ஆட்டைப்பாழ் முதல் - ஆடும்பாத்திரம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஆடிப்பால் ஆடிமாதப் பிறப்பில் செய்யும் விருந்தில் பயன்படுத்தும் தேங்காய்ப் பாலுணவு .
ஆடிப்பூரம் ஆடிமாதத்துப் பூரநாளில் நிகழும் அம்மன் திருவிழா .
ஆடிப்பெருக்கு பதினெட்டாம் பெருக்கு ; ஆடிமாதத்தில் காவேரிப் பெருக்கினைக் குறித்து எடுக்கப்படும் கொண்டாட்டம் .
ஆடிப்போதல் கட்டுக்குலைந்துபோதல் .
ஆடியகூத்தன் தில்லைமரம் .
ஆடியறவெட்டை ஆடிமாதத்தில் உண்டாகும் பொருள்முடை .
ஆடு வெற்றி ; விலங்குவகை ; மேடராசி ; கூத்து ; கூர்மை ; கொல்லுகை ; சமைக்கை ; காய்ச்சுகை .
ஆடுகால் ஏற்றத்தில் துலாத்தாங்கு மரம் .
ஆடுகொப்பு மகளிர் காதணிவகை .
ஆடுகொம்பு கட்டுகொம்பு .
ஆடுசதை முழங்காலின் கீழ்த்தசை .
ஆடுஞ்சரக்கு வெப்பத்தால் காற்றாய்ப் போகும் இரசம் முதலிய பொருள்கள் ; மருந்துச் சரக்கு .
ஆடுதல் அசைதல் ; கூத்தாடுதல் ; விளையாடுதல் ; நீராடுதல் ; பொருதல் ; சஞ்சரித்தல் ; முயலுதல் ; பிறத்தல் ; சொல்லுதல் ; செய்தல் ; அனுபவித்தல் ; புணர்தல் ; பூசுதல் ; அளைதல் ; தடுமாறுதல் ; எந்திர முதலியவற்றில் அரைபடுதல் ; விழுதல் ; செருக்குதல் .
ஆடுதலி அதிகாரியோடுகூட இருக்கும் ஊழியன் .
ஆடுதின்னாப்பாளை புழுக்கொல்லிப் பூண்டு .
ஆடுதீண்டாப்பாளை புழுக்கொல்லிப் பூண்டு .
ஆடுதுடை சதைப்பற்றுள்ள தொடைப் பகுதி .
ஆடுதோடா காண்க : ஆடாதோடை .
ஆடுநர் கூத்தர் .
ஆடும்பாத்திரம் நாட்டியப் பெண் .
ஆட்டைப்பாழ் ஆண்டு முழுவதும் தரிசு கிடந்த நிலம் .
ஆட்டைவட்டம் ஆண்டுதோறும் .
ஆட்டைவட்டன் ஆண்டுதோறும் .
ஆட்டைவாரியர் ஊராட்சியை ஆண்டுதோறும் மேற்பார்வையிடும் சபையார் .
ஆட்டைவிழா ஆண்டுத் திருவிழா .
ஆட்டோசை ஆட்டுக்குரலையொத்த தாரவிசையின் ஓசை .
ஆட்படுத்தல் அடிமைகொள்ளுதல் .
ஆட்படுத்துதல் காண்க : ஆட்படுத்தல் ; வளர்த்து ஆளாக்குதல் ; முன்னுக்குக் கொண்டு வருதல் .
ஆட்படுதல் அடிமையாதல் ; உயர்நிலை அடைதல் ; உடல்நலமுறுதல் .
ஆட்பலி நரபலி ; தெய்வத்தின் பொருட்டு மனிதனைப் பலியாகக் கொடுக்கை .
ஆட்பழக்கம் மனிதப் பழக்கம் .
ஆட்பார்த்தல் வேற்றாள் வராமல் நோக்குதல் ; ஆள்தேடுதல் .
ஆட்பாலவன் அடியான் .
ஆட்பிடியன் முதலை .
ஆட்பிரமாணம் ஆள்மட்ட அளவு .
ஆடகக்குடோரி மயிலடிக்குருந்து .
ஆடகச்சயிலம் மேருமலை .
ஆடகத்தி குங்குமபாடாணம் .
ஆடகம் காண்க : துவரை ; நால்வகைப் பொன்னுள் ஒன்று , சிறந்த பொன் , உலோகக்கட்டி ; சிறுநாகப்பூ ; ஐந்து பிரத்தங்கொண்ட நிறை ; நானாழி .
ஆடகன் பொன்னிறமுடைய இரணியகசிபு .
ஆடகி காண்க : துவரை .
ஆடகை காண்க : துவரை .
ஆடகூடம் செம்புமலை .
ஆடங்கம் துன்பம் ; தாமதம் .
ஆடம் ஓரளவு ; காண்க : ஆமணக்கு .
ஆடம்பரம் பகட்டுத் தோற்றம் ; பல்லிய முழக்கம் ; யானையின் பிளிற்றொலி ; ஆவேசம் .
ஆடமணக்கு காண்க : ஆமணக்கு .
ஆடமாகிதம் பெருங்காஞ்சொறி .
ஆடல் அசைகை ; கூத்து ; துன்பம் ; செய்கை ; ஆளுகை ; விளையாட்டு ; புணர்ச்சி ; சொல்லுகை ; நீராடல் ; போர் ; வெற்றி .
ஆடல்கொடுத்தல் இடங்கொடுத்தல் ; துன்பம் அனுபவித்தல் .
ஆடலிடம் அரங்கம் .
ஆடலை பூவாத மரம் ; அரசு .
ஆடவர்பருவம் பாலன் ; காளை , குமாரன் , ஆடவன் , மூத்தோன் , முதியோன் .
ஆடவல்லான் நடராசப்பெருமான் ; இராசராசன் ஆட்சியில் எடுத்தல் , முகத்தல் அளவைகட்கு இட்ட பெயர் .
ஆடவலபெருமான் திருவாரூரில் கோயில் கொண்ட சிவபெருமான் .
ஆடவள் பெண் .
ஆடவன் ஆண்மகன் ; இளைஞன் ; நான்காம் பருவத்தினன் .
ஆடவை நடனசபை ; மிதுனராசி .
ஆடற்கூத்தியர் அகக்கூத்தாடும் கணிகையர் .
ஆடற்றரு கூத்துப்பாட்டு வகை .
ஆடனூல் நாட்டிய நூல் .
ஆடா கால்களில் கட்டியைப் போல் உண்டாகும் குதிரைநோய் .
ஆடாகாவிகம் மரவுரி .
ஆடாதிருக்கை ஆடுவாலன் திருக்கை ; அசையாதிருத்தல் .
ஆடாதோடை ஒரு மருந்துச் செடி .
ஆடி கூத்தாடுபவன் ; கண்ணாடி ; பளிங்கு ; நான்காம் மாதம் ; உத்தராட நாள் பகலில் பன்னிரண்டு நாழிகைக்குமேல் இரண்டு நாழிகை கொண்ட முகூர்த்தம் ; நாரை ; ஆணிவகை .
ஆடிக்கரு ஆடி மாதத்து நீருண்ட மேகம் .
ஆடிக்கழைத்தல் மணத்துக்குப் பின் முதல் ஆடி மாதத்தில் பெண்ணைப் பிறந்த வீட்டுக்கு அழைத்தல் .
ஆடிக்கால் வெற்றிலைக்கொடி படரும் நோக்கோடு வயலில் ஆடி மாதத்தில் நடும் அகத்தி .
ஆடிக்குறுவை நெல்வகை .
ஆடிக்கோடை ஆடிமாதத்தில் அறுவடையாகும் நெல் .
ஆடிச்சி கழைக்கூத்தாடிப் பெண் .
ஆடிடம் விளையாடுமிடம் .
ஆடிப்பட்டம் விதையிடுதற்குரிய பருவம் .
ஆடிப்பண்டிகை ஆடிமாதப் பிறப்புக் கொண்டாட்டம் .