பூட்டுநோவு முதல் - பூதவிகாரம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பூட்டுநோவு உடற்சந்துகளில் ஏற்படும் வலி .
பூட்டுப்போடுதல் திறவுகோலாற் பூட்டிடுதல் ; பேசவொட்டாது செய்தல் .
பூட்டுவாய் திறவுகோல் புகும் துளை ; நெருக்கடியான சமயம் .
பூட்டுவிடுதல் உடற்பொருத்துவாய் விலகிப் போதல் .
பூட்டுவிலகுதல் உடற்பொருத்துவாய் விலகிப் போதல் .
பூட்டுவிற்பொருள்கோள் செய்யுள் முதலினும் இறுதியினும் நிற்குஞ் சொற்கள் தம்முள் இயையப் பொருள்கொள்ளும் முறை .
பூட்டை ஏற்றமரம் ; இராட்டினத்தின் சக்கரம் ; இறைகூடை ; நீர்இறைக்குங் கருவிவகை ; செக்கு ; பூட்டாங்கயிறு ; சோளக்கதிர் .
பூட்டைப்பொறி நீர் இறைக்கும் கருவிவகை .
பூட்டைவாங்குதல் சோளப்பயிர் முதலியன கதிர்விடுதல் .
பூடணம் அணிகலன் , நகை .
பூடு காண்க : பூண்டு .
பூண் அணி ; உலக்கை முதலியவற்றிற்கு இடும் பூண் ; கவசம் ; யானைக்கோட்டின் கிம்புரி .
பூண்கட்டுதல் உலக்கை முதலியவற்றிற்குப் பூண்பிடித்தல் ; பலப்படுத்துதல் ; போற்றுதல் .
பூண்கடைப்புணர்வு அணிகலக்கொக்கி .
பூண்டறுத்தல் அடியோடழித்தல் .
பூண்டான் கணவன் .
பூண்டி ஊர் ; தோட்டம் ; திடர்பட்ட கடற்பகுதி .
பூண்டு சிறு செடி ; உள்ளிப்பூண்டு ; சிற்றடையாளம் .
பூணாரம் அணிகலன் ,
பூணாரவெலும்பு மணிக்கட்டினெலும்பு ; காறை எலும்பு .
பூணி எருது ; ஆனினம் ; இடபராசி ; நீர்ப் பறவைவகை .
பூணித்தல் தோற்றுவித்தல் ; குறிப்பிடுதல் ; தீர்மானம்செய்தல் .
பூணிப்பு நோன்புநோற்றல் ; தீர்மானம் .
பூணுதல் அணிதல் ; மேற்கொள்ளுதல் ; விலங்கு முதலியன தரித்தல் ; சூழ்ந்துகொள்ளுதல் ; உடைத்தாதல் ; சிக்கிக்கொள்ளுதல் ; நுகத்திற் கட்டப்படுதல் ; நெருங்கியிறுகுதல் .
பூணுநூல் பார்ப்பனர் , கம்மாளர் அணியும் நூல் ; இருபிறப்பாளர் தரிக்கும் முப்புரிநூல் .
பூணூல் பார்ப்பனர் , கம்மாளர் அணியும் நூல் ; இருபிறப்பாளர் தரிக்கும் முப்புரிநூல் .
பூணை முல்லைநிலம் .
பூத்தருபுணர்ச்சி தனக்கு எட்டாத மரத்தினின்றும் தான் விரும்பிய பூவைப் பறித்துதவிய தலைவனொடு தலைவி கூடும் கூட்டம் .
பூத்தல் மலர்தல் ; தோன்றுதல் ; உண்டாதல் ; பொலிவுபெறுதல் ; பூப்படைதல் ; கண்ணொளி மங்குதல் ; பூஞ்சணம் பிடித்தல் ; பயனின்றிப் போதல் ; தோற்றுவித்தல் ; படைத்தல் ; பெற்றெடுத்தல் .
பூத்தானம் அருமை பாராட்டுதல் ; புதுமை .
பூத்திரம் மலை .
பூத்துப்பூத்தெனல் ஓடுதல் முதலியவற்றால் உண்டாகும் மூச்சிழைத்தற் குறிப்பு ; உடல் வீக்கக் குறிப்பு .
பூத்துப்போதல் நெருப்பில் நீறுபடர்தல் ; கண் பார்வை மங்குதல் .
பூத்தொடுத்தல் பூமாலை கட்டுதல் ; பண்டங்களை நெருக்கமின்றி வைத்துப் பெரிதாகக் கட்டுதல் ; கதைகட்டுதல் .
பூதக்கண்ணாடி சிறியதைப் பெரிதாகக் காட்டுங் கண்ணாடிவகை .
பூதகணம் பூதங்களின் கூட்டம் .
பூதகாலம் காண்க : இறந்தகாலம் .
பூதகிருதாயி இந்திராணி .
பூதகிருது இந்திரன் .
பூதசஞ்சாரம் உலகவாழ்வு .
பூதசதுக்கம் காவிரிப்பூம்பட்டினத்தில் பூதம் நின்று காவல் காத்துவந்த நாற்சந்தி .
பூதசரீரம் பருவுடல் .
பூதசாரசரீரம் தேவன் உடல் .
பூதசாரம் ஐம்பூத மூலம் .
பூதசாரவுடம்பு துறக்க இன்பத்தை நுகர ஆன்மா எடுக்கும் தெய்வத்தன்மையுள்ள உடம்பு .
பூதசுத்தி பாவம் நீங்குதற்குச் செய்யப்படும் ஒரு சடங்கு .
பூதத்துணர் புனமுருங்கைமரம் .
பூததயவு உயிர்களிடம் காட்டும் அன்பு .
பூததயை உயிர்களிடம் காட்டும் அன்பு .
பூததாரன் சிவபிரான் .
பூததானியம் எள் .
பூதநாசினி பெருங்காயம் .
பூதநாடி பேய்பிடித்தவர்களிடம் காணப்படும் நாடித்துடிப்புவகை .
பூதநாதன் பூதங்கட்குத் தலைவனான சிவபிரான் ; கடவுள் .
பூதநாயகன் பூதங்கட்குத் தலைவனான சிவபிரான் ; கடவுள் .
பூதநாயகி பார்வதி .
பூதப்படையோன் பூதப்படைகளையுடைய சிவபிரான் .
பூதபதி காண்க : பூதநாதன் .
பூதபரிணாமதேகம் ஐம்பூதங்களின் வேறுபாட்டால் தோன்றிய உடம்பு .
பூதபரிணாமம் ஐம்பூதங்களின் வேறுபாடு .
பூதம் ஐவகைப் பூதம் ; ஐவகைப் பூதங்களின் அதிதேவதைகள் ; உடம்பு ; இறந்தவர்களின் பேயுருவம் ; பூதகணம் ; பரணிநாள் ; உயிர்வர்க்கம் ; பருத்தது ; காண்க : பூதவேள்வி ; சடாமாஞ்சில் ; அடியான் ; இருப்பு ; இறந்தகாலம் ; உள்ளான்பறவை ; கமுகு ; கூந்தற்பனை ; தூய்மை ; வாய்மை ; தருப்பை ; சங்கு ; ஆலமரம் ; பூரான் ; உயிரெழுத்து .
பூதமிவர்ந்தோன் விநாயகக் கடவுள் .
பூதயாகம் உயிர்கட்குப் பலியுணவு தருதல் .
பூதர் பதினெண்கணத்துள் ஒருவரான மாந்தர் .
பூதரநாதன் மலைகட்குத் தலைவனான இமவான் .
பூதரம் மலை ; இமயம் ; மேரு .
பூதரன் அரசன் ; திருமால் .
பூதரோதரம் மலைக்குகை .
பூதலம் பூமி .
பூதவக்குருக்கண் ஆலம்விழுது .
பூதவம் ஆலமரம் ; மருதமரம் .
பூதவாதம் பூதங்களின் சேர்க்கையால் ஆன்மா உண்டானதென்று கூறும் வாதம் .
பூதவாதி பூதவாத மதத்தவன் .
பூதவாளி காண்க : பூதபதி .
பூதவிகாரம் ஐம்பூதங்களின் மாறுபாடு .