புற்கலன் முதல் - புறத்தி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
புற்கலன் ஆன்மா .
புற்கவ்வுதல் தோல்வியை ஒத்துக்கொள்ளுதல் .
புற்கற்றை புல்திரள் .
புற்கு கபிலநிறம் .
புற்கெனல் ஒளிமழுங்கற் குறிப்பு ; பயனில்லாமைக் குறிப்பு ; புன்மைக்குறிப்பு .
புற்கை ஒருவிதக் கஞ்சி ; சோறு ; பற்று .
புற்பதி பனைமரம் ; வாழைக்கிழங்கு .
புற்பதம் நீர்க்குமிழி .
புற்புல்லெனல் விடிதற்குறிப்பு .
புற்றம் கறையான் கட்டிய மண்கூடு .
புற்றாஞ்சோறு காண்க : புற்றாம்பழஞ்சோறு ; பூஞ்சணம் .
புற்றாம்பழஞ்சோறு புற்றில் கறையான் இருக்கும் சோறுபோன்ற திரட்சிப் பொருள் .
புற்றாளி பனைமரம் ; அனுடநாள் .
புற்று கறையான் கட்டிய மண்கூடு ; எறும்பு வளை ; புரைவைத்த புண் ; தலை ; எழுத்து .
புற்றுக்காளான் காளான்வகை .
புற்றுத்தேன் மதிலிடுக்கு முதலியவற்றில் தேனீக்களால் வைக்கப்படுந் தேன் .
புற்றுமண் கறையானால் சேர்த்துவைக்கப்பட்ட மண் .
புற்றுவைத்தல் கறையானால் புற்றுண்டாதல் ; புண் புரைவைத்தல் .
புற்றெடுத்தல் கறையான் முதலியன வளைதோண்டல் .
புற காண்க : புறா .
புறக்கட்டு வீட்டின் வெளிக் கட்டடம் ; கையை முதுகிலேவைத்துக் கட்டுதல் .
புறக்கடன் பின் அடைமானம் .
புறக்கடை வீட்டின் பின்புறம் .
புறக்கண் கண்ணிமையின் வெளிப்புறம் ; தூலக்கண் .
புறக்கணித்தல் பாராமுகமாதல் ; வெறுத்தொதுக்கல் .
புறக்கந்து வண்டி அச்சின் முனை ; களத்தில் தூற்றி விழுந்த பதர்க்குப்பை .
புறக்கரணம் கை , கால் முதலிய உறுப்பு ; தொழிற்கு உதவியாயுள்ள வெளிக்கருவி .
புறக்கழுத்து பிடர் .
புறக்காப்பு புறத்தே அமைக்கப்படுங் காவல் .
புறக்காவல் மெய்காவல் .
புறக்காழ் பனை முதலியவற்றிலுள்ள வெளிவயிரம் ; பெண்மரம் .
புறக்கிடுதல் முதுகுகாட்டி ஓடுதல் .
புறக்கு வெளிப்புறம் .
புறக்குடி நகருக்கு வெளியே மக்கள் வாழும் ஊர் ; வெளியூரில் சென்று பயிரிடும் குடியானவன் நிலக்கிழாருக்குக் கட்டுப்படாத குடியானவன் .
புறக்குடை உடலின் பின்புறம் .
புறக்கூத்து கூத்துவகை .
புறக்கை காண்க : புறங்கை ; வெளிப்புறம் ; வலப்புறம் .
புறக்கொடுத்தல் தோற்றோடுதல் ; போகவிடுதல் .
புறக்கொடை போரில் முதுகுகாட்டல் ; உடலின் பின்புறம் .
புறக்கோடி காண்க : புறக்கடை .
புறகிடுதல் காண்க : புறக்கிடுதல் .
புறகு புறம்பானவர் ; புறம்பானது .
புறங்கடை வீட்டின் வெளிப்புறம் ; வெளி வாயில் ; பின்பிறந்தோன் .
புறங்காட்டுதல் அவமதிப்புண்டாகப் பின்புறம் திரும்புதல் ; தோற்றோடுதல் ; வெளிக்குக் காட்டுதல் ; முறியடித்தல் .
புறங்காடு சுடுகாடு ; இடுகாடு .
புறங்காணுதல் முறியடித்தல் .
புறங்காத்தல் பாதுகாத்தல் .
புறங்கால் பாதத்தின் மேற்புறம் ; குதிங்காலின் மேற்புறம் .
புறங்காழ் காண்க : புறக்காழ் .
புறங்கான் முல்லைநிலம் .
புறங்கூற்றாளன் பிறரைக் காணாவிடத்துப் பழிப்போன் .
புறங்கூற்று காணாவிடத்துப் பிறர்மேல் பழி தூற்றுகை .
புறங்கூறுதல் பிறரைக் காணாவிடத்து அவர் மீது குற்றம் கூறுதல் ; மறைபொருளை வெளிபடுத்துதல் .
புறங்கை கையின் பின்புறம் .
புறங்கொடுத்தல் தோற்றோடுதல் , புறங்காட்டுதல் .
புறச்சபை நற்கருணை அனுபவியாத கிறித்தவர் கூட்டம் .
புறச்சமயம் மாறுபட்ட கொள்கையுள்ள மதம் .
புறச்சுட்டு மொழிக்குப் புறத்துறுப்பாய் வரும் சுட்டெழுத்து .
புறச்சுவர்தீற்றுதல் தன்னை அடுத்தாரைவிட்டு அயலார்க்குத் துணைசெய்தல் ; உளத்தூய்மையில்லாதவர் வெளியில் ஒழுங்கானவர்போல் நடத்தல் .
புறச்சுற்று சுற்றுப்புறப்பகுதி ; சுற்றுப்புறவமைதி .
புறச்சேரி நகர்க்குப் புறம்பே மக்கள் வாழும் பகுதி ; பறைச்சேரி .
புறச்சொல் நாடகத்தில் எல்லோரும் கேட்கும் படியாக உரைக்குஞ் சொல் .
புறஞ்சாய்தல் தோற்றல் .
புறஞ்சிறை வீட்டிற்கு அருகிலுள்ள இடம் ; புறம்பானது ; காண்க : புறஞ்சேரி .
புறஞ்சிறைப்பாடி நகரின் வெளிப்புறச் சேரி .
புறஞ்சுவர்கோலஞ்செய்தல் உட்குற்றம் களையாது உடம்பை அலங்கரித்தல் .
புறஞ்செய்தல் உடம்பை அலங்கரித்தல் ; காப்பாற்றுதல் ; வெளியேற்றுதல் .
புறஞ்சேரி நகர்க்கு வெளியே மக்கள் வாழுமிடம் , புறநகர் .
புறஞ்சொல் பழிச்சொல் ; வெளியில் கூறும் அலர்மொழி .
புறஞ்சொல்லுதல் கோட்சொல்லுதல் .
புறண்டுதல் காண்க : பிறாண்டுதல் .
புறணி புறங்கூறல் ; மரப்பட்டை ; மட்டை முதலியவற்றின் புறத்துள்ள நார் ; தோல் ; ஊன் ; புறம்பானது ; குறிஞ்சிநிலம் ; முல்லைநிலம் ; மண்கட்டி .
புறணிநாடு எல்லைப்புறமாயுள்ள நாடு ; அயல்நாடு .
புறத்தவன் அயலான் ; ஊருக்கு வெளியே இருப்பவனான ஐயனார் .
புறத்தி புறம்பானது ; சாயல் .