பூரணைகேள்வன் முதல் - பூவிரணம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பூரணைகேள்வன் ஐயனார் .
பூரப்பாளை தலைக்கோலத்தின் ஓர் உறுப்பு .
பூரபதி பச்சைக்கருப்பூரம் .
பூரம் கருப்பூரம் ; பச்சைக்கருப்பூரம் ; இரச கருப்பூரம் ; மருந்துவகை ; பூரநாள் ; ஒரு மணச்சடங்கு ; பூரான் ; தேள் ; பழம் ; பொன் ; நிறைவு ; வெள்ளம் ; வைப்புப் பாடாணவகை ; சமவசரணத்தின் வடபுறமுள்ள வாவி .
பூரவாகினி கலைமகள் .
பூரா முழுதும் ; முழுதுமான ; நேர்த்தியான பழுப்புச்சருக்கரைவகை .
பூராடம் ஒரு நட்சத்திரம் .
பூராயக்கதை பழங்கதை .
பூராயம் ஆராய்ச்சி ; விசித்திரமானது ; குழந்தைகளின் கவனத்தைக் கவரும் பொருள் .
பூரான் ஊரும் உயிரிவகை ; குதிரையில் உள்ள தீச்சுழி ; பனைமுளை .
பூரி மிக்க ; மிகுதி ; சிறப்புக் காலங்களில் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கும் தட்சிணை ; பொன் ; மொத்தம் ; ஒரு பேரெண் ; ஊதுகருவி வகை ; வில்லின் நாண் ; குற்றம் ; கலப்புநெல் ; பலகாரவகை ; விரிந்த பாளையின் உள்ளிருக்கும் பூத்தொகுதி ; காண்க : பூரியரிசி ; பப்பரப்புளி ; பூரிசகந்நாதம் என்னும் தலம் .
பூரி (வி) முழக்கு ; பெருகு ; தொனி ; மகிழ் .
பூரிகம் அப்பவருக்கம் .
பூரிகலியாணி ஒரு பண்வகை .
பூரிகா அகில்மரம் .
பூரிகை ஊதுகுழல் ; அப்பவருக்கம் ; நிரப்புகை ; பிராணாயாமத்துக்கு உறுப்பானதும் காற்றை உள்ளிழுப்பதுமான செயல் .
பூரித்தல் நிறைதல் ; குறைவற நிரம்புதல் ; களித்தல் ; பருத்தல் ; பொலிதல் ; மிகுதல் ; பூரகஞ்செய்தல் ; நிறைத்தல் ; பொதிந்துள்ள கருத்தை வெளியிட உரிய சொற்களைச் சேர்த்தல் ; படைத்தல் .
பூரிதம் நிரப்பப்பட்டது ; மிகுகளிப்பு ; மிகுதி .
பூரிப்பு களிப்பு ; நிறைவு ; பருமன் ; மிகுமகிழ்ச்சி ; மிகுதி ; ஒளி .
பூரிமம் தெருப்பக்கம் ; சாந்திட்டுக் கட்டிய தொட்டி .
பூரிமாயன் நரி .
பூரிமாயு நரி ; பழைமை .
பூரியம் ஊர் ; மருதநிலத்தூர் ; வேந்தர் வீதி ; அரசிருக்கை ; கலப்புநெல் ; பப்பரப்புளி .
பூரியமாக்கள் கீழ்மக்கள் ; கொடியவர் .
பூரியர் கீழ்மக்கள் ; கொடியவர் .
பூரியரிசி மட்டையரிசி ; தசராப் பண்டிகையில் வழங்கப்படும் கொடையரிசி ; வெள்ளையரிசி .
பூரியார் காண்க : பூரியர் .
பூரு குருகுலத்தரசருள் ஒருவன் ; புருவம் .
பூருகம் பூமியில் முளைக்கும் மரம் .
பூருண்டி மல்லிகைச்செடி ; வேலிப்பருத்தி ; காண்க : தேட்கொடுக்கி .
பூருவகங்கை நருமதை .
பூருவகருமம் ஊழ்வினை .
பூருவகன்மம் ஊழ்வினை .
பூருவகௌளம் ஒரு பண்வகை .
பூருவஞானம் முன்னனுபவத்தையறியும் அறிவு .
பூருவதிக்கு கிழக்கு .
பூருவதிசை கிழக்கு .
பூருவபக்கம் வளர்பிறைப்பக்கம் ; பிராது .
பூருவம் பழைமை ; கிழக்கு ; முன்பு ; காண்க : பூர்வாகமம் .
பூரை நிறைவு ; போதியது ; முடிவு ; இன்மை ; ஒன்றுக்கும் உதவாதவர் ; ஒன்றுக்கும் உதவாதது .
பூரைபூரையெனல் போதும் போதுமெனல் .
பூரையிடுதல் முடிவடைதல் ; அலுப்புண்டாக்குதல் .
பூல் காண்க : பூலா .
பூலத்தி மருதமரம் .
பூலதை பூநாகம் ; காண்க : கோடாஞ்சி .
பூலா செடிவகை ; மரவகை .
பூலாச்செண்டு பூச்செண்டு ; திருமணத்தில் நலங்கில் மணமக்கள் நிகழ்த்தும் பூச்செண்டாட்டம் .
பூலித்தல் உடம்பு பூரித்தல் .
பூலோககயிலாயம் திருக்குற்றாலம் , சிதம்பரம் போன்ற சிவதலங்கள் .
பூலோகம் மேலேழு உலகத்துள் மூன்றாவது .
பூலோகவைகுண்டம் திருவரங்கம் .
பூவணி பூமாலை ; சதுக்கம் .
பூவணை மலர்ப்பள்ளி .
பூவந்தி புன்கமரம் ; ஒரு மரவகை ; பலகாரவகை ; ஒருமருந்துவகை .
பூவம்பர் ஒரு மணப்பொருள்வகை .
பூவம்பன் மன்மதன் .
பூவமளி எண்வகைப் புணர்ச்சிக்கு இயைந்த மலர்ப்படுக்கை .
பூவமுதம் தேன் .
பூவர்க்கம் பூத்திரள் .
பூவரசு ஒரு மரவகை .
பூவராகம் திருமாலின் பன்றிப்பிறப்பு .
பூவராகன் பன்றியின் அடையாளம் குறித்த பொன்நாணயம் .
பூவல் சிவப்பு ; செம்மண் ; துரவு ; பூத்திடுகை .
பூவல்லிகொய்தல் பூக்கொய்தாடும் மகளிர் விளையாட்டுவகை .
பூவலியம் மண்ணுலகம் .
பூவழலை காண்க : பூநீறு .
பூவன் பிரமன் ; காண்க : செவ்வாழை ; வாழைவகை .
பூவாடைக்காரி மாங்கலியத்துடன் இறந்து தெய்வமான மாது .
பூவாடையம்மன் மாங்கலியத்துடன் இறந்து தெய்வமான மாது .
பூவாணியன் வெற்றிலை , காய்கறி , முதலியன விற்போன் .
பூவாளி மன்மதன் ; மன்மதனின் மலர்க்கணை .
பூவிதழ் மலரேடு .
பூவிந்து அப்பிரகம் ; வீரம் என்னும் மருந்துச் சரக்கு .
பூவிந்துநாதம் அப்பிரகம் .
பூவிரணம் ஆண்குறி மலரிலுள்ள புண் .