சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| புறத்திடுதல் | வெளிவிடுதல் . |
| புறத்திணை | வெட்சி , வஞ்சி , காஞ்சி , உழிஞை , தும்பை , வாகை , பாடாண் முதலிய புறப்பொருள் பற்றிய ஒழுக்கம் . |
| புறத்தியான் | அயலான் . |
| புறத்திருத்தல் | வெளியே காத்திருத்தல் . |
| புறத்திறுத்தல் | முற்றுகையிடுதல் . |
| புறத்திறை | வேற்றரசனுடைய மதிலை மேற் சென்ற வேந்தன் முற்றுகை செய்தலைக் கூறும் புறத்துறை . |
| புறத்துறவு | அகப்பற்று விடாமல் துறவிபோல் வேடங்கொள்ளுகை . |
| புறத்துறுப்பு | இடம் பொருள் ஏவல்களாகிய பக்கத்துணை ; உடலின் வெளிப்புற உறுப்பு . |
| புறத்துறை | புறத்திணையின் பகுதி . |
| புறத்தொழுக்கம் | பரத்தையரோடு கூடி ஒழுகுகை . |
| புறந்தருதல் | பாதுகாத்தல் ; கைவிடுதல் ; போற்றுதல் ; தோற்றுப்போதல் ; நிறம் உண்டாதல் . |
| புறந்தருநர் | பாதுகாப்பவர் . |
| புறந்தாள் | காண்க : புறங்கால் . |
| புறந்துரத்தல் | எருதுகளை முதுகிலே யடித்து ஓட்டுதல் . |
| புறநகர் | நகரின் வெளிப்பகுதி . |
| புறநடம் | காண்க : புறநாடகம் . |
| புறநடை | விதித்தவற்றுள் அடங்காதவற்றை அமைத்துக்காட்டும் பொதுச்சூத்திரம் . |
| புறநாடகம் | உவகைச் சுவை தவிர மற்றைச் சுவைபற்றிவரும் நாடகவகை . |
| புறநிலை | வெளிப்புறம் ; வேறுபட்ட நிலை ; நூல்வகை ; உதவிநோக்கிப் பிறர் புறங்கடையில் நிற்கும் நிலை ; ஏவல் செய்து பின்னிற்கை ; சாதிப் பெரும்பண் நான்கனுள் ஒன்று . |
| புறநிலைமருதம் | பெரும்பண்வகை . |
| புறநீங்குதல் | தன் விருப்பமாய் விலகிப்போதல் ; விலக்கப்படுதல் . |
| புறநீர்மை | பண்வகை . |
| புறப்பகை | வெளிப்படையான பகை ; பகைவன் . |
| புறப்பட்டுக்கொள்ளுதல் | வெளியேறுதல் . |
| புறப்படுத்துதல் | வெளிப்படுத்துதல் . |
| புறப்படுதல் | பயணமாதல் ; புறம்பே செல்லுதல் ; புறத்தில் தோன்றுதல் ; புண் முதலியன உண்டாதல் ; பொசிதல் . |
| புறப்படைவீடு | நகருக்குப் புறம்பே மக்கள் வாழும் இடம் . |
| புறப்பணை | முல்லைநிலம் . |
| புறப்பத்தியம் | மறுபத்தியம் . |
| புறப்பற்று | 'எனது' என்னும் பற்று . |
| புறப்பாட்டு | புறப்பொருளைப்பற்றிய செய்யுள் ; எட்டுத்தொகையுள் ஒன்றானதும் புறப்பொருளைப்பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டதுமான தொகைநூல் , புறநானூறு . |
| புறப்பாட்டுவண்ணம் | இறுதியடி முடியாதிருப்பவும் தான் முடிந்த அடிபோலக் காட்டும் சந்தம் . |
| புறப்பாடு | வெளியேறுதல் ; பயணம் ; கோயில்மூர்த்தி வெளியில் எழுந்தருளுதல் ; புறந் தோன்றுகை ; புண்கட்டிவகை . |
| புறப்புண் | முதுகிற்பட்ட காயம் . |
| புறப்புறக்கருவி | முழவுவகை . |
| புறப்புறம் | முற்றும் அயலானது . |
| புறப்புறமுழவு | காண்க : புறப்புறக்கருவி . |
| புறப்பெண்டிர் | பரத்தையர் . |
| புறப்பொருள் | காண்க : புறத்திணை ; வீரம் ; வெளிப்படையான பொருள் . |
| புறம் | வெளியிடம் ; அன்னியம் ; காண்க : புறத்திணை ; புறக்கொடை ; புறநானூறு ; வீரம் ; பக்கம் ; முதுகு ; பின்புறம் ; புறங்கூற்று ; அலர்மொழி ; ஒருசார்பு ; இடம் ; இறையிலி நிலம் ; ஏழனுருபுள் ஒன்று ; திசை ; காலம் ; உடம்பு ; மருதநிலத்தூர் ; மதில் . |
| புறம்படி | நகரின் புறப்பகுதி . |
| புறம்பணை | முல்லைநிலம் ; குறிஞ்சிநிலம் ; நகர்ப்புறமாகிய மருதநிலம் . |
| புறம்பணையான் | ஊருக்கு வெளியே இருப்பவனான ஐயனார் . |
| புறம்பர் | வெளிப்பக்கம் . |
| புறம்பாக்குதல் | நீக்குதல் ; சாதியினின்றும் நீக்குதல் . |
| புறம்பு | வெளியிடம் ; தனியானது ; மற்றை ; முதுகு . |
| புறம்புல்குதல் | பின்புறத்தைக் கட்டித் தழுவுதல் . |
| புறம்பெறுதல் | புறக்கொடையைப் பெறுதல் ; முதுகுகாணுதல் . |
| புறம்பொசிதல் | வெளியிற் கசிதல் ; வெளிப்படுதல் . |
| புறம்போக்கு | ஊர்ப்புறத்தில் குடிகள் வாழ்தலில்லாத நிலப்பகுதி ; பொதுமகள் . |
| புறம்போக்குதல் | அகற்றுதல் . |
| புறம்விடுதல் | விலக்கிவிடுதல் . |
| புறமடை | வெளிவாய்க்கால் ; மதகின் வெளிப்புறம் ; வெளிமடை ; கோயிற்புறத்துள்ள சிறு தெய்வங்கட்கு இடும் படைப்பு . |
| புறமதில் | கோட்டையின் வெளிமதில் . |
| புறமதிற்சேரி | காண்க : புறஞ்சேரி . |
| புறமலை | பக்கமலை . |
| புறமறிப்பார்த்தல் | உட்பக்கத்தை வெளிப்புறமாகத் திருப்பிப் பார்த்தலாகிய நன்கு ஆராய்தல் . |
| புறமறைத்தல் | வெளித்தோன்றாமல் மறைத்தல் . |
| புறமாக | பக்கமாய் ; வெளிப்படையாய் . |
| புறமாறுதல் | இடம் மாறுதல் ; வலிமை இழத்தல் ; கைவிடுதல் . |
| புறமுழவு | பறைவகை . |
| புறமொழி | புறங்கூற்று . |
| புறவடி | பாதத்தின் மேற்புறம் . |
| புறவணி | முல்லைநிலம் ; குறிஞ்சிநிலம் . |
| புறவம் | காடு ; முல்லைநிலம் ; குறிஞ்சிநிலம் ; சீகாழி ; தோல் ; புறா . |
| புறவயிரம் | மரத்தின் வெளிவயிரம் . |
| புறவரி | தலைவனுடன் அணையாது தலைவி புறத்தே நின்று நடிக்கும் நடிப்பு . |
| புறவழி | பின்பக்கம் . |
| புறவாயம் | பணமாகத் தண்டப்படும் செக்கிறை முதலிய சில்லறை வரிகள் . |
| புறவாயில் | வெளிவாயில் . |
| புறவாழி | பெரும்புறக்கடல் . |
| புறவிடை | பிரிதற்குப் பெறும் விடை ; வீட்டுக் கொல்லை . |
| புறவிதழ் | பூவின் வெளிப்புறத்துள்ள இதழ் . |
| புறவிரல் | விரலின் வெளிப்பக்கம் . |
| புறவீடு | படையெடுப்புக்குமுன் நல்வேளையில் வாள் , குடை முதலியவற்றை வெளியே செல்ல விடுதல் ; பயணத்திற்காக நல்லநேரத்தில் தன் வீடுவிட்டுப் பிறர் வீட்டில் இருக்கை . |
|
|
|