சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| புறவீதி | நகரின் வெளிவீதி ; கோயில் முதலியவற்றின் வெளிவீதி . |
| புறவு | புறா ; காடு ; சிறுகாடு ; முல்லைநிலம் ; குறிஞ்சிநிலம் ; பயிரிடும் நிலம் ; முல்லைக் கொடி . |
| புறவுரு | உடம்பினுறுப்பு . |
| புறவுரை | பாயிரம் . |
| புறவெட்டு | மேல்வெட்டு ; மரத்துண்டின் மேற்பட்டை ; எதிர்ப்பேச்சு ; தனியான . |
| புறன் | பழிச்சொல் ; காணாதபோது ; காண்க : புறம் . |
| புறனடை | காண்க : புறநடை . |
| புறனடைச்சூத்திரம் | காண்க : புறநடை . |
| புறனழித்தல் | புறங்கூறுதல் . |
| புறனிலை | பின்னிலை . |
| புறனுரை | வெற்றுரை ; பழிச்சொல் . |
| புறனோக்குதல் | ஒருவன் நீங்கும்வரை பார்த்தல் . |
| புறா | பறவைவகை . |
| புறாக்காலி | ஒரு பூண்டுவகை . |
| புறாக்கூடு | புறாக்கள் வாழ்தற்காகக் கட்டப்பட்ட கூண்டு ; சிற்றறை . |
| புறாத்தலை | சிறிய தலை . |
| புறாமாடம் | காண்க : புறாக்கூடு . |
| புன்கண் | துன்பம் ; நோய் ; மெலிவு ; வறுமை ; பொலிவழிவு ; அச்சம் ; இழிவு . |
| புன்கண்மை | துன்பம் ; நோய் ; மெலிவு ; வறுமை ; பொலிவழிவு ; அச்சம் ; இழிவு . |
| புன்கம் | சோறு ; ஒரு மரவகை . |
| புன்காலி | பாதிரிமரம் ; காயாமரம் . |
| புன்கு | புங்கமரம் ; மரவகை ; புரசுமரம் . |
| புன்கூர்தல் | வருந்துதல் . |
| புன்சிரிப்பு | இளமுறுவல் . |
| புன்செய் | புன்செய்ப்பயிர் விளையும் நிலம் ; கொல்லைநிலம் ; புன்செய்ப்பயிர் . |
| புன்செய்ப்பயிர் | நெல்லொழிந்த மற்றைப் பயிர்கள் . |
| புன்சொல் | பழித்துரை . |
| புன்பயிர் | காண்க : புன்செய்ப்பயிர் ; குறைந்த விளைவு . |
| புன்பலம் | புல்லிய இடம் ; புல்லிய அறிவு ; புன்செய்நிலம் ; தரிசுநிலம் . |
| புன்மக்கள் | இழிந்தவர் . |
| புன்மரம் | புறவயிரம் உள்ள மரம் ; தென்னை . |
| புன்மாலை | புற்கென்ற மாலைக்காலம் . |
| புன்மானம் | விடியற்காலை . |
| புன்முறுவல் | காண்க : புன்சிரிப்பு . |
| புன்மூரல் | காண்க : புன்சிரிப்பு . |
| புன்மை | மறதி ; இழிவு ; அழுக்கு ; துன்பம் ; சிறுமை ; வறுமை ; குற்றம் ; புகர்நிறம் ; பார்வை மழுக்கம் . |
| புன்றலை | சிறிய தலை ; இளந்தலை ; சிவப்பு மயிருள்ள தலை . |
| புன்றுமி | தூறல் . |
| புன்றொழில் | இழிதொழில் ; தீச்செயல் . |
| புன்னகை | காண்க : புன்சிரிப்பு . |
| புன்னம்புலரி | வைகறை . |
| புன்னறவம் | இஞ்சி . |
| புன்னாகம் | புன்னைமரம் ; குரங்குமஞ்சள்நாறி ; கோழிக்கீரை . |
| புன்னாகவராளி | ஒரு பண்வகை . |
| புன்னாதர் | இழிவறிவாளர் . |
| புன்னிலம் | பயனற்ற நிலம் . |
| புன்னீர் | கழிவுநீர் ; குருதி . |
| புன்னெறி | தீயவழி ; பொய்ச் சமயம் . |
| புன்னை | புன்னைமரம் . |
| புனக்கரணம் | தாளத்தின் ஆவர்த்தம் . |
| புனக்காவல் | தினைப்புனங் காக்கை . |
| புனக்குளம் | மழைத்தண்ணீர் தேங்கிநிற்கும் குட்டை . |
| புனம் | மலையைச் சார்ந்த கொல்லை . |
| புனமுருக்கு | ஒரு மரவகை . |
| புனமுருங்கை | ஒரு மரவகை . |
| புனர்தம் | புனர்பூசம் . |
| புனர்ப்பவம் | மீண்டும் பிறக்கை ; நகம் ; மறுபடைப்பு . |
| புனர்ப்பாகம் | இருமுறை சமைத்த நீர்த்தன்மையான பத்திய உணவு . |
| புனர்பூசம் | புனர்பூசநாள் . |
| புனர்வசு | புனர்பூசநாள் . |
| புனரி | ஒரு பூடுவகை . |
| புனருத்தம் | காண்க : புனருத்தி . |
| புனருத்தாரணம் | மீண்டும் நிலைநிறுத்துகை . |
| புனருத்தி | கூறியதுகூறல் . |
| புனல் | ஆறு ; நீர் ; குளிர்ச்சி ; பூராடநாள் ; வாலுளுவை ; வாய் குறுகிய குப்பிகளில் நீர்மப் பொருளை ஊற்ற உதவுங் கருவி . |
| புனல்பாய்தல் | நீரில் விளையாடுதல் . |
| புனல்வாயில் | மதகு . |
| புனல்வேந்தன் | வருணன் . |
| புனலவன் | வருணன் . |
| புனலாடையாள் | நீராடை உடுத்த நிலமடந்தை . |
| புனலி | காண்க : காட்டுமல்லி ; புனலிக்கொடி . |
| புனலிக்கொடி | ஒரு கொடிவகை . |
| புனலை | பூவந்தி எனப்படும் நெய்க்கொட்டான் மரம் . |
| புனவர் | குறிஞ்சிநில மக்கள் . |
| புனவேடு | வரிக்கூத்துவகை . |
|
|
|