புல்லார்தல் முதல் - புலர்த்துதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
புல்லார்தல் தோல்வியுறுதல் .
புல்லாள் காண்க : புல்லுரு ; ஆறலைகள்வன் .
புல்லி புறவிதழ் ; பூவிதழ் .
புல்லிகை குதிரைகளுக்கு அணியும் கன்ன சாமரை .
புல்லிங்கம் வடசொல்லின் ஆண்பால் .
புல்லிதழ் காண்க : புல்லி .
புல்லிது இழிவானது .
புல்லியார் இழிந்தவர் .
புல்லிலைவைப்பு இலைகளால் வேயப்பட்ட குடிசைகளையுடைய ஊர் .
புல்லினத்தாயன் ஆட்டிடையன் .
புல்லினத்தான் ஆட்டிடையன் .
புல்லினம் ஆட்டினம் .
புல்ல¦ரம் குறைந்த ஈரம் .
புல்லு புல் ; கிட்டிப்புள் ; கொடியின் தாங்கு கட்டை .
புல்லுக்கட்டை அறுத்துவிட்ட புல்லின் அடிப்பாகம் .
புல்லுக்கற்றை புல்லுத்திரள் .
புல்லுத்தரை புல் படர்ந்த நிலம் .
புல்லுதல் தழுவுதல் ; புணர்தல் ; பொருந்துதல் ; வரவேற்றல் ; ஒத்திருத்தல் ; ஒட்டுதல் ; நட்புச்செய்தல் .
புல்லுநர் நண்பர் .
புல்லுமேய்தல் புல்லுத்தின்னுதல் ; புல்லாற் கூரைபோடுதல் .
புல்லுயிர் குழந்தை ; சிற்றுயிர் .
புல்லுரு பயிரையழிக்கும் பறவை விலங்குகளை ஓட்டுதற்காக வயலில் புல்லால் அமைக்கப்படும் உருவம் .
புல்லுருவி மரஞ்செடிகளில் ஒட்டிவளரும் பூண்டுவகை .
புல்லுறுத்தல் நிகழ்த்துதல் .
புல்லூரி காண்க : புல்லுருவி .
புல்லூறு ஒரு பறவைவகை .
புல்லெழுதல் புல்லுண்டாதல் ; ஆள்வழக்கறுதல் .
புல்லெனல் பொலிவழிதற்குறிப்பு ; இழிவு பாட்டுக் குறிப்பு .
புல்லை மங்கலான மஞ்சள்நிறம் .
புல்வாய் கலைமான் .
புல்வீடு புல்வேய்ந்த கூரையுள்ள குடிசை .
புல்வெட்டிப்பல் மாட்டின் முன்வாய்ப் பல் .
புல்வேய்குரம்பை காண்க : புல்வீடு .
புல புலால் ; புலால்நாற்றம் .
புலங்கொள்ளுதல் விளங்குதல் ; தெளிவடைதல் .
புலச்சாய்வு வயற்புறம் .
புலச்சி அறிவு நிறைந்தவன் .
புலச்செய்கை உழவு .
புலத்தகை ஊடல் .
புலத்தல் மனம் வேறுபடுதல் ; துன்புறுதல் ; வெறுத்தல் ; அறிவுறுத்துதல் .
புலத்தார் குடிகள் .
புலத்தி வண்ணாத்தி .
புலத்தோர் அறிவுடைச் சான்றோர் ; ஞானியர் .
புலநெறிவழக்கம் புலவரால் கைக்கொள்ளப்படும் செய்யுள் வழக்கு .
புலப்படுத்துதல் தெரிவித்தல் .
புலப்படுதல் தெரிதல் ; வெளிப்படுதல் .
புலப்பம் பிதற்று ; அலப்பு ; அழுகை ; நோய் மிகுதியால் வாய்குழறுகை ; நன்றாய்த் தெரிகை .
புலப்பாடு நன்றாய்த் தெரிகை ; மட்டுக் கட்டுகை .
புலபுலெனல் விரைந்து தொடர்ந்துவருதற் குறிப்பு .
புலம் வயல் ; இடம் ; திக்கு ; மேட்டுநிலம் ; பொறி ; பொறியுணர்வு ; அறிவு ; கூர்மதி ; துப்பு ; நூல் ; வேதம் .
புலம்பல் ஒளி ; தனிமை கூறுகை ; அழுதல் ; பிதற்றுதல் ; அழுகைப்பாட்டு ; அலப்புகை .
புலம்பன் நெய்தல்நிலத் தலைவன் ; ஆன்மா .
புலம்பிடித்தல் துப்புக் கண்டுபிடித்தல் .
புலம்பு ஒலி ; பிதற்றல்மொழி ; அழுகையொலி ; தனிமை ; பிரிவு ; மனக்கலக்கம் ; வருத்தம் ; வெறுப்பு ; அச்சம் ; குற்றம் .
புலம்புதல் அழுதல் ; ஒலித்தல் ; பிதற்றுதல் ; தனித்தல் ; வருந்துதல் ; வாடுதல் ; வெறுத்தல் ; அடிக்கடி கூறுதல் .
புலம்புநீர் கண்ணீர் .
புலம்புமுத்து அழுகைக் கண்ணீர் .
புலம்புவித்தல் அவசமாக்குதல் .
புலம்புள் அழுகை .
புலம்பெயர்மாக்கள் அயல்நாட்டினர் ; கடலோடிகள் .
புலம்விசாரித்தல் உளவறிதல் .
புலம்வைத்தல் உளவு எதிர்பார்த்தல் .
புலமகள் கலைமகள் .
புலமகன் புலமையுள்ளவன் .
புலமங்கை நிலமகள் .
புலமறிதல் காண்க : புலனறிதல் .
புலமாக்குதல் தெரிவித்தல் ; வெளியாக்குதல் .
புலமினுக்கி துடைப்பம் .
புலமை மெய்யறிவு ; செய்யுளியற்றும் ஆற்றல் .
புலமைபாடுதல் பாப்புனைதல் .
புலமையோர் கவி , கமகன் , வாதி , வாக்கி என்னும் நால்வகைக் கல்விவல்லோர் ; கற்றோர் .
புலர் உலர்கை .
புலர்காலை விடியல் .
புலர்ச்சி வாடுகை ; உலருகை ; விடிகை .
புலர்த்துதல் உலர்த்துதல் ; வாட்டுதல் ; பூசுதல் .