சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பூதவிருக்கம் | காண்க : பெருவாகை ; ஆலமரம் ; பீநாறிமரம் . |
| பூதவிருட்சம் | பப்பரப்புளி ; பீநாறிமரம் . |
| பூதவிருள் | அண்டகோளத்தைச் சூழ்ந்திருக்கும் புறவிருள் ; அந்தகாரம் . |
| பூதவீடு | ஐவகைப் பூதங்களாகிய உடம்பு . |
| பூதவுரு | நிலம் , நீர் , தீ , காற்று ஆகிய நான்குங் கொண்ட உருவப்பகுதி . |
| பூதவேள்வி | ஐவகை வேள்விகளுள் விதிப்படி உயிர்கட்குப் பலியுணவு ஈகை . |
| பூதன் | ஆன்மா ; மகன் ; தேய்பிறைப் பதினான்காம் திதி ; பூதத்தாழ்வார் ; கடுக்காய் ; தூயன் . |
| பூதாக்கலம் | மாப்பிள்ளைக்கு மணவாட்டி முதல்முறை சோறிடுகை . |
| பூதாக்கலம்பண்ணுதல் | மணவாளனும் மணவாட்டியும் முதன்முறை ஒரு கலத்தில் உண்ணுதல் . |
| பூதாகாரம் | மிகப் பருத்தது . |
| பூதாண்டம் | பிரகிருதி ; அண்டம் . |
| பூதாத்திரி | காண்க : கீழாநெல்லி . |
| பூதாத்துமன் | துறவி . |
| பூதாத்துமா | சீவாத்துமா ; உடல் ; துணைக்காரணம் ; நான்முகன் . |
| பூதாரம் | பூமியைப் பிளப்பதாகிய பன்றி . |
| பூதாரன் | பூமியின் பதியாகிய அரசன் . |
| பூதாரி | காண்க : பூதநாசினி . |
| பூதாவேசி | காண்க : வெண்ணொச்சி . |
| பூதானம் | நிலக்கொடை . |
| பூதி | திருநீறு ; சாம்பல் ; செல்வம் ; பொன் ; புழுதி ; சேறு ; பூமி ; ஊன் ; கொடுமை ; நாய்வேளைச் செடி ; உடம்பு ; பொதுமை ; காரணமின்றிக் குற்றம் சுமத்துகை ; தீநாற்றம் ; புனுகுசட்டம் ; எழுநரகத்துள் ஒன்று . |
| பூதிகந்தம் | தீநாற்றம் . |
| பூதிகந்திகம் | தீநாற்றம் . |
| பூதிகம் | பூமி ; உடம்பு ; காண்க : நிலவேம்பு ; சாதிக்காய் ; அகில் ; ஒரு மணப்புல்வகை ; ஆயில்மரம் ; புன்கமரம் . |
| பூதிசாதனம் | திருநீறு , உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்கள் . |
| பூதிசாரிசை | புனுகுபூனை . |
| பூதிப்படியாய் | பொதுவாய் . |
| பூதிமம் | காண்க : தூதுவளை . |
| பூதியம் | உடல் ; பூமி ; ஐம்பூதம் . |
| பூதுரந்தரர் | அரசர் . |
| பூதேசன் | சிவபிரான் . |
| பூதேவி | பூமிதேவி . |
| பூதை | அம்பு . |
| பூந்தட்டம் | பூ வைத்தற்குரிய தட்டு . |
| பூந்தட்டு | பூ வைத்தற்குரிய தட்டு . |
| பூந்தராய் | சீர்காழி . |
| பூந்தவிசு | பூவாலாகிய இருக்கை . |
| பூந்தாது | காண்க : கோங்கு ; மகரந்தப்பொடி . |
| பூந்தி | காண்க : புன்கு ; ஒர் இனிப்புப்பண்டம் ; பூவந்திமரம் . |
| பூந்துகள் | காண்க : பூந்தாது . |
| பூந்துகில் | பூவேலை செய்த ஆடை ; பொன்னாலாகிய ஆடை . |
| பூந்துணர் | பூங்கொத்து ; புனமுருங்கை . |
| பூந்துளிர் | மெல்லிய தளிர் . |
| பூந்தூள் | காண்க : பூந்தாது . |
| பூந்தேன் | பூவின் தேன் . |
| பூந்தை | பூதன் என்பவனது தந்தை . |
| பூந்தோட்டம் | காண்க : பூங்கா . |
| பூந்தோடு | பூவின் இதழ் . |
| பூநாகம் | பூவிலுள்ள சிறுபாம்பு ; நாகப்பூச்சி , நாங்கூழ் ; காண்க : பூநீறு . |
| பூநாதம் | வெடியுப்பு . |
| பூநிம்பம் | காண்க : நிலவேம்பு . |
| பூநிறம் | மாந்தளிர்க்கல் . |
| பூநீர் | பனிநீர் ; அரக்குநீர் ; உவர்மண்ணில் எடுக்கும் நீர் . |
| பூநீறு | ஓரு வெள்ளை உவர்மண்வகை ; ஒரு மருந்துப்பொடிவகை . |
| பூநொய் | சிறுநொய் . |
| பூப்பகம் | பெண்குறி . |
| பூப்பந்தல் | பூவினால் அலங்கரிக்கப்பட்ட பந்தல் . |
| பூப்பல்லக்கு | பூவினால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு . |
| பூப்பலி | அருச்சனை ; பூசைக்குரிய பூ . |
| பூப்பிஞ்சு | இளம்பிஞ்சு . |
| பூப்பிள்ளை | சிவபூசையின்போது உதவியாக இருப்பவன் . |
| பூப்பு | பூப்படைதல் ; மாதவிடாய் . |
| பூப்பேசுதல் | விலைமகளுக்குரிய நாட்பரிசம் பேசி முடித்தல் . |
| பூப்போடுதல் | ஆடையிற் பூவேலை செய்தல் . |
| பூப்போல | பூவைப்போல மெதுவாய் . |
| பூபதி | அரசன் ; ஒரு குளிகைவகை ; ஆதிசேடன் ; மல்லிகை . |
| பூபன் | அரசன் . |
| பூபாகம் | நிலப்பரப்பு . |
| பூபாலன் | அரசன் ; வேளாளன் ; உயர்சாதிக் குதிரை ; பூமியின் மகனான செவ்வாய் . |
| பூபாளம் | காலையில் பாடும் ஒரு பண்வகை . |
| பூம்பட்டு | மெல்லிய பட்டு . |
| பூம்பந்தர் | காண்க : பூப்பந்தல் . |
| பூம்பந்து | பூவினால் அமைந்த பந்து . |
| பூம்பறியல் | உணவுக்குறைவு . |
| பூம்பாளை | இளம்பாளை ; ஒரு நெல்வகை . |
| பூம்பிஞ்சு | இளம்பிஞ்சு . |
|
|
|