ஆண்மகன் முதல் - ஆத்தியை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஆத்திகம் கடவுள் உண்டென்னும் கொள்கை ; யானைக்கூட்டம் .
ஆத்திகன் கடவுள் உண்டென்னும் கொள்கை உடையவன் .
ஆத்திசூடி ஆத்திமாலை சூடிய சிவபெருமான் ; ஔவையார் செய்த நீதிநூல்களுள் ஒன்று .
ஆத்திசூலை குதிரை நோய்வகை .
ஆத்திட்டி நீர்முள்ளி .
ஆத்தியந்தம் காண்க : ஆதியந்தம் .
ஆத்தியந்திகபிரளயம் பிரளயத்தால் உலகம் முடியும் காலம் .
ஆத்தியாத்துமிகம் தன்னைப்பற்றி வரும் துன்பம் .
ஆத்தியான்மிகம் தன்னைப்பற்றி வரும் துன்பம் .
ஆத்தியை துர்க்கை .
ஆண்வழி ஆண் சந்ததியிலிருந்து உண்டான பரம்பரை .
ஆணகம் சுரைக்கொடி .
ஆணங்காய் ஆண்பனையின் பாளை ; பனம்பூ .
ஆணத்தி கட்டளை .
ஆணம் நேயம் ; பற்றுக்கோடு ; கொள்கலம் ; குழம்பு ; குழம்பிலுள்ள காய் ; சிறுமை .
ஆணர் பாணர் ; பாடகர் .
ஆணலி ஆண்தோற்றம் மிக்க அலி .
ஆணவம் செருக்கு ; காண்க : ஆணவமலம் ; கோளகபாடாணம் .
ஆணவமலம் மும்மலங்களுள் ஒன்று ; மூலமலம் ; உடம்பை 'யான்' என்று இருக்கை .
ஆணவமறைப்பு ஆணவ மலத்தால் உயிருக்கு உண்டாகும் அறியாமை .
ஆணழகன் அழகு வாய்ந்தவன் .
ஆணன் ஆண்மையுடையவன் ; அன்புடையோன் .
ஆணாடுதல் விருப்பப்படி நடத்தல் ;
ஆணாப்பிறந்தோன் மனிதன் ; ஆவிரை .
ஆணாள் ஆண் நட்சத்திரங்கள் ; அவை : பரணி , கார்த்திகை , உரோகிணி , புனர்பூசம் , பூசம் , அத்தம் , அனுடம் , திருவோணம் , பூரட்டாதி , உத்திரட்டாதி .
ஆணாறு மேற்குநோக்கி ஓடும் ஆறு .
ஆணி இரும்பாணி ; அச்சாணி ; எழுத்தாணி ; மரவாணி ; உரையாணி ; புண்ணாணி ; மேன்மை ; ஆதாரம் ; ஆசை ; சயனம் ; பேரழகு ; எல்லை .
ஆணிக்கல் பொன் நிறுக்கும் கல் .
ஆணிக்குருத்து பனையின் அடிக்குருத்து .
ஆணிக்கை உறுதி .
ஆணிக்கொள்ளுதல் இருப்பிடத்தை நிலைபெறச் செய்து கொள்ளுதல் ; இறக்குங்காலத்தில் விழி அசையாது நிற்றல் .
ஆணிக்கோவை உரையாணி கோத்த மாலை .
ஆணிச்சவ்வு விழிப்படலம் .
ஆணிச்சிதல் சீப்பிடித்த புண்ணாணி .
ஆணித்தரம் முதல்தரம் ; உறுதி .
ஆணிதைத்தல் பொருத்த ஆணியடித்தல் ; கால் முதலியவற்றில் ஆணிபாய்தல் .
ஆணிப்புண் உள்ளாணியுள்ள சிலந்தி .
ஆணிப்பூ கண்ணில் விழும் வெள்ளை ; கண்நோய் .
ஆணிப்பூடு கண்ணில் விழும் வெள்ளை ; கண்நோய் .
ஆணிப்பொன் உயர் மாற்றுப் பொன் .
ஆணிமலர் ஆணியின் தலை .
ஆணிமலர்திருப்பி திருப்புளி .
ஆணிமுத்து உயர்தரமான முத்து .
ஆணியச்சு ஆணியுண்டாக்கும் அச்சு .
ஆணியம் நாட்படி .
ஆணியிடுதல் கண் நிலைக்குத்துதல் .
ஆணிவேர் மூலவேர் .
ஆணு நேயம் ; இனிமை ; நன்மை ; இரசம் .
ஆணுடம்பு ஆண்குறி .
ஆணெழுத்து உயிரெழுத்து .
ஆணை கட்டளை ; அதிகாரம் ; நீதிமன்றம் முதலிய விடங்களில் கூறும் உறுதிமொழி ; சூளுரை ; மெய் ; தடுக்கை ; இலாஞ்சனை ; வெற்றி ; ஆன்றோர் மரபு ; சிவபிரானது சிற்சத்தி .
ஆணையிடுதல் கட்டளையிடுதல் ; சூளுரைத்தல் .
ஆணையோலை கட்டளைத் திருமுகம் .
ஆணைவழிநிற்றல் அரசர் கட்டளைப்படி நடத்தல் ; வேளாண் மாந்தர் ஒழுக்கங்களுள் ஒன்று .
ஆணைவிடுதல் சூளுறவை நீக்குதல் .
ஆணொழிமிகுசொல் இருதிணையிலும் பெயர் அல்லது தொழிலினால் பெண்பாலாகப் பால் பிரியுஞ்சொல் .
ஆத்தம் விருப்பம் ; குருவுக்குச் செய்யும் பணிவிடை ; அன்பு .
ஆத்தல் யாத்தல் ; அமைத்தல் ; கட்டுதல் .
ஆத்தவாக்கியம் நட்பாளர் மொழி ; வேதசாத்திரங்கள் .
ஆத்தன் விருப்பமானவன் ; அருகன் ; நம்பத்தக்கோன் .
ஆத்தாடி வியப்புக் குறிப்பு ; இளைப்பாறற் குறிப்பு .
ஆத்தாரமூத்தாள் பூனைக்காலிக்கொடி .
ஆத்தா தாய் ; பார்வதி .
ஆத்தாள் தாய் ; பார்வதி .
ஆத்தானம் அரசவை ; கோபுரவாயில் .
ஆத்தி மரவகை ; திருவாத்தி ; செல்வம் ; அடைகை ; சம்பந்தம் ; இலாபம் ; பெண்பால் விகுதி ; அச்ச வியப்புக்குறிப்பு .
ஆண்மகன் ஆண் குழந்தை ; கணவன் ; ஆணிற்சிறந்தோன் .
ஆண்மரம் உள்வயிரமுள்ள மரம் ; காண்க : சேமரம் ; அழிஞ்சில் .
ஆண்மாரி அடங்காக் குணமுள்ளவள் .
ஆண்மை ஆளும்தன்மை ; ஆண்தன்மை ; வெற்றி ; வலிமை ; அகங்காரம் ; உடைமை ; வாய்மை .
ஆண்மைத்தனம் ஆண்மைத்தன்மை .
ஆண்மைப் பொதுப்பெயர் உயர்தினை ஆண்பாலையும் அஃறிணை ஆண்பாலையும் ஏற்கும் பொதுப்பெயர் .
ஆண்மையாளர் வலிமையுற்றோர் ; திறம் படைத்தவர் ; வீரர் .
ஆண்மையிலி பெண்தன்மை உடையவன் ; ஆளும் தன்மை இல்லாதவன் .
ஆண்வசம்பு சிலும்பலுள்ள வசம்பு .