சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஆட்டைத்திவசம் | முதலாண்டு நினைவுநாள் , தலைத்திவசம் . |
| ஆட்சேபம் | தடை , மறுத்துக் கூறுதல் . |
| ஆட்சேபனை | தடை , மறுத்துக் கூறுதல் . |
| ஆட்சேபித்தல் | தடைசெய்தல் , மறுத்தல் . |
| ஆட்சேவகம் | ஒருவன் தன் உடம்பால் செய்யும் ஊழியம் ; ஊழியம் . |
| ஆட்சை | கிழமை . |
| ஆட்டக்கச்சேரி | சதிர் . |
| ஆட்டகம் | திருமஞ்சன சாலை , குளியல் அறை . |
| ஆட்டத்துவெளி | குதிரையை ஓடவிடுகின்ற வெளியிடம் ; குதிரைப் பந்தயத் திடல் . |
| ஆட்டபாட்டம் | ஆடல்பாடல் ; ஆர்ப்பாட்டம் . |
| ஆட்டம் | அசைவு ; அலைவு ; சஞ்சாரம் ; விளையாட்டு ; விளையாட்டில் தொடங்குமுறை ; கூத்தாட்டு ; சூது ; அதிகாரம் ; ஓர் உவம உருபு . |
| ஆட்டமடித்தல் | விளையாட்டில் வெல்லுதல் ; கிட்டிப்புள் விளையாட்டு . |
| ஆட்டமெடுத்தல் | விளையாட்டில் வெல்லுதல் ; வழிதேடுதல் . |
| ஆட்டாங்கள்ளி | காண்க : திருகுகள்ளி . |
| ஆட்டாங்கொடி | சோமக்கொடி . |
| ஆட்டாங்கொறுக்கு | மலைத்துவரை . |
| ஆட்டாங்கோரை | கோரைவகை . |
| ஆட்டாண்டு | ஒவ்வோராண்டும் . |
| ஆட்டாம்பிழுக்கை | ஆட்டின் மலம் . |
| ஆட்டாள் | ஆட்டிடையன் . |
| ஆட்டாளி | செயலாளன் . |
| ஆட்டி | பெண் ; மனைவி ; பெண்பால் விகுதி . |
| ஆட்டிடையன் | ஆடுமேய்க்கும் இடையன் . |
| ஆட்டிறைச்சி | ஆட்டுக்கறி . |
| ஆட்டினி | காட்டுப்பூவரசு . |
| ஆட்டீற்று | ஆண்டுதோறும் ஈனுகை . |
| ஆட்டு | கூத்து ; விளையாட்டு . |
| ஆட்டுக்கசாலை | ஆட்டுக்கிடை . |
| ஆட்டுக்கடா | ஆணாடு . |
| ஆட்டுக்கல் | அரைக்குங் கல்லுரல் ; ஆட்டுரோசனை . |
| ஆட்டுக்காதுக்கள்ளி | காண்க : ஆட்டுச்செவிக்கள்ளி . |
| ஆட்டுக்கால் | காண்க : பூமருது ; ஆட்டுக்கால் அடம்பு . |
| ஆட்டுக்காலடம்பு | அடப்பங்கொடி . |
| ஆட்டுக்கிடாய் | காண்க : ஆட்டுக்கடா . |
| ஆட்டுக்கிடை | ஆடுகளைக் கூட்டுமிடம் . |
| ஆட்டுக்கிறை | காண்க : ஆட்டுவரி . |
| ஆட்டுக்கொம்பவரை | அவரைவகை . |
| ஆட்டுக்கொம்பொதி | ஆட்டுக்கொம்பு போன்ற காயையுடைய ஒரு மரம் . |
| ஆட்டுச்சக்கரணி | மஞ்சள் அலரி . |
| ஆட்டுச்சதை | காண்க : ஆடுசதை . |
| ஆட்டுச்செவிக்கள்ளி | கள்ளிவகை . |
| ஆட்டுச்செவிப்பதம் | தேங்காயின் வழுக்கைப் பதம் . |
| ஆட்டுகம் | காண்க : ஆடாதோடை . |
| ஆட்டுத்துழாய் | காட்டுத்துளசி . |
| ஆட்டுத்தொட்டி | காண்க : ஆட்டுக்கிடை . |
| ஆட்டுதப்பி | ஆடு அசையிடுமிரை . |
| ஆட்டுதல் | அசைத்தல் ; துரத்துதல் ; அலைத்தல் ; வெல்லுதல் ; ஆடச்செய்தல் ; நீராட்டுதல் ; அரைத்தல் . |
| ஆட்டுப்பட்டி | காண்க : ஆட்டுக்கிடை . |
| ஆட்டுப்பலகை | செக்கின்கீழுள்ள சுற்றுமரம் . |
| ஆட்டுமந்தை | ஆட்டின் கூட்டம் ; ஆடு கூடுமிடம் . |
| ஆட்டுமயிர்ச்சரக்கு | கம்பளித்துணி . |
| ஆட்டுமுட்டி | அதிமதுரம் . |
| ஆட்டுரல் | ஆட்டுக்கல் . |
| ஆட்டுலா | காண்க : ஆட்டுக்காலடம்பு . |
| ஆட்டுவரி | ஆட்டுக்கு விதிக்கப்படும் தீர்வை . |
| ஆட்டுவாகனன் | ஆட்டை ஊர்தியாகவுடைய அக்கினிதேவன் . |
| ஆட்டுவாணிகன் | ஆட்டு வியாபாரி ; ஆட்டிறைச்சி விற்போன் . |
| ஆட்டுவாணியன் | ஆட்டு வியாபாரி ; ஆட்டிறைச்சி விற்போன் . |
| ஆட்டுவிப்போன் | நட்டுவன் . |
| ஆட்டூரவேம்பு | மலைவேம்பு . |
| ஆட்டை | விளையாட்டில் தொடங்குமுறை ; ஆண்டு . |
| ஆட்டைக்காணிக்கை | பழங்கால வரிகளுள் ஒன்று . |
| ஆட்டைக்கோள் | ஆண்டுதோறும் செலுத்த வேண்டும் தொகை . |
| ஆட்டைச்சம்மாதம் | வரிவகை . |
| ஆட்டைத்திதி | முதலாண்டு நினைவுநாள் , தலைத்திவசம் . |
| ஆட்கொள்ளுதல் | அடிமை கொள்ளுதல் . |
| ஆட்சி | உரிமை ; ஆளுகை ; அதிகாரம் ; ஆன்றோர் வழக்கு ; அனுபவம் ; தாயமுறையில் வந்த உரிமை ; மக்கள் அணையலாகாதெனக் கட்டளையிடப்பட்ட இடம் ; கோள்நிலை ; கிழமை . |
| ஆட்சிவீடு | கோள்களின் சொந்த வீடு . |
| ஆட்சித்தானம் | கோள்களின் சொந்த வீடு . |
| ஆட்சிப்படுதல் | உரிமையாதல் . |
| ஆட்சிராசி | ஒரு கோளுக்குச் சொந்தமான வீடு . |
| ஆட்சுமை | ஓராள் தூக்கும் பாரம் . |
| ஆட்செய்தல் | தொண்டுசெய்தல் . |
| ஆட்சேபசமாதானம் | தடைவிடை . |
| ஆட்சேபணம் | தடை , மறுத்துக் கூறுதல் . |
|
|
|