பேதலித்தல் முதல் - பேயூமத்தை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பேதலித்தல் வேற்றுமைப்படுதல் ; மாறுதல் ; மனங்குழம்புதல் ; ஐயமுறல் .
பேதலிப்பு வேற்றுமை .
பேதவாதசைவம் இறைவனும் ஆன்மாவும் முத்திநிலையில் தலைவனும் தலைவியும் போல்வர் என்னும் சமயம் .
பேதறுத்தல் கலக்கத்தை ஒழித்தல் .
பேதாபேதம் வேற்றுமையும் ஒற்றுமையும் ; வேற்றுமைப் பொருள்களின் கூட்டம் .
பேதாமாற்று சதுரங்கத்தில் காயினால் கட்டுகை .
பேதி பிரிப்பது ; கழிச்சல் ; பேதமானவன் ; பேதிமருந்து ; இரசம் ; நேர்வாளம் .
பேதிக்குக்கொடுத்தல் பேதிமருந்து கொடுத்தல் ; அச்சமுண்டாக்குதல் .
பேதிகாரி பேதியாக்கும் மருந்து ; பேய்க் கொம்மட்டிக்கொடி .
பேதித்தல் மாறுபடுதல் ; பேதியாதல் ; கெடுதல் ; குழம்புதல் ; மனம் மாறுபடுதல் ; பகையாதல் ; பிரித்தல் ; வேற்றுமைப்படுத்தல் ; மனமலையச் செய்தல் ; மாற்றுதல் ; வெட்டுதல் .
பேதிதம் பிளத்தல் .
பேதிமருந்து கழிச்சலுண்டாக்கும் மருந்து .
பேதியாதல் மலங்கழிதல் ; வாந்திபேதியால் மலம் நீராகக் கழிதல் .
பேது அறிவின்மை ; மயக்கம் ; தடுமாற்றம் ; உன்மத்தம் ; வருத்தம் ; இரகசியம் .
பேதுறவு மயக்கம் ; துன்பம் .
பேதுறுத்தல் வருத்துதல் .
பேதுறுதல் மயங்குதல் ; பித்துப்பிடித்தல் ; வருந்துதல் ; அறியாதிருத்தல் .
பேதை அறிவிலி ; பெண் ; பாலைநிலப் பெண் ; ஐந்து வயதுமுதல் ஏழு வயதுவரையுள்ள பருவத்துப் பெண் ; வறிஞன் ; அலி ; கள் .
பேதைப்படுத்தல் மடைமையாக்குதல் .
பேதைப்பருவம் அறியாப்பருவம் .
பேதைமை உய்த்துணராமை ; மடமை .
பேந்துதல் மருளுதல் .
பேம் அச்சம் .
பேய் பிசாசம் ; காட்டுத்தன்மை ; தீமை ; வெறி .
பேய்க்கண் சுழல்விழி ; அஞ்சத்தக்க விழி .
பேய்க்கரும்பு ஒரு நாணல்வகை .
பேய்க்கனி ஒரு வாழைவகை .
பேய்க்காஞ்சி புண்பட்ட வீரனைக் கங்குல் யாமத்துப் பேய்காத்தமை கூறும் புறத்துறை .
பேய்க்காடு பிசாசு வசிக்கும் வனம் .
பேய்க்காற்று சுழல்காற்று .
பேய்க்குணம் அருவருக்கத்தக்க தீக்குணம் .
பேய்க்கூத்து பேயாட்டம் ; குழப்பம் .
பேய்க்கொம்மட்டி ஒரு கொடிவகை .
பேய்க்கோலம் பேயின் வடிவம் ; அவத்தோற்றம் .
பேய்காணுதல் பேய்பிடித்தல் .
பேய்ச்சி பெண்பேய் ; பேய்பிடித்தவள் .
பேய்ச்சுரை ஒரு சுரைவகை .
பேய்த்தண்ணீர் சாராயம் .
பேய்த்தனம் மூர்க்ககுணம் ; பைத்தியம் ; அறிவுக்குறை .
பேய்த்தும்பை காண்க : காசித்தும்பை ; பேய்மருட்டிச் செடி .
பேய்த்தும்மட்டி பேய்க்கொம்மட்டிக்கொடி .
பேய்த்தேர் கானல்நீர் .
பேய்நடம் வெறியாட்டு .
பேய்நாய் வெறிபிடித்த நாய் .
பேய்நிலை எண்வகை மணங்களுள் ஒன்றான பைசாசம் .
பேய்ப்பசலை ஒரு பசலைக்கீரைவகை .
பேய்ப்பசளை ஒரு பசலைக்கீரைவகை .
பேய்ப்பயல் கொடியன் .
பேய்ப்பிடி விடாப்பிடி ; பேய்மருட்டிச்செடி .
பேய்ப்பிள்ளை அடங்காப் பிள்ளை ; அறிவில்லாத பிள்ளை .
பேய்ப்பீர்க்கு ஒரு பீர்க்கங்கொடிவகை .
பேய்ப்புடல் ஒரு பூடுவகை .
பேய்ப்புத்தி அறிவின்மை .
பேய்ப்புல் சுணைப்புல் .
பேய்ப்பெண் அறிவில்லாத பெண் .
பேய்ப்போக்கு ஒழுங்கீனமான நடை .
பேய்பிடித்தல் பேயால் பிடிக்கப்படுகை .
பேய்மகன் கெட்டவன் ; முரடன் .
பேய்மனம் அறிவற்ற மனம் ; இழிந்த மனம் .
பேய்முகம் கோரமுகம் .
பேய்முசுட்டை ஒரு கொடிவகை .
பேய்மை பேயின் தன்மை .
பேய்வித்தை சூனியவித்தை .
பேயத்தி அத்திமரவகை .
பேயம் நீர் ; பால்போன்ற பருகும் உணவு .
பேயமன்று பானசாலை .
பேயன் பேய்பிடித்தவன் ; பைத்தியக்காரன் ; மதிகேடன் ; வாழைவகை .
பேயன்வாழை ஒரு வாழைவகை .
பேயாட்டம் பேய்க்கூத்து ; பேய்த்தன்மை ; கலக்கம் .
பேயாட்டுதல் குறிசொல்வதற்குப் பேயாவேசம் கொள்ளச் செய்தல் ; காண்க : பேயோட்டுதல் .
பேயாடுதல் பேய்பிடித்தாடுதல் .
பேயாமணக்கு ஆமணக்குவகை .
பேயார் பேயாழ்வார் ; காரைக்காலம்மையார் .
பேயுள்ளி நரிவெங்காயம் .
பேயூமத்தை மருளூமத்தை .