமுக்கம் ; இரகசியம் ; வலுக்குறைவு ; குழப்பம் ; சச்சரவு ; துளை ; மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று ; குற்றம் . |
| புரைசு | பலாசுமரம் . |
| புரைசை | காண்க : புரசை . |
| புரைத்தல் | குற்றப்படுதல் ; தப்புதல் ; பெருமையாதல் ; மறைவு வெளிப்படுதல் ; இசைநழுவுதல் . |
| புரைதல் | ஒத்தல் ; தைத்தல் ; மறைத்தல் ; பொருந்துதல் ; நேர்தல் ; மூச்சுத்திணறுதல் . |
| புரைப்படுதல் | பொந்துபடுதல் . |
| புரைப்பு | குற்றம் ; ஐயம் ; ஒப்பு . |
| புரைப்புண் | புரையோடிய புண் . |
| புரைபடுதல் | வருந்துதல் . |
| புரைமை | உயர்ச்சி ; பெருமை . |
| புரைய | ஓர் உவமவுருபு . |
| புரையன் | வீடு ; இலைக்குடில் . |
| புரையிடம் | தோப்பு . |
| புரையுநர் | ஒப்பவர் . |
| புரையுள் | வீடு . |
| புரையேறுதல் | உணவுப்பொருள் உணவுக் குழலின்வழிச் செல்லாது மூச்சுக்குழலிற் சென்று அடைத்துக்கொள்ளுதல் . |
| புரையோடுதல் | புண்ணில் உட்டுளை உண்டாதல் . |
| புரையோர் | பெரியோர் ; மெய்ப்பொருளுணர்ந்தோர் ; காதல்மகளிர் ; கீழோர் ; திருடர் . |
| புரைவளர்தல் | கண்ணில் சதைவளர்தல் . |
| புரோக்கணம் | மந்திரஞ்சொல்லி நீர் தெளித்தல் . |
| புரோக்கித்தல் | மந்திரநீர் தெளித்தல் . |
| புரோகதி | முன்னடப்பது ; நாய் . |
| புரோகம் | நாய் . |
| புரோகன் | உயர்ந்தோன் . |
| புரோகிதன் | சடங்கு செய்விப்போன் ; வருந்தொழில் சொல்வோன் ; ஊர்ச்சோதிடன் ; வைதிகப் பார்ப்பான் ; இந்திரன் . |
| புரோசர் | குறுநிலமன்னர் . |
| புரோசனம் | பயன் . |
| புரோசு | சடங்கு செய்விக்கும் குரு ; ஊர்ச்சோதிடன் ; இந்திரன் . |
| புரோசை | காண்க : புரசை . |
| புரோசித்தல் | காண்க : புரோக்கணம் . |
| புரோட்சணம் | காண்க : புரோக்கணம் . |
| புரோடாசம் | வேள்வித்தீயில் இடும் அரிசிமாவாலாகிய ஓர் அவிப்பொருள் . |
| புரோதம் | குதிரைமூக்கு . |
| புரோதயம் | தூய்மைக்காக நீரில் குளிக்கை . |
| புரோவாதம் | ஒரு பொருளை முன்னர்க் கூறுவது . |
| புல் | தாவரவகை ; ஒருசார் விலங்குகளின் உணவுவகை ; புதர் ; கம்பு ; புன்செய்த் தவசம் ; காண்க : புல்லரிசி ; மருந்துச்செடிவகை ; பனை ; தென்னை ; அனுடநாள் ; புல்லியது ; இழிவு ; கபிலநிறம் ; புணர்ச்சி ; சிவல் ; புலி . |
| புல்குதல் | புணர்தல் ; அணைதல் ; நட்பினராதல் . |
| புல்லகண்டம் | கரும்புவகை ; கண்டசருக்கரை . |
| புல்லகம் | மகளிர் நெற்றியணி . |
| புல்லணல் | இளந்தாடி . |
| புல்லணை | புற்படுக்கை . |
| புல்லம் | எருது ; இடபராசி ; வசைமொழி ; மலர் . |
| புல்லர் | கீழ்மக்கள் ; வேடம் . |
| புல்லரி | புற்கட்டு ; மேய்ச்சல்வரி . |
| புல்லரிசி | புல்லில் விளையும் அரிசி ; மூங்கிலரிசி ; பஞ்ச காலத்தில் ஏழைகள் உண்ணும் அரிசி போன்ற தானியம் . |
| புல்லரித்தல் | மயிர்க்குச்செறிதல் ; மாடு முதலியன உணவு விருப்பமின்றிப் புல்லைத் துழாவுதல் . |
| புல்லற்கூறுதல் | ஏசுதல் . |
| புல்லறிவர் | காண்க : புல்லறிவாளர் . |
| புல்லறிவாண்மை | அறிவின்மை . |
| புல்லறிவாளர் | அறிவு குறைந்தோர் . |
| புல்லறிவினார் | அறிவு குறைந்தோர் . |
| புல்லறிவு | அறியாமை . |
| புல்லன் | அறிவீனன் ; இழிந்தோன் ; ஒழுக்கம் இல்லாதவன் . |
| புல்லாங்கழி | இசைக்கருவிவகை . |
| புல்லாங்குழல் | இசைக்கருவிவகை . |
| புல்லாடவன் | காண்க : புல்லுரு . |
| புல்லாணி | திருப்புல்லாணி என்னும் ஊர் . |
| புல்லார் | பகைவர் . |
|
|
|