புள்ளரசு முதல் - புற்கலம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
புள்ளரசு கருடன் .
புள்ளரையன் கருடன் .
புள்ளி அடையாளம் ; பொட்டுக்குறி ; எழுத்தின் மேலிடும் குத்து அல்லது சுழிக்குறி ; மெய்யெழுத்து ; ஆய்தம் ; குற்றியலிகர உகரங்கள் ; சரக்கின் மேலிடும் விலைமதிப்புக்குறி ; கவற்றின் கட்டம் ; மதிப்பு ; ஆள் ; பேரேடு ; பெருந்தொகை ; இமயமலை ; பல்லி ; நண்டு .
புள்ளிக்கண் மாட்டின் கடைக்கண்ணில் விழும் வெண்ணிறப் புள்ளி .
புள்ளிக்கணக்கு தொழிலுக்குப் பயன்படுங்கணக்கு ; சாகுபடி மதிப்பு ; வரவுசெலவு மதிப்புத் திட்டம் .
புள்ளிக்காரன் கணக்கன் ; செல்வன் .
புள்ளிகுத்துதல் கணக்கெழுதல் ; ஏட்டெழுத்தில் அடிப்புக் குறியாக எழுத்தின் மேல் குத்திடுதல் .
புள்ளிபார்த்தல் அறுவடைக்குமுன் வயலின் விளைவை மதிப்பிடுதல் ; கணக்கை முடித்தல் .
புள்ளிபோடுதல் காண்க : புள்ளிபார்த்தல் ; குறியிடுதல் ; குறிப்பெழுதுதல் .
புள்ளிமான் புள்ளிகளையுடைய மான்வகை .
புள்ளிமிருகம் புள்ளிகளையுடைய மான்வகை .
புள்ளியம் சிறுகுறிஞ்சாக்கொடி .
புள்ளியற்கலிமா பறவையின் வேகமுடைய குதிரை .
புள்ளியன்மா பறவையின் வேகமுடைய குதிரை .
புள்ளியிடுதல் கணக்கிற் குறித்துக்கொள்ளுதல் ; பொருள் விளங்கும்படி சொற்றொடரில் குறியிடுதல் .
புள்ளியிரலை காண்க : புள்ளிமான் .
புள்ளிவண்டு கழுதைவண்டு .
புள்ளீடு சிவகணங்களுள் ஒருவகைப் பேய்க்கூட்டம் ; பிள்ளைநோய் .
புள்ளு பறவை ; சிறுபுள்ளடிப்பூண்டு .
புள்ளுரைத்தல் பறவை ஒலிகொண்டு நிமித்தம் கூறுதல் .
புள்ளுவம் பறவையின் ஓசை ; வஞ்சகம் .
புள்ளுவன் வஞ்சகன் ; வேடன் ; பாலைநிலமகன் ; கீழ்மகன் .
புள்ளூர்கடவுள் கருடன் மேலேறிச் செல்லும் தெய்வமாகிய திருமால் .
புள்ளோச்சல் பறவையை ஓட்டுதல் .
புள்ளோப்புதல் பறவையை ஓட்டுதல் .
புள்ளோம்பல் பறவை காத்தல் ; பறவை வளர்த்தல் .
புளகம் மயிர்க்குச்செறிதல் ; மகிழ்ச்சி ; சோறு ; கண்ணாடி .
புளகித்தல் மிக மகிழ்தல் ; மயிர் சிலிர்த்தல் .
புளகிதம் மயிர்ச்சிலிர்ப்பு ; பெருமகிழ்ச்சி .
புளி புளிப்புச்சுவை ; மரவகை ; புளிங்கறி ; பெண் சரக்குவகை ; தித்திப்பு .
புளி (வி) புளிக்கச்செய் ; நெருங்கு .
புளிக்கரைத்தல் கறிக்காகப் புளியை நீரில் கலத்தல் ; கவலைப்படுதல் ; கவலைப்படச்செய்தல் .
புளிக்கறி புளிச்சாறிட்டு ஆக்கிய கறி .
புளிக்குடித்தல் பிள்ளை பெற்றிருத்தல் .
புளிக்குழம்பு புளியிட்டுச் செய்யும் குழம்பு .
புளிங்கறி காண்க : புளிக்கறி .
புளிங்கூழ் புளியிட்டாக்கிய கூழ்வகை .
புளிச்சி பருத்திவகை .
புளிச்சை ஒரு செடிவகை ; பீளை .
புளிஞ்சோறு புளியிட்டுச் சமைத்த சோறு .
புளிஞன் வேடன் .
புளித்தல் புளிப்பேறியிருத்தல் ; தன்மை திரிதல் ; கைக்கு எட்டாது என்ற காரணத்தால் விட்டு விடுதல் ; கன்றுதல் ; வெறுத்துப்போதல் ; செறிதல் ; சிறுமரவகை .
புளித்துப்போதல் மா முதலியன புளிப்பேறுதல் ; எதிர்பார்த்துக் கிட்டாமற்போதல் ; அருவருத்துப்போதல் .
புளிதம் ஊன் ; ஓர் உணவுவகை .
புளிந்தயிர் புளித்த தயிர் .
புளிந்தன் காண்க : புளிஞன் .
புளநரளை ஒரு பூண்டுவகை .
புளநறளை ஒரு பூண்டுவகை .
புளிப்பு அறுவகைச் சுவையுள் ஒன்று ; புளிக்கை ; புளிப்புள்ள மருந்துச்சரக்கு .
புளிப்புத்தட்டுதல் சிறிது புளிப்புடையதாதல் ; சுவையறுதல் ; காண்க : புளித்துப்போதல் .
புளிமா புளிப்புள்ள மாமரம் ; நிரைநேர் வாய்பாடு ; ஒரு மரவகை .
புளிமாங்கனி நிரைநேர்நிரை வாய்பாடு .
புளிமாங்காய் நிரைநேர்நேர் வாய்பாடு ; பெண் சரக்குவகை .
புளிமாந்தண்ணிழல் நிரைநேர்நேர்நிரை வாய்பாடு .
புளிமாந்தண்பூ நிரைநேர்நேர்நேர் வாய்பாடு .
புளிமாநறுநிழல் நிரைநேர்நிரைநிரை வாய்பாடு .
புளிமாநறும்பூ நிரைநேர்நிரைநேர் வாய்பாடு .
புளிமாறு புளியம் வளார் .
புளிமிதவை காண்க : புளிங்கூழ் .
புளியமரம் ஒரு மரவகை .
புளியாரை பூண்டுவகை .
புளியோதரை புளியிட்டுச் சமைத்த சோறு .
புளியோதனம் புளியிட்டுச் சமைத்த சோறு .
புளியோரை புளியிட்டுச் சமைத்த சோறு .
புளினம் மணற்குன்று ; ஆற்றிடைத் திட்டு .
புளினன் காண்க : புளிஞன் .
புளுகன் பொய்யன் .
புளுகு பொய் ; கற்பனை .
புளுகுதல் மெய்போற் பொய்கூறல் ; கற்பித்தல் .
புளைத்தல் அலங்கரிக்கப்படுதல் .
புளைதல் அலங்கரிக்கப்படுதல் .
புற்கசன் புலையன் .
புற்கட்டை அறுகம்புல்லின் அடிக்கட்டை ; அறுத்த பயிர்த்தாளடி .
புற்கம் குறைவு ; புல்லறிவு ; மாயம் .
புற்கலம் உடல் ; கல் முதலிய உயிரற்ற பொருள் .