சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஆண்டலைக்கொடி | முருகக்கடவுளின் சேவற்கொடி ; ஆண்மகன் தலையும் பறவையின் உடலுமாக எழுதின பறவைக்கொடி . |
| ஆண்டலைப்புள் | ஆண்மகன் தலைபோன்ற வடிவங்கொண்ட பறவை . |
| ஆண்டலையடுப்பு | ஆண்டலைப்பறவை வடிவமாகச் செய்து பறக்கவிடும் மதிற்பொறி . |
| ஆண்டவரசு | திருநாவுக்கரசு நாயனார் . |
| ஆண்டவன் | உடையவன் ; கடவுள் . |
| ஆண்டளப்பான் | வியாழன் . |
| ஆண்டார் | உடையோர் ; தேவர் ; அடியார் . |
| ஆண்டாள் | சூடிக்கொடுத்த நாச்சியார் . |
| ஆண்டாள்மல்லிகை | மல்லிகைவகை . |
| ஆண்டான் | ஆண்டவன் . |
| ஆண்டான்வெட்டு | பழைய நாணயவகை . |
| ஆண்டி | பண்டாரம் ; பரதேசி ; ஏழை ; வரிக்கூத்துவகை . |
| ஆண்டிச்சி | ஆண்டியின் பெண்பாற் பெயர் . |
| ஆண்டிசமாதி | சன்னியாசியாய் இறந்தவரது சமாதியில் பூசை செய்வதற்கென்று இனாமாக விடப்பட்ட நிலம் . |
| ஆண்டித்தாரர் | ' தாரா ' என்னும் பறவைவகை . |
| ஆண்டு | அகவை ; அவ்விடம் . |
| ஆண்டுகள்ளடவு | ஆண்டு வருமானம் . |
| ஆண்டுமாறி | ஒரு வசைச்சொல் . |
| ஆண்டுமூஞ்சி | ஒரு வசைச்சொல் . |
| ஆண்டுமூய்தல் | விருத்தியறுதல் . |
| ஆண்டுவருதல் | பயன்பாட்டுக்குப் போதியதாதல் ; பயன்படுத்தி வருதல் . |
| ஆண்டெழுத்துத்தேவை | பழைய வரிவகையுள் ஒன்று . |
| ஆண்டை | தலைவன் ; அவ்விடம் ; அவ்வுலகம் ; தேட்கொடுக்கி ; அழிஞ்சில் . |
| ஆண்டைச்சிகை | ஆண்டுப் பாக்கிக் கணக்கு . |
| ஆண்டையர் | மனிதர் . |
| ஆண்டொழில் | வீரச்செய்கை . |
| ஆண்டோன் | தலைவன் ; தேவன் ; மானிடன் . |
| ஆண்தண்டு | வலக்காதின் தண்டு . |
| ஆண்பனை | காயாப் பனை . |
| ஆண்தருப்பை | புல்வகை . |
| ஆண்பாடு | ஆண்மக்களின் முயற்சி . |
| ஆண்பாத்தி | உப்புப்பாத்திவகை . |
| ஆண்பால் | ஆண்சாதி ; ஐம்பாலுள் ஒன்று . |
| ஆண்பாலெழுத்து | அ , இ , உ , எ , ஒ , என்னும் குற்றெழுத்துகள் . |
| ஆண்பாற் பிள்ளைக்கவி | காப்பு , செங்கீரை , தால் , சப்பாணி , முத்தம் , வாரானை , அம்புலி , சிற்றில் , சிறுபறை , சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களில் ஓர் ஆண்மகனின் குழந்தைமைச் செயல்களை விளக்கும் பிரபந்தம் . |
| ஆண்பாற் பிள்ளைத்தமிழ் | காப்பு , செங்கீரை , தால் , சப்பாணி , முத்தம் , வாரானை , அம்புலி , சிற்றில் , சிறுபறை , சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களில் ஓர் ஆண்மகனின் குழந்தைமைச் செயல்களை விளக்கும் பிரபந்தம் . |
| ஆண்பாற் பிள்ளைப்பாட்டு | காப்பு , செங்கீரை , தால் , சப்பாணி , முத்தம் , வாரானை , அம்புலி , சிற்றில் , சிறுபறை , சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களில் ஓர் ஆண்மகனின் குழந்தைமைச் செயல்களை விளக்கும் பிரபந்தம் . |
| ஆண்பிள்ளை | ஆண்குழந்தை ; ஆண்மகன் ; கணவன் ; வீரன் ; கெட்டிக்காரன் . |
| ஆண்பெண் | ஆணும் பெண்ணும் ; கணவன் மனைவி . |
| ஆண்மக்கட்பருவம் | காளைப் பருவம் . |
| ஆடுமறிகூலி | ஆட்டுக்கிடை வைக்கத் தருங் கூலி |
| ஆடுமாடு | கால்நடை . |
| ஆடுமாலை | உல்லாசமுள்ள குமரிப்பெண் . |
| ஆடூஉ | ஆண்மகன் . |
| ஆடூஉக்குணம் | ஆண்மகனுக்குரிய பண்புகள் ; அவை : அறிவு ; நிறை ; ஓர்ப்பு , கடைப்பிடி . |
| ஆடூஉமுன்னிலை | ஆண்பாலரை முன்னிலைப் படுத்திக் கூறுகை . |
| ஆடூஉவறிசொல் | ஆண்பாற்கிளவி . |
| ஆடூர்ந்தோன் | முருகன் ; அங்கியங்கடவுள் . |
| ஆடெழும்புநேரம் | காலைப் பத்து நாழிகை . |
| ஆடை | உடை ; சித்திரை நாள் ; கண்படலம் ; பால் முதலியவற்றின்மேல் எழும் ஏடு ; பனங்கிழங்கின் உள்ளிருக்கும் தோல் . |
| ஆடைக்காதி | கோங்கிலவு . |
| ஆடைக்குங்கோடைக்கும் | எல்லாப் பருவத்தும் . |
| ஆடைக்குறி | வண்ணாரிடுந் துணிக்குறி . |
| ஆடைத்தயிர் | ஏடெடாத தயிர் . |
| ஆடைமேல் | கழுத்து . |
| ஆடையொட்டி | பூண்டுவகை ; சீலைப்பேன் . |
| ஆடையொட்டிநீர் | சுக்கிலம் . |
| ஆடைவீசுதல் | மகிழ்ச்சிக் குறியாக ஆடையைமேலே வீசுதல் . |
| ஆடோபம் | செருக்கு ; வீக்கம் . |
| ஆண் | ஆண்பாற் பொது ; வீரியம் ; தலைமை ; வீரன் ; காண்க : ஆண்மரம் . |
| ஆண்கடன் | ஆண்மக்கள் கடமை . |
| ஆண்கிரகம் | செவ்வாய் ; வியாழன் ; சூரியன் . |
| ஆண்குமஞ்சான் | காண்க : குங்கிலியம் . |
| ஆண்குறிஞ்சான் | காண்க : குங்கிலியம் . |
| ஆண்குறி | ஆடவர் குறி . |
| ஆண்கை | ஆண்பாற் செயல்காட்டும் அபிநயக் கை . |
| ஆண்சந்ததி | ஆண்மகவு . |
| ஆண்சரக்கு | கல்லுப்பு ; வெடியுப்பு . |
| ஆண்சாவி | துளையில்லாத திறவுகோல் . |
| ஆண்சிரட்டை | தேங்காயின் அடிப்பாதி ஓடு . |
| ஆண்செருப்படை | செருப்படைவகை . |
| ஆண்சோடனை | ஆண்கூத்துக்குச் செய்யும் ஒப்பனை . |
| ஆண்டகை | ஆண்தன்மை ; பெருமையிற் சிறந்தவன் . |
| ஆண்டகைமை | வீரம் . |
| ஆண்டலை | கோழி ; ஆண்மகன் தலைபோன்ற தலையுடைய ஒரு பறவை ; பூவாது காய்க்கும் மரம் . |
|
|
|