சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பெருநான்கெல்லை | ஊர் அல்லது நிலத்தாக்கின் பேரெல்லை ; எல்லை . |
| பெருநிலம் | பூமி ; பரமபதம் . |
| பெருநிலை | ஒருசார்பு ; விடாப்பிடி ; சாட்சி . |
| பெருநிலைநிற்றல் | உதவிசெய்தல் ; சாட்சி சொல்லுதல் ; செய்துமுடித்தல் . |
| பெருநீர் | கடல் ; மழைக்காலத்துப் பாய்ச்சல் முறையின்றித் தாராளமாக ஓடும் நீர்ப்பெருக்கு . |
| பெருநெஞ்சு | செருக்கு ; ஆண்மை . |
| பெருநெறி | வீட்டுநெறி ; பெருவழி . |
| பெருப்பம் | பருமன் . |
| பெருப்பித்தல் | பெரிதாக்குதல் ; புனைந்து கூறுதல் . |
| பெருப்பு | பெருக்கை . |
| பெரும்பஞ்சமூலம் | தழுதாழை , பாதிரி , பெருங்குமிழ் , வாகை , வில்வம் என்னும் ஐந்து மரங்களின் வேர்களைக்கொண்டு செய்த கூட்டு மருந்துவகை . |
| பெரும்படி | முருடு ; உத்தேசமதிப்பு ; பருமன் ; உயர்தரம் ; தாராளம் ; அகந்தை . |
| பெரும்படை | பெரிய சேனை ; இறந்த வீரனின் புகழை நடுகல்லிற் பொறிப்பதைக் குறிக்கும் புறத்துறை ; தெய்வமாகிய நடுகற்குப் பெருஞ்சிறப்புப் படைத்தலைக் கூறும் புறத்துறை . |
| பெரும்பணி | கிடைத்தற்கரியது . |
| பெரும்பதம் | வீடுபேறு . |
| பெரும்பதவி | வீடுபேறு . |
| பெரும்பதி | மருங்கில் ஊர்சூழ் பதி . |
| பெரும்பயறு | காராமணி . |
| பெரும்பராக்கு | மிகுந்த கவனக்குறைவு ; விழிப்பின்மை . |
| பெரும்பற்றப்புலியூர் | சிதம்பரம் . |
| பெரும்பற்று | அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலம் . |
| பெரும்பறை | ஒரு தோற்கருவிவகை . |
| பெரும்பனையன் | அம்மைநோய்வகை . |
| பெரும்பாடு | பேருழைப்பு ; தீட்டுவெளிப்பாட்டு நோய் , கருப்பவுதிர இறைப்பு . |
| பெரும்பாண் | யாழ் வாசிக்கும் பாணர்சாதி வகையார் . |
| பெரும்பாணர் | யாழ் வாசிக்கும் பாணர்சாதி வகையார் . |
| பெரும்பாந்தள் | பெரிய பாம்பு . |
| பெரும்பாலார் | மிகுதியானவர் . |
| பெரும்பாலும் | அநேகமாய் . |
| பெரும்பாலை | பெரும்பண்வகை . |
| பெரும்பாவி | கொடுந் தீவினையாளன் . |
| பெரும்பாழ் | பெருவெளி ; மூலப்பிரகிருதி ; முற்றுமழிவு . |
| பெரும்பாழ்செய்தல் | முழுதும் அழித்தல் . |
| பெரும்பான்மை | பெரும்பாலும் ; புகழுரை . |
| பெரும்பிடி | கட்டாய வசூல் . |
| பெரும்பிழுக்கை | வரிக்கூத்துவகை . |
| பெரும்பிறிது | இறப்பு . |
| பெரும்புயல் | பெருங்காற்று ; கனத்த மழை . |
| பெரும்புலர்காலை | அதிகாலை . |
| பெரும்புலர்விடியல் | அதிகாலை . |
| பெரும்புள் | பெருங்கோட்டான் ; காண்க : சரபம் . |
| பெரும்புறக்கடல் | சக்கரவாளமலையைச் சூழ்ந்துள்ள கடல் . |
| பெரும்புறம் | பெருவெளி . |
| பெரும்பூ | நிலத்தின் ஆண்டுவருவாய் . |
| பெரும்பூண் | மார்பில் பூணும் பேரணி . |
| பெரும்பூழை | கதவிலிடும் வாயில் . |
| பெரும்பூளை | ஒரு செடிவகை . |
| பெரும்பெயர் | பெரும்புகழ் ; வீடுபேறு . |
| பெரும்பெயருலகம் | துறக்கம் . |
| பெரும்பெயல் | கனத்த மழை . |
| பெரும்பேச்சு | பலரறிசொல் ; அலப்பற் பேச்சு ; புகழ் . |
| பெரும்பேது | பெரும்பித்து ; சாக்காடு ; பைத்தியம் . |
| பெரும்பொங்கல் | காண்க : தைப்பொங்கல் ; ஊர்த் தெய்வத்துக்கு ஊராரிடும் பொங்கல் . |
| பெரும்பொருள் | சிறப்புடைய பொருள் ; அறம் ; ஞானம் ; வீடுபேறு ; அகப்பொருள்பற்றிய நூல் . |
| பெரும்பொழுது | கார் , கூதிர் , முன்பனி , பின்பனி , இளவேனில் , முதுவேனில் என்னும் பருவங்கள் . |
| பெரும்பொன்படுதல் | தோற்றப் பொலிவுண்டாதல் . |
| பெரும்போக்கு | பெருந்தன்மை ; சாவு . |
| பெரும்போகம் | மிகுந்த விளைவு ; பேரின்பம் . |
| பெருமக்கள் | பெரியோர் ; ஊர்ச்செயல்களை மேற்பார்வைசெய்யும் சபைப் பெரியோர் . |
| பெருமகன் | பெரியோன் ; அரசன் ; தலைவன் ; அருகதேவன் . |
| பெருமங்கலம் | வாழ்த்துப்பாடல் ; நன்னாள் ; அரசன் தன் பிறந்தநாளில் குடிகட்கு அருள் செய்வதைக் கூறும் புறத்துறை ; அரசனது பிறந்தநாள் மங்கலத்தைக் கூறும் நூல் . |
| பெருமஞ்சிகன் | நாவிதன் . |
| பெருமடை | தெய்வங்களுக்குப் படைக்கும் சோற்றுப்படையல் . |
| பெருமணம் | கலியாணம் . |
| பெருமருந்து | ஒரு கொடிவகை . |
| பெருமலை | மகாமேருமலை . |
| பெருமழை | காண்க : பெரும்பெயல் . |
| பெருமா | யானை . |
| பெருமாட்டி | தலைவி . |
| பெருமாள் | பெருமையிற் சிறந்தவர் ; சேரர் பட்டப்பெயர் ; திருமால் ; முருகன் ; கடவுள் . |
| பெருமாள்கோயில்மாடு | திருமால் கோயில் எருது ; உடம்பு கொழுத்தவன் . |
| பெருமான் | அரசன் ; கடவுள் ; பெருமையிற் சிறந்தவன் ; மூத்தோன் ; பெருமாட்டி . |
| பெருமானடிகள் | சுவாமி ; அரசர் தலைவர் பட்டப்பெயர் . |
| பெருமிடறுசெய்தல் | உரத்தழுதல் . |
| பெருமிதம் | பேரெல்லை ; மேம்பாடு ; தருக்கு ; உள்ளக்களிப்பு ; கல்வி முதலிய பெருமைகளில் மேம்பட்டுநிற்கை . |
|
|
|