பூசணி முதல் - பூட்டுநழுவுதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பூசணி கொடிவகை .
பூசந்தி கடலைப் பிரிக்கும் சிறுநிலம் .
பூசம் எட்டாம் நட்சத்திரம் .
பூசல் போர் ; பேரொலி ; பலரறிகை ; கூப்பீடு ; வருத்தம் ; ஒப்பனை .
பூசல்நெற்றி போர்முகம் .
பூசலிசைத்தல் கலகச்சொல்லால் சண்டை மூட்டுதல் .
பூசலிடுதல் முறையிடுதல் ; பேரொலிபடக் கதறுதல் ; கூட்டுதல் .
பூசற்களம் போர்க்களம் .
பூசற்களரி போர்க்களம் .
பூசற்பறை பாலைநிலத்துப் பறையுள் ஒன்று .
பூசற்றுடி பாலைநிலத்துப் பறையுள் ஒன்று .
பூசறுத்தல் வாய் முதலியன கழுவும் தொழிலை முடித்தல் .
பூசன்மாற்று நிரைகவர்ந்த வெட்சியார் மீட்க வந்த கரந்தையாரைப் போரில் அழித்தமை கூறும் புறத்துறை .
பூசனம் ஆராதனை ; மரம் முதலியவற்றின்மேல் ஈர நைப்பினால் உண்டாகும் பாசி .
பூசனி அடைக்கலாங்குருவி ; கொடிவகை ; மரம் முதலியவற்றின்மேல் ஈர நைப்பினால் உண்டாகும் பாசி .
பூசனை நாள் வழிபாடு ; சிறப்பித்தல் .
பூசனைபடைத்தல் வணக்கஞ்செய்தல் .
பூசாகாலம் பூசைக்குரிய வேளை .
பூசாந்திரம் அருமைபண்ணுகை ; மரவகை .
பூசாபலம் பூசையின் பலன் ; தெய்வ வழிபாட்டால் உண்டாகும் பலன் .
பூசாரி கோயிற்பூசை பண்ணுபவன் ; பேயோட்டும் மந்திரவாதி .
பூசாலி கோயிற்பூசை பண்ணுபவன் ; பேயோட்டும் மந்திரவாதி .
பூசாவிதி பூசைமுறை .
பூசாவிருத்தி கோயிற்பூசைக்கு விடப்பட்ட இறையிலிநிலம் .
பூசித்தல் பூசைசெய்தல் ; மரியாதை காட்டுதல் ; கொண்டாடுதல் .
பூசிதம் காண்க : பூசிதை .
பூசிதன் பூசிக்கப்படுவோன் .
பூசிதை வணக்கம் .
பூசிப்பு வணக்கம் .
பூசிமெழுகுதல் குற்றத்தை மறைக்கப் பார்த்தல் .
பூசு பூசுகை ; தானியத்தின் உமி அல்லது தோல் ; ஒட்டடை ; தூசு .
பூசுசாந்தாற்றி சிறு விசிறி .
பூசுத்தி பூமியில் நீரைத் தெளித்துச் செய்யும் துப்புரவு .
பூசுதல் தடவுதல் ; கழுவுதல் ; அலங்கரித்தல் ; மெழுகுதல் ; நீரால் அலம்புதல் ; இயைதல் .
பூசுதன் பூமியின் புதல்வனான செவ்வாய் .
பூசுதை பூமியின் புதல்வியாகிய சீதை .
பூசுரன் பார்ப்பான் .
பூசுறுதல் அலங்கரித்தல் .
பூசை ஆராதனை ; அடியார் அமுதுசெய்கை ; பலத்த அடி ; நெட்டி ; பூனை ; காண்க : காட்டுப்பூனை .
பூசைப்பெட்டி ஆன்மார்த்த இலிங்கம் வைக்கும் பெட்டி .
பூசைபண்ணுதல் ஆராதனை செய்தல் ; உணவருந்தல் .
பூசைபோடுதல் பலிகொடுத்தல் ; உணவருந்தல் ; பலமாக அடிகொடுத்தல் .
பூசைமுகம் பூசை நடக்கும் இடம் .
பூசைவேளை பூசை செய்வதற்குரிய காலம் .
பூஞ்சக்கல் ஒருவித நீலக்கல் .
பூஞ்சணம் மரம் முதலியவற்றின்மேல் ஈர நைப்பினால் உண்டாகும் பாசி ; ஒட்டடை .
பூஞ்சல் மங்கல்நிறம் ; கண்ணொளி மங்கல் ; வலுவற்றவன் .
பூஞ்சலாடுதல் கண்ணொளி மங்குதல் .
பூஞ்சற்கண் குழிந்த கண் ; பீளைக்கண் ; ஒளி மங்கிய கண் .
பூஞ்சாளம் காண்க : பூஞ்சணம் .
பூஞ்சான் ஒரு புல்வகை .
பூஞ்சி தூசி ; மங்கல் .
பூஞ்சிட்டு ஒரு குருவிவகை .
பூஞ்சிறகு பறவைக்குஞ்சின் சிறகு .
பூஞ்சு ஒட்டடை ; மரத்தின்மீது ஈரத்தாலுண்டாகும் பாசி ; மங்கல்நிறம் ; பலாச்சுளையின் மேலுள்ள நார்ப்பகுதி .
பூஞ்சுண்ணம் பூந்தாது .
பூஞ்சுமடு பூவினாலாகிய சும்மாடு .
பூஞ்சை மங்கல்நிறம் ; வலுவற்றவன் ; கண்ணொளி மங்கல் ; பாழ் ; ஒட்டடை .
பூஞ்சைநிலம் பாழ்நிலம் .
பூஞ்சோலை மலர்ச்சோலை .
பூஞை பூனை ; காண்க : பூஞையாதனம் .
பூஞையாதனம் பூனைபோல் முழங்காலை மடக்கிக் கைகளை ஊன்றி வானத்தைப் பார்த்திருக்கும் ஆசனவகை .
பூட்கை கொள்கை ; மனவுறுதி ; வலிமை ; சிங்கம் ; யானை ; யானையாளி .
பூட்சி பூணுகை ; அணிகலன் ; உடல் ; புணர்ப்பு ; கொள்கை ; மனவுறுதி ; வரிவகை ; உரிமை .
பூட்டகம் வீண்பெருமை ; போலிவேலை ; வஞ்சகம் ; கமுக்கம் .
பூட்டகம்பண்ணுதல் வீண்பெருமை பாராட்டுதல் ; வீம்படித்தல் .
பூட்டங்கம் வஞ்சகம் ; அகப்படுத்துகை ; வில்லங்கம் .
பூட்டழித்தல் கட்டுக்குலைத்தல் .
பூட்டறுதல் கட்டுக்குலைதல் ; நுகத்தினின்றும் விடுபடுதல் .
பூட்டன் பாட்டனுக்குத் தந்தை .
பூட்டாங்கயிறு எருதைப் பிணைக்கும் நுகக்கயிறு .
பூட்டி பாட்டனைப் பெற்ற தாய் .
பூட்டு பிணிப்பு ; திறவுகோல் ; பூட்டுங்கருவி ; கொக்கி ; நாண்கயிறு ; உடற்பொருத்து ; மல்லுக்கட்டு ; இறுக்கம் ; கேடு ; மகளிர் தலையணிவகை ; சேனைக்கட்டு ; தளைக்கும் விலங்கு ; அடுக்கு .
பூட்டுதல் மாட்டுதல் ; இணைத்தல் ; வைத்தல் ; எருது முதலியவற்றைப் பிணைத்தல் ; தொழுவில் அடித்தல் ; விலங்கு மாட்டுதல் ; பொறுப்பேற்றுதல் ; அணிதல் ; இறுகக்கட்டுதல் ; பொருத்திக் கூறுதல் ; அகப்படுத்துதல் ; நாணேற்றுதல் ; இறுக்குதல் ; வழக்குத் தொடுத்தல் .
பூட்டுநழுவுதல் காண்க : பூட்டுவிலகுதல் .