பூம்பிடகை முதல் - பூரணை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பூம்பிடகை பூங்கூடை .
பூம்பிடா பூங்கூடை .
பூம்பிள்ளை இளம்பிள்ளை .
பூம்புகை மணப்புகை .
பூம்பொருக்கு வாடற்பூ .
பூம்போர்வை பூத்தொழிலையுடைய மேற்போர்வை .
பூமகள் நிலமகள் ; திருமகள் ; கலைமகள் .
பூமகன் பிரமன் ; பூமியின் மகனான செவ்வாய் .
பூமங்கை காண்க : பூமகள் .
பூமடந்தை காண்க : பூமகள் .
பூமடல் வாழை முதலியவற்றின் பூவிலுள்ள மடல் .
பூமடை காண்க : பூப்பலி .
பூமண்டலம் நிலவுலகம் , நிலவட்டம் .
பூமத்தியரேகை நிலநடுக்கோடு .
பூமருது மருதமரவகை ; ஒரு மரவகை .
பூமழை மலர்மாரி .
பூமன் அரசன் ; பிரமன் ; காமன் ; செவ்வாய் .
பூமாதுளை பூமாத்திரம் விடும் மாதுளை .
பூமாதேவி நிலமகள் .
பூமாரி பூமழை ; காண்க : வேம்பு .
பூமாலை பூவினால் தொடுத்த மாலை .
பூமான் அரசன் ; கணவன் ; திருமகள் .
பூமி பூவுலகு ; மூவுலகத்துள் ஒன்று ; நிலமகள் ; நிலப்பகுதி ; மனை ; நாடு ; இடம் ; கோணங்களின் கீழ்வரி ; நிலை ; பொறிக்குரிய செய்தி ; நாக்கு ; ஒரு மருந்துப்பொடிவகை .
பூமிகதனாதல் பிறத்தல் .
பூமிகுருவகம் காண்க : வெள்ளெருக்கு .
பூமிகொழுநன் நிலமகளின் கணவனான திருமால் .
பூமிசம் பூமியிலுண்டானது ; நரகம் .
பூமிசம்பவை பூமியினின்றும் பிறந்த சீதாபிராட்டி .
பூமிசன் செவ்வாய் ; நரகாசுரன் ,
பூமிசை திருமகள் ; சீதாபிராட்டி .
பூமிசைநடந்தோன் தாமரைப்பூவில் நடந்த அருகக்கடவுள் ; புத்தன் .
பூமித்தைலம் மண்ணெண்ணெய் , கன்னெய் .
பூமிதேவி காண்க : பூமாதேவி .
பூமிநாதம் காந்தம் ; வெடியுப்பு ; ஒரு மருந்துப் பொடிவகை .
பூமிநாயகன் திருமால் ; காஷ்மீரப் படிகம் ; காண்க : நிலவேம்பு ; அரசன் .
பூமிபரீட்சை கலையறிவு அறுபத்து நான்கனுள் ஒன்றான நிலத்தியல்பு அறியும் வித்தை .
பூமிபாரம் அரசபாரம் ; நிலத்திற்குப் பொறையாயிருப்பவரான தீயோர் .
பூமியதிர்ச்சி நிலநடுக்கம் .
பூமிவேர் நாக்குப்பூச்சி .
பூமின் காண்க : பூமகள் .
பூமுகம் பொலிந்த முகம் ; வீட்டு முன்முகப்பு .
பூயம் சீழ் ; வெறுக்கத்தக்க பொருள் .
பூர்ணகர்ப்பம் காண்க : பூரணகர்ப்பம் .
பூர்ணம் பூரணம் ; முழுமை ; நிறைவு .
பூர்ணிமை பௌர்ணமி , முழுநிலாநாள் .
பூர்த்தி நிறைவு ; திருப்தி ; கடவுளிடத்து ஐக்கியம் .
பூர்த்திபண்ணுதல் செய்துமுடித்தல் ; நிரப்புதல் .
பூர்த்தியன் வேலைசெய்து கூலிபெறுவோன் .
பூர்தல் நுழைதல் .
பூர்வகதை பண்டைக்கால வரலாறு ; கதையின் முன்தொடர்ச்சி .
பூர்வகாலம் சென்ற காலம் .
பூர்வசைவன் தீட்சையினால் வீடுபேறு அடையலாம் என்னும் கொள்கையுள்ள சைவமதப் பிரிவினன் .
பூர்வஞானம் முற்பிறப்புணர்ச்சி .
பூர்வபதம் தொகைமொழியுள் முதலிலுள்ள சொல் .
பூர்வம் ஆதி ; பழைமை ; முதன்மை ; முற்காலம் ; கிழக்கு ; சமண ஆகமம் மூன்றனுள் ஒன்று ; முன்னிட்டு .
பூர்வாகமம் சமண ஆகமம் மூன்றனுள் ஒன்று .
பூர்வாசிரமம் துறவியின் முந்திய நிலை .
பூர்விகம் முற்காலம் ; மூலவரலாறு .
பூர்வீகன் பழமையோன் ; வயதுமுதிர்ந்தவன் .
பூர்வோத்தரம் முன்வரலாறு ; வடகிழக்கு .
பூரகம் நிரப்புகை ; மூச்சை உள்ளிழுத்தல் ; மத்தங்காய்ப் புல் .
பூரட்டாதி இருபத்தைந்தாம் நட்சத்திரம் .
பூரணகர்ப்பம் முதிர்ந்த சூல் .
பூரணகர்ப்பிணி நிறைசூலி .
பூரணகலசம் மாவிலை வைத்த நீர்நிறைந்த குடம் .
பூரணகுடம் மாவிலை வைத்த நீர்நிறைந்த குடம் .
பூரணகும்பம் மாவிலை வைத்த நீர்நிறைந்த குடம் .
பூரணம் முழுமை ; நிறைவு ; மிகுதி ; முடிவு ; மனநிறைவு ; அபிநயக்கைவகை ; இரண்டாவது மூன்றாவது என எண்கள் நிறுத்தமுறையைக் குறிக்கும் எண் ; பலகாரத்தின் உள்ளீடு பிதிர்ப்பிண்டம் ; ஆடையின் குறுக்கிழை ; மழை ; வளர்பிறைப் பதினைந்தாம் திதி ; பூஞ்சணம் .
பூரணமி வளர்பிறைப் பதினைந்தாம் திதி .
பூரணவயசு நூறு பிராயம் .
பூரணவித்தை நிறைகல்வி ; குறைவில்லாத கலை .
பூரணன் குணங்கள் நிரம்பினவன் ; கடவுள் ; மூர்த்தபாடாணம் .
பூரணாகுதி வேள்விமுடிவுச் சடங்கு .
பூரணி இலவமரம் ; பார்வதி ; பூமி ; காடு ; குணங்கள் நிரம்பினவன் .
பூரணை நிறைவு ; முழுநிலா ; பஞ்சமி , தசமி , உவா என்னும் திதிகள் ; சமவசரணத்தின் வடபுறமுள்ள வாவி ; ஐயனார் தேவி .