பேயோட்டி முதல் - பேரெழும்புதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பேயோட்டி பிசாசை ஓட்டும் மந்திரவாதி ; மரவகை .
பேயோட்டுதல் பேயை மந்திரத்தால் வெளியேற்றுதல் .
பேயோடாடி பேயுடன் ஆடுபவனான சிவபிரான் .
பேர் பெயர் ; ஆள் ; உயிரி ; புகழ் ; பெருமை ; பொலிவு .
பேர்த்தல் இடம்விட்டு நீக்குதல் ; அழித்தல் ; முறித்தல் ; மாற்றுதல் .
பேர்த்தி மக்களின் மகள் ; பாட்டி .
பேர்த்து காண்க : பெயர்த்து , பெயர்த்தும .
பேர்த்தும் காண்க : பெயர்த்து , பெயர்த்தும .
பேர்தல் சிதைதல் ; பிரிதல் ; போதல் ; அழிதல் ; பிறழ்தல் ; அசைதல் ; குறைதல் ; பின்வாங்குதல் ; நிலைமாறுதல் ; முறைபிறழ்தல் .
பேர்ந்தும் காண்க : பேர்த்தும் .
பேர்படைத்தல் காண்க : பேர்பெறுதல் .
பேர்பாதி சரிபாதி .
பேர்பெறுதல் புகழ்பெறுதல் .
பேர்மகிழ் பெருமகிழ்ச்சி .
பேர்மல்லி காண்க : கஞ்சாங்கோரை .
பேர்வழி பெயர் அட்டவணை ; கொடிவழி ; ஆள் .
பேரசம் அகன்ற சதுப்புநிலம் .
பேரடித்தல் பேரைப் பதிவுப் புத்தகத்தினின்று நீக்குதல் .
பேரடிபடுதல் எங்கும் பேசப்படுதல் .
பேரண்டம் பெரிய உலகம் ; தலையோடு ; மூளை ; நரி .
பேரணிகலம் பெரும்பதக்கம் .
பேரணை பெரிய அணைக்கட்டு ; பெருந்தடை .
பேரத்தி காண்க : கரிமுள்ளி .
பேரப்பிள்ளை மக்களின் மக்கள் .
பேரம் விற்பனை ; விலைபேசுதல் ; அருவிலை ; வடிவம் ; உடம்பு ; சிலை .
பேரம்பலம் சிதம்பரத்துள்ள பொன்னம்பலம் .
பேரரத்தை ஒரு மருந்துச் செடிவகை .
பேரருவி பெரிய அருவி .
பேரருளாளன் மிக்க கருணையுள்ளவன் ; திருமால் .
பேரருளுடைமை சிவன் எண்குணத்தொன்றாகிய பெருங்கருணையுடைமை .
பேரவ்வை பெரிய தாய் .
பேரவா பேராசை .
பேரவை பெரிய சபை ; சுயம்வரமண்டபம் .
பேரளவு பேரறிவு ; பெருஞ்சிறப்பு .
பேரறிவு பகுத்தறிவு ; மெய்யறிவு ; மூதறிவு .
பேரன் மக்கள் மகன் ; பாட்டன் .
பேராசை பெருவிருப்பம் ; மிக்க பொருளாசை .
பேராட்டி பெருமையுடையவள் .
பேராண்டு அறுபது ஆண்டுகொண்ட காலம் .
பேராண்மை அரிய வீரச்செயல் ; மிக்க வீரம் ; மானம் .
பேராந்தை ஆந்தைவகை ; காண்க : சகோரம் .
பேராமுட்டி செடிவகை .
பேராயிரம் கடவுளின் ஆயிரம் திருப்பெயர்கள் .
பேராலவட்டம் பெரிய விசிறிவகை .
பேராழம் மிக்க ஆழம் .
பேராழி பெருங்கடல் .
பேராளன் பெருமையுடைவன் ; பல பெயர்களைத் தரித்தவன் ; மிருகசீரிடம் ; உரோகிணி நாள் .
பேராளி ஒருவன் பெயரைக் கொண்டவர் ; புகழ் வாய்ந்தவர் .
பேராறு மலையில் பிறந்து கடலில் கலக்கும் ஓர் ஆறு ; கிருஷ்ணாநதி ; மேல்கடலில் கலக்கும் ஓர் ஆறு .
பேரானந்தம் வீடுபேறு ; மிகப்பெரிய இன்பம் , பரமானந்தம் .
பேரி முரசு ; பறைப்பொது ; மரவகை .
பேரிகை முரசு .
பேரிசை பெரும்புகழ் ; கடைச்சங்கத்து ஓர் இசைநூல் ; ஐவகைப்பட்ட வெண்டுறைச் செந்துறையுள் ஒன்று .
பேரிடுதல் காண்க : பெயரிடுதல் .
பேரியம் காண்க : பேரிகை .
பேரியல் பெருந்தன்மை .
பேரியற்காஞ்சி கேட்டின் இயல்புகளைப் புலவர் எடுத்துக்கூறும் துறைவகை .
பேரியாழ் நால்வகை யாழுள் இருபத்தொரு நரம்புள்ளது .
பேரிரையான் மிகுதியாக உண்போன் .
பேரில் மீது .
பேரிளம்பெண் முப்பத்திரண்டு வயதுக்கு மேல் நாற்பது வயதுவரையுள்ள பெண் ; முப்பதுக்கு மேல் ஐம்பத்தைந்து வயதுவரையுள்ள பெண் .
பேரிளமை இளமைத் தொடக்கம் ; நடுப்பருவம் .
பேரின்பம் பேரானந்தம் ; வீட்டின்பம் .
பேரின்பவாழ்வு வீட்டுவாழ்வு .
பேரீச்சு ஒரு மரவகை .
பேரீந்து ஒரு மரவகை .
பேரு கடல் ; கதிரவன் ; பொன்மலை .
பேருண்டி பேருணவு ; ஒரு நாளில் கொள்ளும் முக்கிய உணவு .
பேருதவி பெருநன்றி .
பேருந்து உந்துவண்டி .
பேருறக்கம் பெருந்தூக்கம் ; இறப்பு .
பேரூர் நகரம் ; மருதநிலத்தூர் ; மேலைச் சிதம்பரம் .
பேரெடுத்தல் புகழடைதல் ; பதிவேட்டிலிருந்து பெயரை நீக்கிவிடுதல் .
பேரெண் அளவடி யீரடியாக வரும் அம்போதரங்க உறுப்புவகை ; பெருந்தொகை .
பேரெழும்புதல் பெயர் அடிபடுதல் ; புகழ் பரவுதல் .